மக்களாட்சிக்குள் ஒளிந்து கொண்டு மன்னர் ஆட்சியை நிலை நிறுத்தும் கூட்டத்தை அப்புறப்படுத்துவோம் !தமிழினத்தை காப்போம் !

வலைப்பதிவுகள்

Author: வாழையூர் குணா

Guna4
Published: 11 Oct 2023

அரசியல் அதிகாரம் என்பது யாராவது நம் கையில் எளிமையாக கொண்டு வந்து கொடுப்பது அல்ல. சாதி வன்மமும் , அதிகார திமிரு , என அரை நூற்றாண்டு காலம் அவர்களின் புத்தியில் ஊறி திளைத்துள்ளது . அதிகாரத்தை தன் குடும்பத்தை விட்டு வேற எவருக்கும் சென்று விடக்கூடாது என்பதில் தீர்க்கமாய் இருக்கின்ற திருட்டுக் கூட்டத்திடமிருந்து வாக்கு என்னும் ஆயுதத்தால் பறிக்கப்பட வேண்டிய ஒரு ஒன்று;

அப்படிப்பட்ட வாக்கு ஆயுதத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றால் போர்க்களத்தில் நாம் வைத்திருக்கின்ற ஆயுதத்தால் எதிரியை வீழ்த்தி போர்க்களத்தில் வெற்றி பெற்று மக்களை காப்பது போன்ற ஆயுதம் தான் வாக்கு எனும் ஆயுதம் .

இந்த ஆயுதத்தை முறையாகப் பயன்படுத்தாமல் யார் நமது எதிரியோ அந்த எதிரிக்கு வாக்கை செலுத்துவது பிறகு அந்த எதிரியை எதிரி எதிரி என்று கூச்சல் இடுவது இது அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தின் செயல்பாடாக இனி இருக்கக் கூடாது.

ஆக நம் வாக்கு எனும் ஆயுதத்தை சரியாக கையாளாகாததனத்தால் தான் யார் யாரோ நம் மீது ஆதிக்கம் செலுத்தி அடிமைப்படுத்தி அவர்கள் தங்களை மேலாண்மையானவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் நம் வீட்டிற்கு கதவு வைத்து பூட்டு போட்டு பூட்டி பத்திரமாக வைக்காமல் வீடு நம் வீடாக இருக்கும் ஆனால் வருவோர் போவோர் எல்லாம் தங்கி இருக்கும் மடம் போல ஆகிவிடுகிறது .

மதுவால் மதி மயக்கி, காசு பணத்தால் வாக்குகளை விலைக்கு வாங்கி சினிமா மாயை என பல்வேறு கபட நாடகங்களால் அரசியல் பகடைக்காய்களாக தான்தோன்றித்தனமான தமிழக வாக்காளர்கள் மாறிவிடுகிறார்கள்.

சிறிய சமூகமாய் இருக்கின்ற ஒரு கூட்டம் பெரும்பான்மை சமூகத்தை அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறது. அந்த பெரும்பான்மை சமூகம் என்பது சாதியாக ஒற்றுமையாக இல்லை. அரசியலாக ஒரு தலைமையின் கீழ் இல்லை. மாறாக எடுப்பார் கைப்பிள்ளை போல யார் வேண்டுமானாலும் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்துகின்ற ஒரு தற்குறி கூட்டத்தோடு வசித்து வருகிறோம் .

எப்படி நாம் ஆட்சி அதிகாரத்தை பெற முடியும்? ஆக வெறும் ஏட்டுச் சுரக்காய் கூட்டுக்கு உதவாது. அரசியல் அதிகாரம் என்று கூச்சல் இடுவதனால் அதிகாரம் வந்து விடாது . அதற்கான திட்டமிடல் அதற்கான செயல் திட்டம் வகுக்காமல் அதிகாரத்தை நுகர முடியாது .

அதிகாரம் என்பது மிகப் பழம் வாய்ந்த ஒரு கட்டமைப்பாகும். அது பணத்தாளும், இனத்தாலும் ,மொழியாலும், மதத்தாலும், கட்டி அமைக்கப்பட்ட ஒரு சுவர். அந்த சுவரை தகர்த்தெறிவது என்பது எளிதானது அல்ல முதலில் ஒற்றுமை; அந்த ஒற்றுமையை வாயிலாக ஓர் தலைமை ;அந்த தலைமை வாயிலாக ஒரு அரசியல் ;அதன் ஊடான வாக்கு செலுத்துவதில் தெளிந்த பார்வை தொலைநோக்குப் பார்வை வேண்டும் . இதனால் தான் மக்கள் விரோத சக்தியை வீழ்த்த முடியும் .

மன்னர் ஆட்சிகள் வீழ்த்தப்பட்டு மக்களாட்சிகள் மலர்ந்த நாட்டில் மக்களாட்சிக்குள்ளையே மன்னராட்சி புகுந்து கொண்டு உள்ளது. ஆம் தாத்தா முதல்வர் ,தந்தை முதல்வர், தான் அமைச்சர் என்று மக்களாட்சி முறையில் மன்னராட்சி முறை நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் சீர்தூக்கி பார்க்க வேண்டியவர்கள் மது மயக்கத்தில், சீரியல் மயக்கத்தில், பண மயக்கத்தில் உழண்டு கொண்டு கொண்டிருக்கின்றார்கள். இது நியாயமா ? விழித்துக் கொள் தமிழா !

தமிழர்களை தட்டி எழுப்பி மாநிலத்தின் நலன் , மொழி, இனம் போன்றவற்றை கட்டி காக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் தமிழக வாக்காளர்களாகிய நமக்கு பெரும் பங்கு இருக்கிறது .என்பதை ஒவ்வொரு தமிழர்களும் உணர வேண்டிய காலகட்டாயம் இது .

ஒரு தலைமையின் கீழ்; ஒரு கொடியின் கீழ் ;ஒரு கட்சியின் கீழ்; அணி திரண்டால் தான் மக்களாட்சிக்குள் ஒளிந்திருக்கின்ற மன்னர் ஆட்சியை வீழ்த்த முடியும். ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கான ஆட்சி அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் அணி திரள்வோம் !
ஆட்சி அதிகாரத்தை வென்றெடுப்போம் !

வாழையூர் குணா