தமிழ் மக்கள் அனைவரது வாழ்விலும் இருள் நீங்கி ஒளி பெற, புதிய தமிழகம் கட்சியின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!

தமிழ் மக்கள் அனைவரது வாழ்விலும் இருள் நீங்கி ஒளி பெற,
புதிய தமிழகம் கட்சியின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!
மார்கழி முடிந்து தை மாதம் தொடங்கும் நன்னாள் – முதல் நாள் ’தைப்பொங்கல்’ திருநாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில் தமிழகத்திலும்; தமிழகத்தைத் தாண்டி உலகெங்கும் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு எனது ’தைப்பொங்கல்’ நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தை மாதத்தின் முதல் நாள் மட்டும்மின்றி தொடர்ந்து, மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என மூன்று நாட்களும் திருவிழா தான். ’தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பர். புதிய தமிழகம் கட்சி குடும்பத்தினர் வாழ்விலும், நண்பர்கள், அன்பர்கள் மற்றும் அனைத்து தமிழ் மக்கள் வாழ்விலும் இருள் நீங்கி ஒளி பெறவும்; தீமைகள் நீங்கி நன்மைகள் பெறவும்; தங்கள் குடும்ப நலன் பேணாது, இந்நாட்டு மக்கள் நலன் பேணும் நல்லாட்சி – புதிய தமிழகம் கட்சி பங்குபெறும் கூட்டணி ஆட்சி 2026 இல் அமைய உறுதி ஏற்போம்! உழைப்போம்!! ஒன்றுபடுவோம்!!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
14.01.2025