கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணமாக திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
393 Views
![]()
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணமாக திமுக அரசைக் கண்டித்தும், பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும்
ஜூன் 25 ஆம் தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்!!
மதுவால், அதைக் குடிப்போருக்கும்; குடும்பத்தாருக்கும்; உற்றார் உறவினருக்கும்; சமூகத்திற்கும் ஏற்படும் கேடுகளை எடுத்துச் சொல்லி ”பூரண மதுவிலக்கே நிரந்தர தீர்வு” என புதிய தமிழகம் கட்சி சார்பாக பல வருடங்களாகத் தொடர்ந்து போராடி வருகிறோம். 2022-23 ஓராண்டு காலம் தொடர் போராட்டங்களை நடத்தினோம். 2023 மே மாதம் 10 ஆம் தேதி மரக்காணம் கலப்பட சாராயச் சாவை தொடர்ந்து; விழுப்புரம், மரக்காணம் பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று நல்ல சாராயம் / கள்ளச் சாராயம் விற்போருக்கும், ஆட்சியாளர்கள் / அதிகாரிகளுக்கும் உள்ள கள்ள உறவை எடுத்துரைத்தோம்.
இப்பொழுது, கள்ளக்குறிச்சியில் 60க்கும் மேற்பட்டோர் பலிகொண்ட மீண்டும் ஒரு கோரச் சம்பவம் நடந்துள்ளது. அரசு விற்கும் சாராயத்தை ஒழிக்காமல், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது.
எனவே, 60 பேரின் மரணத்திற்கு காரணமான திமுக அரசைக் கண்டித்தும், பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஜூன் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பெண்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.
– தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி.
23.06.2024






