புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க 22.5.2023 இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

கடந்த 14. 5 .2023 அன்று விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள எக்கியார் குப்பம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் விஷ சாராயம் அருந்தி 23 உயிர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

60க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்டம் ,முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துயரச் சம்பவத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் 10.5. 2023 அன்று தமிழகத்தில்’ பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வலியுறுத்தி’ சென்னை தலைநகரில் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பிறகு தமிழக ஆளுநரிடம் டாஸ்மாக் மூலம் ஒரு லட்சம் கோடி ஊழல் மற்றும் முறைகேடான பார், கள்ள சந்தையில் மது விற்பனை என 250 பக்கம் கொண்ட புகார் மனுவை தமிழக ஆளுநரிடம் அளித்தார். அதன் பிறகுதான் மரக்காணத்தில் இதுபோன்ற விஷ சாராயம் அருந்திய மரணம் ஏற்பட்டுள்ளது. இச்செயல் அரசின் திட்டமிட்ட செயல் என்று கருதுகின்றோம் .

இந்நிலையில் 18. 5 .2023 அன்று டாக்டர் ஐயா அவர்கள் விஷ சாராயம் அருந்தி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 60க்கும் மேற்பட்டோர்களை விழுப்புரம் மாவட்டம் , முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் . மேலும் 23 பேர் உயிரிழந்த கிராமமான எக்கியார் குப்பத்திற்கு நேரில் சென்று கிராம மக்களிடம் கள்ளச்சாராயம் யாரால் விற்கப்படுகிறது ? என்ற விபரங்களை கேட்டறிந்த போது , மரக்காணம் காலனி பகுதியில் கள்ளச்சாராயத்தை விற்பதற்கு ஏலம் விடப்பட்டு அந்த ஏலத் தொகையை கோயிலுக்கு கட்டிவிட்டு எக்கியார் பகுதியில் போண்டா தயாளன் ,ரவி, ஆறுமுகம், முத்து, மூர்த்தி, அமரன் மண்ணாங்கட்டி ஆகியோர்கள் தொடர்ந்து கள்ளச்சாராயத்தை விற்று வருகின்றனர் . இவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் . ECR road பாண்டிச்சேரி இடது புறமாக மொசை வீடு எனும் பகுதியில் தனியார் மதுக்கடைகள் இயங்கி வருகிறது அதனை மூட வேண்டும். மேலும் நாங்கள் மீன்பிடித் தொழிலை அடிப்படையாகக் கொண்டவர்கள். எங்கள் கிராமத்தில் 23 பேர் உயிரிழந்த துயரச் சம்பத்திற்கு பிறகு நாங்கள் எவரும் வேலைக்கு கூட செல்ல முடியவில்லை.

ஆகவே அரசு எங்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் . மேலும் எங்கள் ஊரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மட்டும் தான் இயங்கி வருகிறது. அப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். சுமார் 300-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் சென்று வருவதற்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே பயணிக்க வேண்டியது சூழ்நிலை உள்ளது. பேருந்து வசதி ,சாலை வசதி, சுகாதார வசதி போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக இல்லாத கிராமம் என்று மக்களனைவரும் டாக்டர் ஐயா அவர்களிடம் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் மாவட்ட ஆட்சியர் தலைவரிடம் எக்கியார் குப்பம் மக்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக பலமுறை பேசி உள்ளார் .

இந்நிலையில் 22.5.2023 இன்று
V.K. ஐயர் மாநில பொதுச் செயலாளர், வேலூர் பொன். ஜெயசீலன்,
மாநில கொள்கை பரப்பு செயலாளர், வாழையூர் குணா, மாநிலத் துணைக் கொள்கை பரப்புச் செயலாளர், ஜான் கிறிஸ்டோபர்,தலைமை நிலைய செயலாளர் , விஜய. பிரபு ,மாநில இளைஞரணி குழு உறுப்பினர், எக்கியார் குப்பத்தைச் சேர்ந்த கிராம முக்கியஸ்தர்கள்
இ. சேகர், வேலு ,எல்லப்பன், ரகு, ராஜதுரை ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் தலைவர்
திரு. பழனி அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.