புதிய தமிழகம் கட்சியின் பொறுப்பாளர்களுக்கு அறைகூவல்! ஆட்சியதிகாரமே நமக்கான செங்கோல்!

டாக்டர் ஐயா அவர்கள் வருகைக்கு முன் தென் தமிழகத்தில் மண்ணின் பூர்வ குடி மக்கள் ஆன தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் ஏழை எளிய விளிம்பு நிலை மக்கள் பரிபூரண சுதந்திரத்தோடு வாழ முடியவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்து தந்துள்ள பேச்சுரிமை , எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை ,சொத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளை கூட அனுபவிக்க முடியாத துர்பாக்கிய நிலையில்தான் வாய் இருந்தும் ஊமைகளாக, கண்ணிருந்தும் குருடர்களாக , கை, கால் இருந்தும் முடவர்களாக வாழ்ந்து வந்தார்கள்.
உதாரணத்திற்கு தேர்தலில் தங்களது வாக்குரிமையை கூட செலுத்த முடியாமல் இருகொல்லி எறும்பை போல தவித்தார்கள். வலுவிருக்கின்றவர்கள் அவர்களுடைய வாக்குகளை கள்ளத்தனமாக போட்டுவிட்டு அவர்களுக்கு வாக்கு இல்லை என்று திருப்பி அனுப்பிய சம்பவங்கள் எல்லாம் நடந்தேறி உள்ளது.
மண்ணின் பூர்வ குடி மக்கள் ஆன தேவேந்திரகுல வேளாளர்கள் வயலில் விளைவித்த பயிர்களான நெல், கரும்பு, வாழை, கம்பு,சோளம் போன்ற பயிர்கள் மீது சில சாதிவெறி கும்பல்கள் அவர்கள் வயலில் ஆடு மாடுகளை விட்டு அழித்த கொடுமை உண்டு . அல்லது சமூகவிரோத கும்பல் அவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் பட்டு கஷ்டப்பட்டு பயிர் செய்த பயிர்களை அறுவடை செய்து அவர்கள் செல்வ செழிப்பாக வாழ்ந்தது உண்டு.
அல்லது அவர்கள் ஆடு, மாடுகளை களவாடி செல்வதும் உண்டு. கோவில் நுழைவு மறுப்பு,தேர் இழுக்க மறுப்பு ,செயற்கையான ஒரு அடக்குமுறையை ஏவி குளிர்காய்ந்து கொண்டிருந்த சண்டியர் கூட்டங்களை தவிடு பொடியாக்கி அவர்களின் கொட்டத்தை அடக்கி ஒடுக்கி சிவப்பு பச்சை கொடியின் கீழ் சிதறி கிடந்த மண்ணின் பூர்வ குடி மக்களை அணி திரட்டி அரசியல் படுத்தி அரசியல் சக்தியாக வெகுண்டு எழ வைத்த பெருமைமிகு வரலாறு டாக்டர் ஐயா அவர்களையே சாரும்.
1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரம் பெற்றிருந்தாலும். தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தில் ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்களின் சுதந்திரம் என்பது டாக்டர் ஐயா அவர்களின் வருகைக்குப் பின்பே அது நடைமுறைப்படுத்தப்பட்டது என்றால் அது மிகையாகாது .
தமிழகத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக தலைவிரித்தாடிய தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக திராவிடம் பேசியவர்கள் பொதுவுடமை பேசியவர்கள் நாத்திகம் பேசியவர்கள் பகுத்தறிவு பேசியவர்கள் எவருமே கொடியங்குளம் கொடுமைக்காக களத்திற்கு வந்து போராடவில்லை.
40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலவி வந்த இரட்டைக் குவளை முறைக்கு எதிராக எவரும் சட்டமன்றத்தில் குரல் எழுப்பவில்லை அதுவரையிலும் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டிக் கொண்டுதான் இருந்தார்கள்.
கண்டதேவி தேர் இழுக்கும் உரிமையை நிலைநாட்ட நாத்திகம் பேசியவர்கள் கூட எவரும் போராட்ட களத்திற்கு வரவில்லை .
