தமிழக அரசு இயற்றிய 12 மணி நேர வேலை தொழிலாளர் திருத்த சட்டத்தை சட்டமன்றத்திலேயே ரத்து செய்ய வலியுறுத்தியும் 8- மணி நேர வேலையை உறுதிப்படுத்திடவும் இன்று(01.05.23) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பாக பெரம்பலூர் வெங்கடேசபுரம் பாரத ஸ்டேட் வங்கி வாயில் முதல் புதிய பேருந்து நிலையம் அம்மா உணவகம் வரையிலான மாபெரும் தொழிலாளர் உரிமை மீட்பு பேரணி மாவட்ட பொறுப்பாளர் த.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் செட்டிகுளம் குணா, சிறுவயலூர் மதியழகன், பேராசிரியர் வேலுசாமி மணிகண்டன், பார்த்திபன், கபிலன், ராதிகா,விமல். ஆனந்த், கண்ணதாசன், சிவசூரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.