பாரத தேசத்தில் அமைதியும், சமாதானமும் நிலவட்டும்.! ’இந்தியா – இந்தியர்’ என்ற உணர்வும், சகோதரத்துவமும் மேலோங்கட்டும்.!

அறிக்கைகள்
s2 628 Views
  • Dr K Krishnasamy

    ஈகைத் திருநாள் வாழ்த்துகள் - டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 03 May 2022

Loading

பாரத தேசத்தில் அமைதியும், சமாதானமும் நிலவட்டும்.!

இந்தியாஇந்தியர்என்ற உணர்வும், சகோதரத்துவமும் மேலோங்கட்டும்.!

உலகெங்கும் வாழக்கூடிய இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்படக்கூடியரம்ஜான் பெருநாளில்புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாத்தின் ஒன்பதாவது மாதத்தில் 29 அல்லது 30 நாட்கள் தொடர் நோன்பிருந்து அதன் நிறைவாக சந்தோசமாகக் கொண்டாடப் படக்கூடிய நாளே ஈகைத் திருநாளாகும். பகல் முழுவதும் உணவும் தண்ணீரும் கூட இன்றி 30 நாட்களுக்கு உண்ணா நோன்பு மேற்கொள்வது, ஒவ்வொருவருடத்திலும் சுய ஒழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் மேம்படுத்துவதோடு உள்ளத்திற்கும் உடல்நலத்திற்கும் குதூகலத்தை அளிக்கக் கூடியதாகவும், மன உறுதியை வலுப்படுத்தக் கூடியதாகவும் அமைகிறது. இது ஒரு மதச் சடங்காகக் கருதப்படாமல், ஒரு பொது அம்சமாகவே கருதி அதை மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் எமதுரமலான் பெருநாள்நல் வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகெங்கும் அமைதியற்ற சூழல் நிலவும் இந்தக் காலகட்டத்தில், நமது பாரத தேசத்தில் அமைதியும், சமாதானமும் நிலவ; நம்மிடையேஇந்தியாஇந்தியர்என்ற உணர்வும், சகோதரத்துவமும் மேலோங்க இந்நன்னாளில் உறுதியேற்போம்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA.,

நிறுவனர் & தலைவர்

புதிய தமிழகம் கட்சி.

03.05.2022