ஆன்மீகத் தோழமை பாபுஜி அவர்களுக்கு 45 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிய தமிழகம் கட்சியின் ஆன்மீகத் தோழமை பாபுஜி அவர்களுக்கு 45 ஆம் ஆண்டு பிறந்தநாள்.!
பாரத தேசம் செழிக்க புதிய தமிழகம் கட்சியோடு இணைந்து பணியாற்ற வாழ்த்துக்கள்.!
கோயமுத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் திருக்கோவில் நிறுவனரும், தமிழ்நாடு – பாண்டிச்சேரி விஸ்வகர்மா கூட்டமைப்பின் தலைவருமான விஸ்வபிரம்ம ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் அவர்களின் 45 வது பிறந்தநாளுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பாபுஜி அவர்கள் ஆன்மீக பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாலும் தமிழ் பாரம்பரிய வைத்திய முறைகளிலும் தேர்ச்சி பெற்றுத் தொண்டாற்றி வருகிறார். கரோனா காலகட்டத்தில் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் வகையில் நிலவேம்பு கசாயத்தை எண்ணற்ற பொதுமக்களுக்கு வழங்கியவர்.
தமிழ்நாட்டின் பெருமைமிகு கைவினைஞர்களான விஸ்வகர்மா சமூக மக்களை ஒன்றிணைக்கவும், பாதுகாக்கவும்; பாரத தேசத்தில் – தமிழ் மண்ணில் சமத்துவம், சம உரிமை, சம நீதி தழைத்தோங்க புதிய தமிழகம் கட்சியோடு இரண்டற கலந்து பணியாற்றி வருகிறார்.
ஆன்மீகத்தை வணிகமாகவோ, சாதிய அல்லது மத எல்லைகளுக்குள்ளோ குறுக்கிக் கொள்ளாமல் சமத்துவம், சகோதரத்துவம்; மனிதர்களுக்கிடையே அன்பு, சாந்தம் ஆகிய விழுமங்களை நிலைநாட்ட தன்னை அர்ப்பணித்து வருகிறார். அவர் 44 ஆண்டுகள் நிறைவுற்று 45 ஆவது ஆண்டு ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அவர் இன்னும் நூறாண்டு காலம் வாழ்ந்து பாரத தேசம் செழிக்க சமூக மற்றும் ஆன்மீக பணியாற்ற புதிய தமிழகம் கட்சியின் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
28.05.2023