தென் தமிழகத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள்.! உண்மை குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.!
செய்திகள்
157 Views

Published:
28 Dec 2025
![]()
தென் தமிழகத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள்.!
உண்மை குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.!
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள காக்காநல்லூர் (ராமச்சந்திராபுரம்) கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் (47) என்பவர் நேற்று (27.12.2025) மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. இவ்வன்முறை சம்பவங்களை புதிய தமிழகம் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
காவல்துறை இக்கொலையில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, அவர்களுக்கு உரிய தண்டனைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
– தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி.
28.12.2025






