வெற்றியில் தொடக்கம்! வெற்றிகள் தொடரட்டும்!!
344 Views
![]()
வெற்றியில் தொடக்கம்!
வெற்றிகள் தொடரட்டும்!!
போட்டியின்றி வெற்றி பெற்ற புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள்!
நடைபெறவிருக்கும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதில்,
விருதுநகர் மாவட்டம், வ.புதுப்பட்டி பேரூராட்சியின் 2-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட புதிய தமிழகம் வேட்பாளர் திருமதி.சித்ரா சந்திரமூர்த்தி மற்றும்
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியின் 12-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் திருமதி.ரேவதி முருகன் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல, இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு வார்டுகளில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் கண் துஞ்சாது களப்பணியாற்றி வெற்றி வாகை சூடிட வாழ்த்துகிறேன். புதிய தமிழகம் கட்சியினர் அனைவரும் அவரவர் பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஒற்றுமை உணர்வோடு தேர்தல் பணியாற்றி வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
– டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
08.02.2022.






