ஜனவரியில் மதுரையில் செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராட்டினார்.

ஏப்ரலில் உடுமலை – பூளவாடியில் ஏழை, எளிய மக்களுக்காக தலைவர் டாக்டர் அய்யா அவர்களால் மருத்துவமனை தொடங்கப்பட்டது. அத்தொடக்க விழாவில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் திரு கி.வீரமணி அவர்கள் பங்கேற்ற்றார்கள்.

இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சுற்று வட்டாரங்களில் வெள்ளச்சேதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலைவர் அவர்கள் நேரில் சென்று நிவாரண உதவிகள் உதவி செய்து, ஆறுதல் கூறினார்.

தென்தமிழகக் கல்லூரிகளில் பயின்ற பட்டியலின மாணவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல நிலைகளில் போராடி, களத்தில் பாதுகாப்பு அரணாக விளங்கினார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது போலீசார் சங்கம் அமைப்பதற்கு நடத்திய போராட்டத்திற்கு தலைவர் அவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.