இராஜலிங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினம்!!
இராஜலிங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினம்!!
இராஜலிங்கம் அவர்கள், மிக இளம் வயதில் புதிய தமிழகம் கட்சியில் ஒரு தொண்டனாகத் தன்னை இணைத்துக் கொண்டு, கட்சிப்பணியைத் துவங்கி, முதுகுடியின் கிளைச் செயலாளாராகி, இராஜபாளையம் ஒன்றியச் செயலாளராக வளர்ந்து, விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும் வளர்ந்தவர் . மாவட்ட, மாநில அளவிலான எந்த போராட்டமாக – மாநாடாக இருந்தாலும் விருதுநகர் மாவட்டத்தை முதல்நிலை மாவட்டமாக நிலைநிறுத்தி புதிய தமிழகம் கட்சியின் எஃகு கோட்டையாக வைத்திருந்தவர்.
அவர் மாவட்டச் செயலாளராக இருந்த நேரத்தில் அவரது உழைப்பால் புதிய தமிழகம் கட்சி பெற்ற வளர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாத கயவர் கூட்டத்தால், 2020 செப்டம்பர் 12-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இத்துயர நாளில் அவரையும், அவரது உழைப்பையும் நினைவு கூறுகிறோம்; புதிய தமிழகம் கட்சியினர் அவரது நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்த வேண்டுகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.09.2024