டிசம்பர் 25 – கீழவெண்மணி தியாகிகள் நினைவு தினம்.!
செய்திகள்

Published:
24 Dec 2024
கோடானகோடி உழைக்கும் உழவர்குடி மக்களின் பறிக்கப்பட்ட மண்ணுரிமையை மீட்டெடுப்பதற்காக மாபெரும் உயிர்த் தியாகம் செய்தவர்கள் கீழவெண்மணி தேவேந்திரகுல வேளாளர்கள்!
1968ல் டிசம்பர் 25 ஆம் நாள் ஆதிக்க சாதிவெறி கும்பல்களால் எரித்துக் கொல்லப்பட்ட 44 பேரின் தியாகம் அளப்பரியது!
அவர்களின் மகத்தான தியாகத்தைப் போற்றக்கூடிய வகையில் புதிய தமிழகம் கட்சியின் அனைத்து கிளைகளிலும் நிர்வாகிகள் நாளை (25.12.2024) மாலை 06.00 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
டாக்டர் கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
24.12.2024