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மண்ணுரிமை வாழ்வுரிமைக்காக பொதுவுடமை பேசியவர்களும், சமூகநீதி பேசியவர்களும், தொழிலாளர்களின் துயரத்தை துடைத்தெறிவதற்கு எவர் கரமும் முன்வரவில்லை.
அரசு காலி பின்னடைவு பணியிடங்களில் பட்டியல் பிரிவினர்களை பணி அமர்த்தி அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவதற்கு மனம் இல்லாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் திராவிடத்தின் முகத்திரையை சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வாயிலாக தோலுரித்தவர். அந்தப் போராட்டத்தின் வாயிலாகவே பட்டியல் பிரிவினர்களும் சீர் மரபினர்களும் அரசு வேலை உறுதி செய்யப்பட்டது.
இலங்கைத் தமிழர்களை கொன்று குவிக்க இந்திய அரசு போர் தளவாடங்களை அனுப்பிய கப்பலை திரும்ப வரவழைத்த சரித்திர சாதனை படைத்தவர்.
ஏழு தமிழர்களின் தூக்கு கயிற்றை அறுத்து எறிந்து போராடிய போது தமிழ் தேசிய வியாபாரிகள் எவரும் அவர்களைக் காப்பாற்ற முன் வரவில்லை.
தனி நபராக சட்டமன்றத்தில் குரல் எழுப்பி அந்த தூக்கு கயிற்றை அறுத்தெறிந்து அவர்களை சுவாசிக்க வைத்த நேசத் தலைவர்.
ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கொடுக்காமல் புறக்கணித்த திராவிட தீய சக்திகளை வீழ்த்த வெகுண்டு எழுந்து அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்கும் யுத்தத்தில் ஓட்டப்பிடாரத்தில் வெற்றி பெற்று குரல் அற்றவர்களின் குரலாக முதன் முறையாக ஒலித்தவர்.
தமிழ் சாதிகளான தேவேந்திரகுல வேளாளர்கள், நாடார்கள், யாதவர்கள், தேவர்கள், இஸ்லாமியர்கள், நெசவாளர்கள், கிறிஸ்தவர்கள் ,மீனவர்கள்,பட்டாசு தொழிலாளர்கள்,அமைப்புசாரா தொழிலாளர்கள் என அனைத்து சமுதாயத்திற்கும் குரல் கொடுத்தவர்.
25 ஆண்டு காலமாக அரசியல் கட்சியாகவும் , 25 ஆண்டு காலமாக சமூக வாழ்விலும், பொது வாழ்விலும் போராட்டங்களால் மட்டுமே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தியவர்.
டாக்டர் ஐயா அவர்களுடைய அளப்பரிய தியாகத்தையும், உயரிய லட்சிய சிந்தனையையும் ,மனித நேய மாண்பையும், உணர்ந்திடாத தற்குறிகள் தேர்தலை மட்டுமே மையப்படுத்தி ஒரு கூட்டம் , திருட்டு திராவிட கூட்டத்திடம் பணம் பொறுக்கிக் கொண்டு தேர்தல் நெருங்க நெருங்க எதையாவது சொல்லி புலம்புவது .
இப்படி எத்தனை ஆண்டுகாலம் தான் புலம்பி கொண்டே அலைவது ?
உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள் இல்லையென்றால் மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.
இளைஞர்களும், தமிழ் சமுதாய உறவுகளும் புதிய தமிழகம் கட்சியின் நீண்ட நெடிய வரலாற்று சாதனைகளை திரும்பிப் பாருங்கள்.
தேர்தலை மட்டுமே மையப்படுத்துகின்ற கட்சிகளுக்கு! புதிய தமிழகம் கட்சியின் சாதனைகளைப் புலப்படுத்துங்கள்!
தலைவர் டாக்டர் ஐயா அவர்களுக்கு எதிராக பேசுபவர்களை புதிய தமிழகம் கட்சியின் சாதனைகளைச் சொல்லித் திருத்துங்கள்.!
அவர்களுக்கு எதிராக ஒரு உண்மை கூட்டத்தை திரட்டுங்கள்!
வாழையூர் குணா






