அண்ணல் அம்பேத்கரின் மனைவி திருமதி. சவீதா அம்பேத்கர் அவர்களை அழைத்து, மதுரையில் பாரதீய தலித் பேந்தர்ஸ் மாநாடு நடத்தி, அம்மாநாட்டின் அமைப்பாளராக தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் பணியாற்றினார்கள். அம்மாநாட்டில் திரு.வை.பாலசுந்தரம், திரு.ராம்தாஸ் அத்வாலே, திரு.அவனியாபுரம் மலைச்சாமி மற்றும் பலரும் சிறப்புரையாற்றினார்கள்.