சட்டவிரோத பார் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தமிழகம் முழுவதும் மனு

செய்திகள்
s2 257 Views
  • 1 (2)
  • 1 (3)
  • 1 (2)
  • 1 (1)
  • 1
  • 1 (3)
  • 1 (1)
  • 1 (1)
  • 1 (3)
  • 1 (2)
  • 1 (1)
  • 1 (4)
  • 1 (6)
  • 1 (4)
  • 1 (3)
  • 1 (2)
  • 1 (1)
  • 1 (2)
  • 1 (3)
  • 1 (2)
  • 1 (1)
  • 1
  • 1 (3)
  • 1 (1)
  • 1 (1)
  • 1 (3)
  • 1 (2)
  • 1 (1)
  • 1 (4)
  • 1 (6)
  • 1 (4)
  • 1 (3)
  • 1 (2)
  • 1 (1)
Published: 07 Jun 2023

Loading

தமிழகம் முழுவதும் கடந்த 22 மாதங்களாக சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் நடத்தி வந்தவர்கள் வர்கள் மீதும், அவர்களுக்கு உடந்தையாகக் குற்றம் நடைபெற்ற கட்டிடத்தின் உரிமையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தும், சொத்துக்களை அரசுடைமையாக்கியும்;

அதே போல் குற்றம் நடைபெற்று வருகிறது என்று தங்களுக்கு நன்கு தெரிந்திருந்தும் தங்களுக்குரிய கடமையிலிருந்து தவறி சட்டபூர்வ கடமையை ஆற்றாமல் குற்றம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர், டாஸ்மாக் அதிகாரிகள் மீது லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தும்;

அதேபோல் கடந்த 24 மாத காலமாக சட்டத்திற்கு புறம்பாக மதுபான கூடம் நடந்ததை தடுக்க தவறிய தமிழ்நாடு மதுவிலக்கு காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டி

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், ஊழல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர், மாவட்ட கலால் வரித்துறை அதிகாரி ஆகியோருக்கு புதிய தமிழகம் கட்சி சார்பாக அந்தந்த மாவட்டங்களில் புகார் மனு அளிக்கப்பட்டது.