உலகையே உலுக்கிய நாங்குநேரி சின்னத்துரை எனும் பள்ளி மாணவனை சக பள்ளி மாணவர்களே கொலைவெறி தாக்குதல் நடத்திய கொடூரம் பார்ப்பவர்களையும் கேட்போர்களையும் குலை நடுங்க செய்தது.

அந்த படுபாதக செயலை கண்டிக்கும் வகையிலும் பாதிக்கப்பட்ட மாணவனின் கிராமத்திற்கு கடந்த 23.8.2023 அன்று அந்த கிராம மக்களை சந்தித்து இது போன்ற சமூக பிரச்சனைகளுக்கு மூல காரணம் என்ன என்பதை ஆய்ந்தறிந்து அதற்கான தீர்வை தேடித்தரும் வகையில்தான் டாக்டர் அய்யா அவர்களின் பயணம் அமைய பெற்றது.

நாங்குநேரி கிராமத்தில் பட்டியல் பிரிவினர்கள் மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்ட சாதியினர்களை கூட ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட நபர்கள் அடக்கி, ஒடுக்கி வருகிறார்கள். அதற்கு முகாந்திரமாக அமைந்திருப்பது வானுமாமலை கோவிலுக்கு சொந்தமான 6000திற்கு மேற்பட்ட நிலங்களும் அதனுடைய வழிபாட்டு உரிமையிலும் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்த மடத்தின் ஜீயர் உட்பட அனைவரையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் ரவுடிகளை ஏவி தனது ஆதிக்கத்தின் கீழ் கோயில் நிர்வாகத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு பலரும் கிராமத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட சின்னத்துரையையும் அவரது சகோதரி சந்திரா செல்வியையும் அதேபோன்று கோவில்பட்டி அருகே கழுகுமலை பகுதியில் பள்ளி மாணவர்களால் ஊரு விட்டு ஊரு வந்து தாக்குதலுக்கு ஆளான ஹரிபிரசாத் அவர்களை நேரில் சந்தித்தபோது எங்கள் பகுதியில் வருடத்துக்கு ஒரு முறை சாதி வெறி கும்பல் வந்து எங்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள்.அது போல தான் என்னுடன் படிக்கின்ற சக மாணவர்களே இப்படி அடித்து விட்டார்கள் என்று தன் தோள்பட்டை கைகளில் அவர்கள் தாக்கிய காயத்தை காட்டி வருத்தப்பட்டார்.

பாளையங்கோட்டை சுற்றி நடக்கின்ற தொடர் சமூகவிரோத படுகொலைகள் மற்றும் கிராம நாட்டாமை புதிய தமிழகம் கட்சி கிளை பொறுப்பாளர் ஆகியோரிடம் கேட்டறிந்தார் இனி இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் அனைவரும் ஒன்றுபட்டு சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

நாங்குநேரி, பாளையங்கோட்டை பகுதிகளில் நடக்கின்ற சமூக விரோத சம்பவங்கள் குறித்து இன்று 25.8.2023 காலை 11:30 மணியளவில் பத்திரிக்கையாளரை சந்தித்து அதன் பிறகு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ,மாவட்ட காவல்துறை தலைவர் ,( வானு மாமலை கோயில் நிர்வாகம் பற்றி) இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் ஆகியோரை டாக்டர் ஐயா அவர்கள் நேரில் சந்தித்து இப்பகுதியில் நடக்கின்ற தொடர் சமூகப் பிரச்சினைகளுக்கு சட்டபூர்வமாக தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும். என ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள்.

ஆளும் அரசு இயந்திரங்கள் முறையாக தலைவரின் ஆலோசனையின் பேரில் ஒரு குறிப்பிட்ட சாதியில் அனைவரும் சண்டியர் தனம் செய்வதில்லை. ஒரு குறிப்பிட்ட நபர்கள் தான் அப்படி நடந்து கொள்கிறார்கள். அவர்களால்தான் அந்த சமூகத்திற்கு இழுக்கு ஆகவே காவல்துறையினர் இது மாதிரி செயல்படுபவர்களை இனம் கண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இதற்கு நிரந்தர தீர்வு செய்ய முடியும் என வலியுறுத்தி வந்துள்ளார் டாக்டர் ஐயா அவர்களுடைய பயணம் தென் தமிழக மக்களுக்கு ஒரு பாதுகாப்பை உறுதி செய்யும் பயணமாக அமையப்பெற்றுள்ளது .

செய்தி – வாழையூர் குணா