பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்தி வேகமெடுக்கும் பரப்புரைகள்.! பாகிஸ்தானின் தளமானது எப்படி? சமூக வலைதளங்கள் இந்தியாவிற்கு எதிரான ’நவீன ஏவுகணைகளா’? உஷார் ஆகுமா இந்திய உளவுத்துறை??

அறிக்கைகள்
s2 1 Views
Campaigns projecting Vijay as a Prime Ministerial candidate are gaining momentum! What is the nature of the Pakistani base? Are social media platforms 'modern missiles' aimed at India? Will Indian intelligence agencies be on alert?
Published: 31 Aug 2026

Loading

பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்தி வேகமெடுக்கும் பரப்புரைகள்.!
பாகிஸ்தானின் தளமானது எப்படி?
சமூக வலைதளங்கள் இந்தியாவிற்கு எதிரான ’நவீன ஏவுகணைகளா’?
உஷார் ஆகுமா இந்திய உளவுத்துறை??
…………………………………

எந்தவொரு கட்சிக் கட்டமைப்புகளுமின்றி, சமூக வலைதளப் பிரச்சாரத்தின் வாயிலாக மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்த சக்திகள், தற்போது விஜய் அவர்களை இந்தியப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தித் தீவிரப் பிரச்சாரம் செய்துவருவது பல கேள்விகளை எழுப்புகிறது.
ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகியும், தாங்கள் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் தத்தளிக்கும் தவெக, அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி சாதித்து விட்டதைப் போல, இந்தியா முழுவதும் பல கோடிகளைச் செலவழித்துப் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. அடுத்த பிரதமர் வேட்பாளர்களாக மோடி மற்றும் ராகுல் ஆகியோருடன் விஜய் அவர்களையும் முன்னிறுத்தி, பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் எண்ணற்ற சமூக வலைதளப் பக்கங்கள் கடந்த சில நாட்களாகச் செயல்பட்டு வருகின்றன.
மதம், அரசியல், மொழி சார்ந்து சுயமாகச் செயல்பட்டு வந்த முகநூல் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram), எக்ஸ் (X) உள்ளிட்ட சமூக வலைதளக் பக்கங்கள் சில நாட்களில் எவ்வாறு விஜய் ’புகழ் பாடிகளாக’ மாறின? அந்தச் சமூக வலைதளப் பக்கங்களுக்குக் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தவர்கள் யார்?
மேலும், விஜய் புகழ் பாடும் சமூக வலைதளக் கணக்குகள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒரு வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணை மட்டுமே மூலமாகக் கொண்டு செயல்படுவது எப்படி? பாகிஸ்தானிலிலிருந்து இயங்கும் சமூக வலைதள கணக்குகளுக்கு விஜய் மீது இவ்வளவு அக்கறை ஏன்? சட்டமன்றத் தேர்தலில் விஜய்யை முன்னிறுத்திய ரூட் மாஃபியா மற்றும் லாட்டரி குடும்பத்திற்கும், தற்போது நடைபெறும் பரப்புரைகளுக்கும் என்னென்ன தொடர்பு?
இதுவரை இந்தியாவை ஆயுதங்களால் வெல்ல முடியாது என்று எண்ணிய அந்நிய நாட்டு மதவாத சக்திகள், இந்தியாவை கைப்பற்ற மேற்கொள்ளும் முயற்சியா இது? இவ்வளவு விஷயங்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலிலும், இந்தியாவின் IB, RAW உள்ளிட்ட உளவுத்துறை அமைப்புகள் அமைதி காப்பது ஏன்?
சமூக வலைதளங்கள் இந்தியாவிற்கு எதிரான நவீன ஏவுகணைகளாகின்றனவா? இந்திய அரசு உடனடியாக விழித்துக் கொள்ளுமா?

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
31.08.2026