பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!
3889 Views
![]()
நன்றி!
ஏப்ரல் 3ஆம் தேதி, எனது பிறந்த நாளன்று நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும், குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்-அப் செய்திகள் மூலமாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக இயக்கங்களின் முன்னோடிகள், புதிய தமிழகம் கட்சியினுடைய நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அதே போன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதியோர்களுக்கு இலவச வேட்டி – சேலை, குழந்தைகளுக்கு ஆடைகள், மாணவ-மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள், ஆசிரமங்களில் ஆதரவற்றோருக்கு விருந்து, பேருந்துப் பயணிகளுக்கு இனிப்புகள் உட்பட எண்ணற்ற இனிப்புமிகு செயல்களில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாழ்வில் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றினாலும், வெளியுலக வெளிச்சத்திற்கு அதிகமாக 1995ஆம் ஆண்டு முதலே பெரும்பாலும் காட்சி அளிக்கிறேன். இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும், மற்ற காலகட்டங்களிலும் என்னுடைய பிறந்தநாளை கொண்டாடவோ, அதை விழா எடுக்கவோ வேண்டிக் கொண்டதில்லை. சுற்று பிரயாண நிகழ்ச்சிகளுக்குச் செல்லுகின்றபொழுது கூட, இளைஞர்கள் ஆர்வத்துடன் பிறந்த நாளைப் பற்றிக் கேட்பதுண்டு. ஆனாலும், அதைச் சொல்லாமல் தவிர்த்தே வந்துள்ளேன்.
இப்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக முகநூல் மற்றும் இணையங்களிலும், தேர்தல் ஆவணங்களிலும் கிடைக்கப்பெற்ற தகவல்களிலிருந்து எனது பிறந்த தேதியை இளைஞர்கள் நினைவில் வைத்து எந்த வருடமும் இல்லாத அளவிற்கு, இந்த வருடம் ஆங்காங்கே மக்களோடு மக்களாகக் கலந்து அரும்பெரும் தொண்டுகளைச் செய்திருக்கிறார்கள். தன்னெழுச்சியாக நமது பிறந்தநாள் நிகழ்ச்சியைச் சிறப்புடன் கொண்டாடி அகமகிழ்ந்த புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்; எனது பிறந்தநாள் செய்தியை டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் பார்த்து அறிந்து, அலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் மீண்டும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
– டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி
04.04.2022






