தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!
330 Views
![]()
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!
சித்திரை 1 – தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடக்கூடிய தமிழ் மக்கள் அனைவருக்கும், அதேபோல, அதற்கடுத்த நாள் ‘சித்திரைக்கனி’ என்ற பெயரில் அப்புதுவருடத்தைக் கொண்டாடும் கேரள மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கும் ஆங்கிலப் புத்தாண்டு தான் சட்டப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகளுக்குப் பெயர்போனாலும் கூட, அந்தந்தப் பகுதி மக்களுடைய கலை, கலாச்சார வாழ்க்கையோடு ஒன்றியிருப்பது இது போன்ற விழாக்கள் தான். எனவே சித்திரை 1 அன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடக்கூடிய தமிழ் மக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, இந்தாண்டு முழுவதும் அனைத்து சிறப்புகளும் ஏற்பட வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex MLA
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
14.04.2022






