தியாகிகளை போற்றுவதிலும் தியாகத்தைப் போற்றுவதிலும் புதிய தமிழகத்திற்கு நிகர் வேறு எந்த கட்சியும் இல்லை.
என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.
விருதுநகர் மாவட்டம் ,ராஜபாளையம் வட்டம் ,முதுகுடி கிராமத்தைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் அருமை சகோதரர் ராஜலிங்கம் அவர்களை சில சமூக விரோதிகள் அவருடைய அரசியல் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், சண்டியர் தலைவர் மூலம் கூலிப்படையை ஏவி அவரை வெட்டி மாய்த்தனர். அவருடைய இழப்பு புதிய தமிழகம் கட்சிக்கு மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்தியது.
எதிரியை நேருக்கு நேர் மோத முடியாமல் கோழைத்தனமாக வயலில் கீழே குனிந்து வரப்பு வெட்டிக் கொண்டிருந்த ஒரு மனிதனை ஒளிந்து இருந்து ஓடி வந்து அவர் சுதாரித்து நிமிர்வதற்குள் வெட்டியதுதான் வீரமா? இனத்துரோகிகளால் கோழைத்தனமாக கொலை செய்யப்பட்டவர்தான் ராஜலிங்கம். அவருடைய அளப்பரிய தியாகமும், உழைப்பும் புதிய தமிழகம் கட்சிக்கு உரமாகவும், அடித்தளமாகவும் அமையப்பெற்றதை 12. 9. 2023 அன்று முதுகுடி கிராமமே ஒன்று திரண்டு தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் சிகப்பு பச்சை வர்ண கொடி ஏந்தி புதிய தமிழகம் கட்சியாக நின்று மாபெரும் போராளிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது என்றால் ஒரு ராஜலிங்கத்தை வீழ்த்தி விட்டால் கட்சி அத்தோடு அஸ்தமத்து போய்விடும் என எண்ணி மனப்பால் குடித்த துரோகிகள் முகத்தில் ஒட்டுமொத்த கிராமமே திரண்டு இன துரோகிகளின் முகத்தில் கரியை பூசினர் .
ஒரு ராஜலிங்கம் அல்ல இப்பொழுது ஓராயிரம் ராஜலிங்கம் உருவாகி விட்டார்கள். அவர் கொன்று புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளார் . அவர்களுடைய உணர்வுகளும் ,லட்சியங்களும் மழுங்கடிக்கப்பட வில்லை. மாறாக பட்டித் தொட்டி எங்கும் பரவி விரிந்து வளர்ந்து இருக்கிறது .
வீரவணக்கம்! வீரவணக்கம்!
மாசில்லா மாணிக்கம் ராஜலிங்கத்திற்கு
புதிய தமிழகத்தின் வீர வணக்கம்!
வருகுது பார் வருகுது பார்
முதுகுடி வீதியிலே..
டாக்டர் அய்யா தலைமையிலே
சிகப்பு பச்சை கொடி ஏந்தி
வருது பார் வருது பார்
புதிய தமிழகம் வருகுது பார்
வீண் போகாது ! வீண் போகாது !நீங்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது
விழ விழ எழுவோம்
ஒன்று விழ நூறாய் எழுவோம் !
மறக்க மாட்டோம் !மறக்க மாட்டோம்!உங்கள் தியாகத்தை மறக்க மாட்டோம் !
மாசில்லா மாணிக்கம் ராஜலிங்கம் நினைவேந்தல் பேரணியில் வீரவணக்க முழக்கம் இடப்பட்டது.
புதிய தமிழகம் தொண்டர்கள் இடையே அவர்கள் உள்ளங்களிலும் உணர்வுகளிலும் ,நீக்கம் மற தனது உழைப்பை விதைத்துச் சென்றுள்ளார்.அதற்கு கட்டியங் கூறும் காட்சியாக 12.9.2023 அன்று பெருந்திரளான மக்கள் கூட்டத்தை அங்கே காண நேர்ந்தது.
