விழுப்புரம் கலவரத்தில் 12 பட்டியலினத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, அறிக்கை வெளியிட்டதற்காக, மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவராக இருந்தபோது அன்றைய முதல்வர் திரு. எம்.ஜி.ஆர் அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறை தண்டனை அணுபவித்து, பின் விடுதலை செய்யப்பட்டார்கள்.

வேடசந்தூர் குடகனாறு அணை உடைப்பால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு, நிதி, உணவுப் பொருட்கள், உறைவிடப் பொருள்கள் திரட்டி நேரடியாகச் சென்று நிவாரண உதவி செய்தார். அரசு இயந்திரம் அணுக முடியாத சில கிராமங்களுக்கும் முதன்முதலாக நேரடியாகச் சென்று உதவினார்.