ஆட்சியதிகாரம் இல்லாமல் சமூகம் பாதுகாப்போடும்; மரியாதையோடும் வாழ முடியாது !

வலைப்பதிவுகள்

Author: வாழையூர் குணா

Nov19
Published: 17 Nov 2023

புதிய தமிழகம் கட்சி 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி தமிழக மக்களின் மனித உரிமை, சம உரிமை, வாழ்வுரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளையும் ,சமூக சமத்துவத்தையும், நிலைநாட்டுவதற்காக சரித்திர நாயகர்; டாக்டர் அய்யா அவர்களால் உருவாக்கப்பட்டு 26 ஆண்டுகாலம் உயிர் போடும்,துடிப்போடும் பீடு நடை போட்டு வருகிறது . ஆயிரமாயிரம் போராட்டங்களும் ,ஆயிரமாயிரம் சாதனைகளும் படைத்துள்ளோம்.

1996 – 2001, 2011 – 2016 ஆண்டுகளில்
தமிழக சட்டமன்றத்தில் குரல் அற்றவர்களின் குரலாக பத்தாண்டு காலம் தொடர்ந்து டாக்டர் அய்யா அவர்கள் ஓங்கி ஒலித்த போதுதான்.

தமிழகத்தில் புரையோடி போயிருந்த பல்வேறு விதமான சமூக சீர்கேடுகளை எதிர்த்து, ஜனநாயக ரீதியாக போராடி, குறிப்பாக பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் நிலவிய இரட்டை டம்ளர் முறை ஒழிப்பு, கோவில் நுழைவு மறுப்பு தகர்ப்பு ,தனி பாதைகள், குடிநீர் மறுப்பு ,வாக்களிக்கும் முறை மறுப்பு, இடுகாடு பாதை மறுப்பு, விவசாய விலை பொருள்களை களவாடியதை தடுத்தது ,வழிப்பறி கொள்ளை தடுப்பு , ஆடு மாடு திருடு ஒழிப்பு, ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது .

தமிழகத்தில் பன்னெடும் காலமாக நிலவி வந்த சாராய காய்ச்சுதல் , விற்றல், குடித்தல் போன்ற தீய பழக்கவழக்கங்களை ஏழை எளிய மக்கள் கைவிட வேண்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளை கிராமம் தோறும் நடத்தியதன் விளைவாக குறிப்பாக தென் தமிழகத்தில் கள்ளச்சாராயம் அறவே! ஒழிக்கப்பட்டது.

புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து தொண்டர்களிடத்தில், மக்களிடத்திலும் மது, புகை போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வைத்து அதனை ஒரு மக்கள் இயக்கமாக மது ,போதை உள்ளிட்ட சமூக தீய பழக்க வழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கனிமவளக் கொள்ளைகள் தடுப்பு, மாஞ்சோலை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள தோட்ட தொழிலாளர் உரிமை மீட்பு, வெள்ளை அறிக்கை போராட்டம் அரசு வேலைவாய்ப்பு உறுதி செய்தது, கண்டதேவி தேர் இழுக்கும் உரிமை மீட்பு, ஏழு தமிழர் விடுதலை என பொதுவாழ்வில் தூய்மை சமுதாயம் அமைந்திட சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் புதிய தமிழகம் கட்சி வலுவாக குரல் எழுப்பி வெற்றி கண்டுள்ளது .

புதிய தமிழகம் கட்சி அண்மைக்காலமாக சமூக நல்லிணக்கம் மலர வேண்டும் எனும் உயரிய லட்சியத்தோடு ஆங்காங்கே எழும் சிறுசிறு பிரச்சனைகளை சுமூகமாக பேசி தீர்த்து சமுதாய ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிக்காமல் புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் சாதுரியமாக கையாள வேண்டும் எனும் தீர்மானத்தை
கடந்த டிசம்பர் 15, 2021 புதிய தமிழகம் கட்சி 25ஆம் ஆண்டு வெள்ளி விழா தொடக்க மற்றும் உலக இந்துக்கள் எழுச்சி மாநாடு மேலும் டிசம்பர் 15 2022 வெள்ளி விழா நிறைவு மாநாட்டிலும் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் போர் பிரகடன அறிவிப்பிற்கு பிறகு
புதிய தமிழகம் கட்சியினர்கள் சமூகப் பிரச்சனையை மிகவும் மென்மையாக கையாண்டு வருகிறார்கள் .. ஏனெனில்

சமூக, அரசியல், பொருளாதாரத்தில் மேலோங்க வேண்டும் என்ற புதிய சிந்தனையோடு பயணிக்கின்ற புதிய தமிழகம் கட்சியை தீண்டிப் பார்க்கும் வகையில் சில சமூக விரோத கும்பல்கள் அரசியல் உள்நோக்கத்துடன் அண்மை காலங்களாக தென் தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர்களை மட்டும் குறி வைத்து தாக்கப்பட்டு வருவது சமூக நல்லிணக்கத்திற்கு பேராபத்தாகும்.

திமுக அரசு தீய எண்ணத்தோடு திட்டமிட்டு சாதி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கின்றோம். திமுகவின் ஆட்சியில் காவல்துறையின் கையாலாகாத தனத்தை கண்டித்தும் , தொடர்ந்து மண்ணின் பூர்வ குடிமக்கள் ஆன தேவேந்திரகுல வேளாளர்களை குறிவைத்தும் மற்றும் பட்டியல் பிரிவினர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வரும் பேராபத்தான போக்கினை தடுத்து நிறுத்த வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு புதிய தமிழகம் கட்சிக்கு மட்டுமே உண்டு .

ஆகவே ! மனித உரிமை காப்பு! வன்கொடுமை தடுப்பு !
பேரணியில் பங்கேற்க அழைக்கிறார்.
தென் தமிழகத்தின் முதல்வர்;
மனித உரிமை போராளி தலைவர்; டாக்டர் அய்யா அவர்கள்.

தமிழினமே!
அலை கடலென
திரண்டு வாரீர்!
மனித உரிமையை மீட்டு எடுப்போம்! வாழ்வுரிமையை காப்போம் !
புதிய தமிழகம் படைப்போம் !
வாழையூர் குணா