மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு புதிய தமிழகம் கட்சி வேண்டுகோள்!

அறிக்கைகள்
s2 54 Views
  • Dr K Krishnasamy
  • Dr K Krishnasamy
Published: 19 Dec 2023

Loading

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு புதிய தமிழகம் கட்சி வேண்டுகோள்!
தென்மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தாராளமாக உதவிடுங்கள்!!

அனைவருக்கும் வணக்கம்!

இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ள நிவாரண பணிகளிலிருந்து விடுபடுவதற்கு முன்பாகவே இப்பொழுது அதைவிட பன்மடங்கு கடும் மழையின் காரணமாக தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளன. தூத்துக்குடியும் திருநெல்வேலியும் முற்றாகத் துண்டிக்கப்பட்டுவிட்டன. பல கிராமங்களுக்கு உள்ளே செல்லவே முடியாத நிலை. கடந்த 3 நாட்களாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவு கூடக் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை உடனடியாகச் செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்து, புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மாவட்ட ரீதியாக நிவாரண குழுக்கள் அமைத்துப் பணியாற்றி வருகிறோம். அவர்கள் வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களை மீட்பதிலும், உணவுப்பொருட்கள் வழங்குவதிலும் இரவுபகல் பாராது பாடுபட்டு வருகிறார்கள். அவர்களை மீட்டு வேறு இடங்களில் தங்க வைத்தாலும் அப்பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு சில நாட்கள் பிடிக்கும். இது மிகவும் சவாலான விஷயம். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உதவுவது மிகவும் கடினமானது. எனவே மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களாகிய தாங்கள், தங்களது பங்களிப்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குழு நிர்வாகிகளிடம் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களாகவோ, போர்வை, வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களாகவோ அல்லது பணமாகவோ வழங்கிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த மனிதநேயமிக்க நிவாரணப் பணிகளுக்கு தங்களால் ஆன அனைத்து பங்களிப்புகளையும் கீழ்கண்ட நிர்வாகிகளுக்கு தொடர்பு கொண்டு வழங்கிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்பு எண்கள்:
தூத்துக்குடி மாவட்ட நிவாரணக் குழு:
1. க.இராஜசேகரன் – 9865141827
2. செ.குபேந்திரன் – 8248591298
3.வே.க.அய்யர் – 9677399222, 9380622555
4.மு.செல்லதுரை – 8870380251
5. தூத்துக்குடி இரமேஷ் – 9488466795
6. வழக்கறிஞர் இரமேஷ் – 9789404384
திருநெல்வேலி மாவட்ட நிவாரணக் குழு:
1.சு.செல்லப்பா – 9788249055
2.சா.கதிரேசன் – 9443465962
3.த.ஜான் கிறிஸ்டோபர் – 9840017962, 8838991419
4.மு.இராமர் – 9788580375
5.மூ.சிவக்குமார் – 8903790377, 9655978077
6.பில்லா பாண்டியன் – 8248890641
7.தேனி சிவக்குமார் – 9976017484

டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
19.12.2023.