ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த அனைவருக்கும் புதிய தமிழகம் கட்சி தனது புகழஞ்சலியை செலுத்துகிறது

அறிக்கைகள்
s2 363 Views
  • Bibin Rhawat

    தளபதி பிபின் ராவத்

  • Bibin Rhawat
Published: 09 Dec 2021

Loading

இந்திய தேசம் அண்டை நாடுகளுடன் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் முப்படைகளின் தலைவராக பொறுப்பேற்று, திறம்பட செயல்பட்ட பிபின் ராவத் அவர்களுடைய சற்றும் எதிர்பாராத மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய இழப்பு ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கான மிகப்பெரிய இழப்பாகும்.

அவர், அவரது துணைவியார் உட்பட ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த அனைவருக்கும் புதிய தமிழகம் கட்சி தனது புகழஞ்சலியை செலுத்துகிறது.

தளபதி பிபின் ராவத் அவர்களின் ஹெலிகாப்டர் விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதன் முடிவுகளை நாட்டு மக்களுக்கு மத்திய அரசும், இந்திய ராணுவமும், இந்திய விமானப் படையும் தெளிவுபடுத்த வேண்டும்.

டாக்டர்.க. கிருஷ்ணசாமி, MD
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
08.12.2021