புதிய தமிழகம் கட்சியின் கொள்கை, கோட்பாடு, லட்சியங்களை உள்வாங்கிக் கொண்டு ,கட்சிக்கும், தலைமைக்கும், நேர்மையாகவும் ,உண்மையாகவும், விசுவாசமாகவும், இருக்கின்ற தூய தொண்டனுக்கு ஒரு தூய தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் எப்பொழுதும் தியாகிகளின் தியாகத்தை போற்றுவதில் மிகுந்த பற்றுடன் செயல்படுபவர். என்பதனை உலகிற்கு பறைசாற்றினார்.
கட்சிக்கு உண்மையாக இருந்து உழைத்தால் தியாகம் செய்தால் நம்மை வரலாறு காலமெல்லாம் பேசப்படும்.என்கின்ற ஊந்து சக்தியை ஒவ்வொரு தொண்டனின் மனதிலும், நினைவேந்தல் நிகழ்ச்சி ஆழமாக பதிந்துள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி எதிராளிகள் எதை மனதில் வைத்துக் கொண்டு ராஜாலிங்கத்தை வீழ்த்தினார்களோ அவர்களுடைய கெட்ட கனவு எல்லாம் மண்ணோடு மண்ணாக பொய்த்து போய்விட்டது. அவருடைய தியாகத்தை ஆயிரக்கணக்கானோர் புடை சூழ வீரவணக்கம் செலுத்தியதிலிருந்து அதன் புனிதம் மிளிரத் தொடங்கியுள்ளது .
ஒரு ராஜலிங்கத்திற்கு பதிலாக ஆயிரமாயிரம் ராஜலிங்கங்கள் உருவாகி உள்ளார்கள் . கட்சியும் அனைத்து சமுதாய மக்களிடையே பல்கி பெருகி ஆலமரம் போல விருச்சகமாக வளர்ந்து உயர்ந்து நிற்கிறது.
புதிய தமிழகம் கட்சி வெறும் கட்டப்பஞ்சாயத்து செய்வதற்காகவோ அல்லது ஆள் கடத்துவதற்காகவோ அல்லது தனிநபர் பிரச்சனைகளை பயன்படுத்தி வசூல் வேட்டை செய்வதற்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல மண்ணின் பூர்வ குடிமக்கள் ஏழை, எளிய , விளிம்பு நிலை மக்கள் ஆகியோர்களின் குரலாக மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் , குரல் அற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலித்து சமூகத்தில் சமத்துவம் ,சமநீதி, சம பங்கு, சம உரிமை,சமய உரிமையை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட மாபெரும் இயக்கம்,கட்சி புதிய தமிழகம். என டாக்டர் அய்யா அவர்களின் நினைவேந்தல் உரை அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
புதிய தமிழகம் கட்சியை ஒருவரை வீழ்த்தி ஒழித்து விடலாம் என நினைப்பது அறிவிலிதனமான செயலாகும். நேரடியாக பல்லாயிரக்கணக்கானனோரும் ,மறைமுகமாக லட்சக்கணக்கானோரும், உலகெங்கிலும் பரந்து விரிந்து வாழும் தமிழ் உறவுகளான கோடான கோடி பேர் உள்ளங்களிலும் , நீக்கமற நிறைந்து இருக்க கூடிய கொள்கை கோட்டையாகும் . வெறும் தேர்தல் நேர கணக்குகளை வைத்து புதிய தமிழகம் கட்சியை மதிப்பிட முடியாது. சமூக மாற்றம் ,சமூகப் புரட்சி,, அரசியல் மாற்றம், சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நீக்கம், இந்து மதத்திற்குள் மறுமலர்ச்சி, புரட்சி உள்ளிட்ட மாற்றங்களை கொண்டு வந்த வரலாற்று சிறப்புமிக்க கட்சி புதிய தமிழகம் என்றால் அது மிகையாகாது அப்படிப்பட்ட புதிய தமிழகம் கட்சியின் தியாகி ராஜலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கமும், புகழ் வணக்கமும் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் செலுத்தியதில், அவருடைய தியாகம் என்றென்றும் நிலைத்து நிற்கும் வகையில் அந்த நினைவேந்தல் நிகழ்ச்சி அமையப்பெற்றது.
நன்றி! வணக்கம் !!
வாழையூர் குணா.
