ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பெருமக்களே..! எனது சாதனைகளும் – எதிர்காலத்திற்கான வாக்குறுதிகளும்!

குளங்களை நாசமாக்கி செம்மண் கொள்ளை அடித்து; அடாவடியாக ஏழை, எளிய மக்களின் விவசாய நிலங்களை அபகரித்து; காற்றாலை நிறுவனங்களுக்கு விற்று கோடி கோடியாக கொள்ளை அடித்த பணத்தை கொண்டு வந்து உங்கள் உயிரின் மேலான வாக்குகளை ரூபாய் 1000, ரூபாய் 2000க்கு விலை பேச வருவார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருந்து, உங்களுக்காக எந்த பிரதிபலனின்றி உழைக்க காத்திருக்கும் நமது டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D., அவர்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்!!

செய்திகள்
s2 456 Views
  • ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி

  • ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி
Published: 30 Mar 2021

Loading

டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் 1996-2001 மற்றும் 2011 – 2016 வரை சட்டமன்ற உறுப்பினராக செய்த சாதனைகள் சிலவற்றை இங்கே சுட்டிக் காட்டுகிறோம் :-

1. ஓட்டப்பிடாரத்தில் முதன்முறையாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியை (SBI) கொண்டு வந்தவர். அதன் தொடர்ச்சியாகவே இன்று நமது தொகுதியில் 10-க்கும் மேற்பட்ட வங்கிகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன.

2. தருவைக்குளத்தில் மீனவர் நலன் காக்க ₹20 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் தளம் உருவாக்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியவர்.

3. மாப்பிள்ளையூரணி, புதியம்புத்தூர் உள்ளிட்ட எண்ணற்ற கிராமங்களில் தலைவிரித்தாடிய குடிநீர் பஞ்சத்தைப் போக்கிட ரூபாய் 20 கோடி செலவில் சிறப்பு திட்டம் மூலம் குடிநீர் கிடைக்கச் செய்தவர்.

4. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் விவசாயிகளின் நீர் ஆதாரமான குளங்கள் நாசமாக்கப்பட்டு, நடைபெற்று வந்த செம்மண் மற்றும் நிலத்தடி நீர் கொள்ளையை தடுத்து நிறுத்தி, இயற்கை வளங்களையும் பாதுகாத்து கொடுத்தவர்.

5. கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் பயிலும் அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள், பேவர் பிளாக்குகள்; அனைத்து பள்ளிக்கும் பெஞ்சுகள், நாற்காலிகள் வழங்கியும்; அரசுப்பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டி தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தியவர். ஒட்டநத்தத்தில் 25 படுக்கை வசதிகொண்ட மருத்துவமனையை கொண்டுவந்தவர்.

6. 2015 யில் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் வெள்ளத்தால் மக்கள் சிக்கித் தவித்த பொழுது உண்ண உணவு, தங்குமிடம், குடிநீர் கிடைக்காமல் தத்தளித்த மக்களுக்கு உதவியவர். நிவாரணத்திற்காக போராடிய ஆயிரக்கணக்கானோர் மீது போடப்பட்ட வழக்குகளை மதுரை உயர்நீதிமன்றம் சென்று போராடி ரத்து செய்தவர். மக்களோடு மக்களாக நின்று மழைநீரில் நடந்தும்; படகில் சென்றும் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வீதிகளில் சூழ்ந்த மழைநீரை 1500க்கும் மேற்பட்ட உயரழுத்த மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றி, மக்களை கரையேற்றியவர். இலவச மருத்துவ முகாம்களை நடத்தியும், விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு, வீடுகளை இழந்தோருக்கு உரிய நிவாரணங்கள் பெற்றுத்தந்தவர்.

7. கிராமங்கள் தோறும் தரமான சாலைகள், அங்கன்வாடி கட்டிடங்கள், ரேஷன் கடைகள், புதியம்புத்தூரில் 50 ஆண்டுகால கோரிக்கையான புதிய பேருந்து நிலையத்தை கட்டிக்கொடுத்துவரும், அனைத்துப் பகுதி மக்களுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை எவ்வித பாகுபாடு இல்லாமல் வழங்கியவர்.

8. மதுரை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தொடுத்த வழக்கின் காரணமாக ஓட்டப்பிடாரம் தொகுதி மட்டுமல்லாது, தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பாறு தடுப்பணை முதல் பல்வேறு வெள்ளத் தடுப்பு அணைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது அனைவரும் அறிந்ததே!
நமது வாக்கு! நமது எதிர்காலம்!!

எதிர்காலத்திற்கான வாக்குறுதிகள் சில:

❖ தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அரசு மற்றும் தனியார் பெரும் தொழில் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட – அது குறித்து சட்டம் இயற்ற சட்டமன்றத்தில் உங்களுக்காக குரல் கொடுத்திடவும்,

❖ 50 ஆண்டு கனவுத்திட்டம் சீவலப்பேரி ஆற்றில் இருந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு நீண்ட கால்வாய் வெட்டி, தொகுதி முழுவதும் விவசாயம் செழித்திடவும்; அனைத்து கிராமங்களுக்கும் தங்கு தடையின்றி தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்திடவும்,

❖ ஒட்டப்பிடாரத்தில் நவீன பேருந்து நிலையம், மாவட்ட நீதிமன்றம் அமைத்திட, புதியம்புத்தூரில் ஜவுளி பூங்கா அமைத்திட, படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்திடவும்,

❖ மீன்பிடித் தடை காலத்தை நவம்பர், டிசம்பர் மாதத்திற்கு மாற்றிட சட்டமன்றத்தில் குரல் கொடுத்திட, கூடுதல் மீன்பிடித் தளம் உருவாக்கித் தந்திடவும்,

❖ விவசாய பெருமக்களின் நிலம் காற்றாலை மாஃபியாகளிடம் பரிபோகாமல் பாதுகாத்திடவும்,
டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D அவர்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களியுங்கள்!!

குளங்களை நாசமாக்கி செம்மண் கொள்ளை அடித்து; அடாவடியாக ஏழை, எளிய மக்களின் விவசாய நிலங்களை அபகரித்து; காற்றாலை நிறுவனங்களுக்கு விற்று கோடி கோடியாக கொள்ளை அடித்த பணத்தை கொண்டு வந்து உங்கள் உயிரின் மேலான வாக்குகளை ரூபாய் 1000, ரூபாய் 2000க்கு விலை பேச வருவார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருந்து,

உங்களுக்காக எந்த பிரதிபலனின்றி உழைக்க காத்திருக்கும் நமது டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D., அவர்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்!!