புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் சேலம் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.கே.செல்லமுத்து அவர்களின் திருவுருவப்பட திறப்பு விழா
புதிய தமிழகம் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளராக 26 ஆண்டுகள் பணியாற்றி கடந்த ஆண்டு மறைந்த எம்.எஸ்.கே.செல்லமுத்து அவர்களின் திருவுருவப்பட திறப்பு விழா அவருடைய பிறந்த பகுதியான சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வருகிற செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் எம்.எஸ்.கே. செல்லமுத்து அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து, சிறப்புரை ஆற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள்.
சேலம் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.எம்.பாபு, எஸ்.என்.ஹரி பாபு, எஸ்.செல்வராஜ், அசோக், ரஞ்சித் மற்றும் ஒருக்காமலை, சித்தேஷ்வரன், அப்பு, குமார் ஆகியோர் இன்று தலைவர் அவர்களை கோவை குனியமுத்தூர் பொதிகை இல்லத்தில் நேரில் சந்தித்து விழா அழைப்பிதழை வழங்கினர்.
– தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி.
16.08.2024