திண்டுக்கல் – பள்ளி மாணவன் மீது சாதிய வன்கொடுமை தாக்குதல்.! உடற்பயிற்சி ஆசிரியர் தனசேகரன் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்.!

செய்திகள்
s2 425 Views
  • Dr Krishnasamy 3
  • Dr Krishnasamy 3
Published: 27 Feb 2025

Loading

பத்திரிக்கை செய்தி.!!

திண்டுக்கல் – பள்ளி மாணவன் மீது சாதிய வன்கொடுமை தாக்குதல்.!

உடற்பயிற்சி ஆசிரியர் தனசேகரன் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்.!

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள கரட்டழகன் பட்டி திரு.சக்தி – திருமதி வனிதா ஆகியோரது புதல்வர்கள் ரோஹித் கண்ணா, ஜீவித் கண்ணா ஆகிய இருவரும் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார்கள். ஜீவித் கண்ணா எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 24ஆம் தேதி பள்ளிக்கு வந்த ஜீவித் கண்ணாவை அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தனசேகரன் அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவரது சாதியையும் இழிவு படுத்தி பிரம்பால் உடல் முழுவதும் அடித்துக் காயப்படுத்தியதோடு, எட்டி எட்டி உதைத்தும், அந்த ஆசிரியரின் அறையில் முட்டி போட வைக்கப்பட்டுள்ளார்.

மதிய உணவு எடுத்து வந்த ஜீவித் கண்ணாவின் தந்தை மயக்கமுற்றுக் கிடந்த அம்மாணவனைக் கண்டு அதிர்ச்சியுற்று உடனடியாக ஆம்புலன்சில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வரும் அம்மாணவனை கட்டாயப்படுத்தி மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற முயற்சிகள் நடப்பதாகத் தெரிய வருகிறது. சம்பவம் நடந்து நான்கு தினங்களாகியும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அந்த ஆசிரியர் மீது புகார் செய்தும் வன்கொடுமை சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யாமல் காவல்துறையும் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.
தனது சொந்த ஊரில் பேருந்து நிலையத்தில் இரு மாணவர்களுக்கிடையே நடந்த கைகலப்பைப் பார்த்தது குற்றம் எனக் கூறி உடற்பயிற்சி ஆசிரியர் தனசேகரன் மாணவன் ஜீவித் கண்ணாவை சாதிய வன்மத்தோடு தாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எனவே சமந்தப்பட்ட அந்த உடற்பயிற்சி ஆசிரியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யவும், கொடுங்குற்றம் இழைத்த அந்த ஆசிரியரை பள்ளியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யவும் வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
27.02.2025