மதம் பற்றி அடிப்படை தெரியாமல் திரைப்படம் எடுக்கிறார்கள்.!

அறிக்கைகள்
s2 426 Views
  • Dr Krishnasamy

    Dr Krishnasamy

  • Dr Krishnasamy
Published: 10 Oct 2022

Loading

மதம் பற்றி அடிப்படை தெரியாமல் திரைப்படம் எடுக்கிறார்கள்.!

மதுரையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

தமிழ் திரைப்படங்களில் ஆபாசம், அரிவாள் கலாசாரத்தை முழுக்க சொல்லிவிட்டு, கடைசி ஒரு நிமிடம் பாசிட்டிவ் கருத்துக் சொல்லவதை ஏற்க முடியாது. திரைப்படம் அரசியலை கைப்பற்ற நினைக்கிறது. விருமாண்டி, கொம்பன் போன்ற வன்முறை படங்களை நாங்கள் எதிர்த்தபோது, கருத்துச் சுதந்திரத்தில் தலையிட முடியாது என்றனர்.

தற்போது, திரைப்படங்கள் மூலம் அரசியல் பேசுகின்றனர். இது தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். திரைத்துறையில் முதலீடு செய்வோர் சம்பாதிக்கலாம். அதற்காக தமிழக இளைஞர்களை சீரழிக்கக்கூடாது. பெரியார் மது, சினிமாவை ஒழிக்கவேண்டும் என்றார். ஆனாலும், இன்றைக்கு நடிகர்களால் தமிழகம் சீரழிகிறது. சினிமாவால் இளைஞர்கள் மது, போதை மாத்திரைக்கு அடிமையாகின்றனர்.

பஞ்ச பூதங்களை வழிப்படும் முறை இந்தியாவில் உள்ளது. எந்த வழிபாடும் நேரடியாக நடைமுறைக்கு வரவில்லை. சூழலுக்கு ஏற்ப மாறியிருக்கலாம். சிவபெருமானை வழிப்படுவர் இந்துவாக தானே இருக்க முடியும். மதம் பற்றி அடிப்படை தெரியாமல் திரைப்படம் எடுக்கின்றனர்.

பாரம்பரியம், கலாசாரம், பண்பாடுகளை தெரிந்து கொண்டு பொதுத் தளத்திற்கு வரவேண்டும். இல்லையெனில் அந்நிய நாட்டு ஏஜன்டுகளாக செயல்படுகின்றனர் என, பொருளாகிவிடும். நமது கலை, கலாசாரம், பண்பாடுகளை திரைப்படங்கள் சீரழிக்கும் விதமாக செயல்படுகின்றன. இதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். என்று அவர் கூறினார்.