அஇஅதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி – டாக்டர் கிருஷ்ணசாமி வாழ்த்து
செய்திகள்
394 Views
Published:
28 Mar 2023
![]()
கடந்த 10 மாதங்களாக சகோதரர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க பல சட்டப் போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்தது. தற்போது அனைத்து தடைகளும் நீங்கி அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு புதிய தமிழகம் கட்சியின் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களுக்கு ஆற்ற வேண்டிய அரசியல் பணிகள் அவர் முன் நிறைய இருக்கிறது. ஒட்டுமொத்த சக்தியையும் ஒருமுனை படுத்தி மனமகிழ்வுடன் பணியாற்றவும், வருங்காலங்களில் மகத்தான வெற்றியைப் பெறவும் வாழ்த்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
28.03.2023







