இராஜலிங்கம் படுகொலை! முதலாமாண்டு நினைவு தினம்!! புதிய தமிழகம் கட்சியினர் அனைத்து மாவட்டங்களிலும் மலரஞ்சலி செலுத்துவீர்!
361 Views
![]()
இராஜலிங்கம் படுகொலை! முதலாமாண்டு நினைவு தினம்!!
புதிய தமிழகம் கட்சியினர் அனைத்து மாவட்டங்களிலும் மலரஞ்சலி செலுத்துவீர்!
மிக இளம் வயதில் புதிய தமிழகம் கட்சியில் ஒரு தொண்டனாகத் தன்னை இணைத்துக் கொண்டு, கட்சிப்பணியைத் துவங்கி, முதுகுடியின் கிளைச் செயலாளாராகி, இராஜபாளையம் ஒன்றியச் செயலாளராக வளர்ந்து, விருதுநகர் மாவட்டச் செயலாளராகப் பரிணமித்தவர் இராஜலிங்கம். புதிய தமிழகம் கட்சி துவங்கப்பட்ட காலத்திலிருந்து விருதுநகர் மாவட்டம் அதன் கோட்டையாக விளங்கி வருகிறது. இராஜலிங்கம் மாவட்டச் செயலாளராக இருந்த நேரத்தில், அந்தப் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து, விருதுநகர் மாவட்டத்தை புதிய தமிழகம் கட்சியின் எஃகு கோட்டையாக வைத்திருந்தார். மாவட்ட, மாநில அளவிலான போராட்டமாக இருந்தாலும், மாநாடாக இருந்தாலும் விருதுநகர் மாவட்டமே முதல்நிலை மாவட்டமாக விளங்கும் என்பதை, தான் அந்த பதவி வகித்த ஐந்தாண்டுகளில் நிரூபித்துக் காட்டியவர்.
அவரது உழைப்பால் புதிய தமிழகம் கட்சி பெற்ற வளர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாத கயவர்க் கூட்டம், சரியாக ஓர் ஆண்டுக்கு முன்பு, செப்டம்பர் 12-ஆம் தேதி அவரை படுகொலை செய்தது. தங்களின் அரசியல் இலாபத்திற்காக அவரை வீழ்த்திய அவர்கள் எவரும் இப்பொழுது அரசியல் களத்திலில்லை. இராஜலிங்கம் சுறுசுறுப்பு, உழைப்பு, விசுவாசத்தின் அடையாளம். அவருடைய முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், புதிய தமிழகம் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மெழுகுவர்த்தி ஏற்றி, அவருக்கு மலரஞ்சலி செலுத்துவதுடன், அவரை அழித்து கட்சியை அழிக்கவும், அதன் மூலமாக தேவேந்திரகுல மக்களை நிர்கதியாக்கவும் நினைத்தவர்களுக்கு பாடம் புகட்டக் கூடிய வகையில், புதிய தமிழகம் கட்சியை ஒவ்வொரு இல்லங்களிலும், ஒவ்வொருவரது உள்ளங்களிலும் கொண்டு செல்ல சபதமேற்போம். அதுவே நாம் அவருக்குச் செலுத்தக்கூடிய அஞ்சலியாகும்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
10.09.2021







