டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்களின் அறிக்கை – பத்திரிகை செய்தி.!

செய்திகள்
s2 158 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 27 Sep 2024

Loading

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்களின் அறிக்கை – பத்திரிகை செய்தி.!
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் துயர் நீக்கவும்!

தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் சமுகங்களுக்கு உள் இட ஒதுக்கீட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்பை களையவும் !

விரைவில் சென்னையில் பேரணி!

செப்டம்பர் 28, 29 -ல் முன்னேற்பாடு ஒன்றிய கூட்டங்களை சிறப்பாக நடத்திடுக!

புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளுக்கு தலைவர் டாக்டர்.க கிருஷ்ணசாமி அவர்கள் வேண்டுகோள்!
589 குடும்பங்கள்; ஏறக்குறைய 2500-க்கும் மேற்பட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயர் நீங்கிட புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கடந்த நான்கு மாதத்தில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாஞ்சோலை மக்களுக்கான வாழ்வுரிமையை 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் படியே தீர்வு காண வேண்டுமென வழக்கும் தொடுத்து, அதில் நானே நேரில் ஆஜராகி வாதாடியும் வருகிறேன். அவ்வழக்கு தற்போது வன சிறப்பு நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான நீதியை வழங்காமல் பி.பி.டி.சி நிர்வாகமும், திருநெல்வேலி மாவட்ட, அரசு துறை அதிகாரிகளும் ஒன்று கூடி அம்மக்களை வெளியேற்றிட துடிக்கும் நோக்கத்தில் அவர்களுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்காமல், அவர்கள் மீது ஏவப்படும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தவும், தேசிய மனித உரிமை ஆணைய தலைவி அவர்களிடம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நான் நேரடியாக அளித்த மனுவை தொடர்ந்து, டிஎஸ்பி ரவி சிங் மற்றும் இன்ஸ்பெக்டர் திருபாதி ஆகிய இரு நபர் விசாரணை குழு டெல்லியில் இருந்து அனுப்பப்பட்டு செப்டம்பர் 18, 19, 20, 21 ஆகிய 4 நாட்கள் மாஞ்சோலை மற்றும் மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மாஞ்சோலை தொழிலாளர்கள், பிபிடிசி நிர்வாகம், மற்றும் அரசு அதிகாரிகளிடத்தில் விசாரணையை மேற்கொண்டு டெல்லி திரும்பியுள்ளது.

இவ்வளவு நிகழ்வு நடந்த பின்னரும் மாஞ்சோலையிலேயே அம்மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநாட்ட மாநில அரசு ஒரு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பை இதுவரை மேற்கொள்ளவில்லை.

ஆறு தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் அம்மக்கள் அங்கேயே வாழ்வதற்கும், வாழ்வுரிமையை நிலை நாட்டுவதற்கும் உண்டான உரிமையை மட்டுமே கோருகிறார்கள்.

எனவே மத்திய, மாநில அரசுகள் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் விரைவில் சென்னையில் ஒரு ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்கும் பொருட்டு அதற்கான ஆயத்த ஆலோசனைக் கூட்டங்களை அனைத்து ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிகளிலும் செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு கிழமைகள்) ஆகிய தேதிகளில் நடத்திட வேண்டுமென நாம் ஏற்கனவே அறிவித்தபடி, எல்லா மாவட்டங்களிலும் வெற்றிகரமாக சிறப்புக் கூட்டங்களை நடத்திட வேண்டும் எனவும்; பேரணியில் கலந்து கொள்ள ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு வாகனம் ஏற்பாடு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றவும் வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.

– டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
27.09.2024