மாஞ்சோலை விவகாரம் – தேசிய மனித உரிமை ஆணையத்தில் தலைவர் டாக்டர் ஐயா மனு!
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலுக்கான போராட்டத்தின் அடுத்த கட்டமாக புதுதில்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் பொறுப்பு தலைவர் மற்றும் ஆணையத்தின் நீதிபதி அவர்களிடம் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் இன்று பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தார்கள்.!
கோரிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:
1. ஆறு தலைமுறைகளாக மாஞ்சோலை வனப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.!
2. மாஞ்சோலை மக்களை மாஞ்சோலையிலேயே குடியமர்த்த வழிவகை செய்ய வேண்டும்.!
3. 2006 வன உரிமை பாதுகாப்பு சட்டப்படி அம்மக்களுக்கு மாஞ்சோலையிலேயே நிலம் வழங்க வேண்டும்.!
4. மூன்று மாத காலம் வேலை இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்தவும்; பிபிடிசி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.!
புதிய தமிழகம் கட்சி முன்வைத்த கோரிக்கைகளை
தேசிய மனித உரிமை ஆணையம் பரிசீலனைக்கு ஏற்றுள்ளது.!
இச்சந்திப்பின் போது, புது தில்லியில் தலைவர் டாக்டர் ஐயா அவர்களுடன், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் மற்றும் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தமிழக தலைவர் சூசை அந்தோனி ஆகியோர் உடனிருந்தனர்.