கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு – முன்கள பணியாளர்களுக்கு முன்னுதாரணமாக தடுப்பூசி போட்டுக்கொண்டார் டாக்டர் கிருஷ்ணசாமி

ஊசி போட்டு கொண்ட இடத்தில் வலியோ, உடலில் அரிப்போ அல்லது மயக்கம் போன்ற எந்த பின்விளைவு அறிகுறிகளும் எனக்கு ஏற்படவில்லை. முன்கள பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் சக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கரோனா தடுப்பூசியை தைரியமாக போட்டுக் கொள்ள முன்வாருங்கள்!

செய்திகள்
s2 248 Views
  • கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு

    கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு

  • Dr K Krishnasamy
  • Dr K Krishnasamy

    கொரோனா தடுப்பூசி

  • கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு
  • Dr K Krishnasamy
  • Dr K Krishnasamy
Published: 28 Jan 2021

Loading

கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப்படைத்த கரோனா பெரும் தொற்று நோய்க்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இந்தியாவில் முதற்கட்டமாக களப்பணியாளர்களான மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் பணி துவங்கப்பட்டுவிட்டது. எனினும் முன்கள பணியாளர்கள் மத்தியிலேயே தடுப்பூசி குறித்த அச்சம் நிலவுகிறது.

இன்று நான் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.

மருத்துவமனை டீன் டாக்டர்.ஏ.நிர்மலா,
தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் டி.கனகராஜ் ஆகியோருக்கும்,
உடனிருந்த மருத்துவர்கள்
டாக்டர்.உமா சங்கர்,
டாக்டர்.ரமேஷ் ராஜா,
டாக்டர். அருளானந்தம்,
டாக்டர் உதயகுமார்,
டாக்டர்.சுரேஷ் மற்றும்
செவிலியர்கள்
ஆதிலட்சுமி,
சசுகந்தி ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊசி போட்டு கொண்ட இடத்தில் வலியோ, உடலில் அரிப்போ அல்லது மயக்கம் போன்ற எந்த பின்விளைவு அறிகுறிகளும் எனக்கு ஏற்படவில்லை. முன்கள பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் சக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கரோனா தடுப்பூசியை தைரியமாக போட்டுக் கொள்ள முன்வாருங்கள்!

கரோனாவை இந்திய நாட்டிலிருந்து அகற்றுவோம்.!!