எர்ணாகுளம் கிறிஸ்தவ தேவாலயத்தில் குண்டு வெடிப்பு.! மத்திய, மாநில அரசுகள் இணைந்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.!

அறிக்கைகள்
s2 405 Views
  • Dr Krishnasamy
  • Dr Krishnasamy
Published: 29 Oct 2023

Loading

கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே களமஞ்சேரியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் மரணம் எய்தியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துவ தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் ஆயிரக்கணக்கில் திரளுவார்கள் என்பது அறிந்து, திட்டமிட்டே இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கண்டறிந்து கடும் தண்டனைக்கு ஆளாக்க வேண்டும்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற இந்த நேரத்தில் இது போன்ற சம்பவங்கள் வீண் பதற்றத்தையே உருவாக்கும். அண்மையில் தமிழகத்தில் இந்திய ஜனாதிபதி முர்மு அவர்கள் சென்னை வந்த தினத்தன்று இராஜ்பவன் முன்பாக வீசப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவமானாலும்; இன்று கேரளா கிறிஸ்துவ தேவாலயத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவமானாலும் எளிதாகக் கடந்து போகாமல், ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்வை பாதிக்கக்கூடிய சம்பவங்கள் என்ற அடிப்படையில், இவற்றை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறியும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் இணைந்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி, MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
29.10.2023