மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத் தீர்மானங்கள்
தேதி: 20 டிசம்பர் 2008
இடம்: சென்னை - தலைமை அலுவலகம்
டிசம்பர் 20, சென்னையில் புதிய தமிழகம் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் தீர்மானங்கள் – மும்பை பயங்கரவாத தாக்குதல் – புதிய சட்டம் போல சாதிய வன்முறைக்கு எதிரான கொடும் சாதிய பயங்கரவாத சட்டம் கொண்டுவர வேண்டும் – மத்திய அரசின் பின்னடைவுப். பணியிடங்களை நிரப்ப கோரிக்கை – பணநாயக இடைத்தேர்தல் திருமங்கலத்தில் புதிய தமிழகம் போட்டியில்லை – கல்வி வேலை வாய்ப்புக்கு எதிராக அடித்தள மக்களை நிரந்தர அடிமையாக்கும் டாஸ்மார்க்கை எதிர்த்து ஜனவரி06 மதுக்கடை மறியல் – ஈகோட்டைப்பட்டி துப்பாக்கிச் சூடு மதுரை சரக டி.ஐ.ஜி மாற்றப்பட வேண்டும் – நெல்லை மாவட்டம் -புதுக்குட்டி, ராஜசிங், வனராஜ் ஆகிய எளிய மக்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் – கண்டனம்.
