3 வது மாநில மாநாடு – சம-சமூக நீதி மாநாட்டுத் தீர்மானம்
தேதி: 08 செப்டம்பர் 2002
இடம்: திருநெல்வேலி - ஆரோக்கியநாதபுரம்
1. எதிர்ப்புரட்சியாளர்களிடம் போராட்டம்
படியமைப்பைக் கொண்டு இயங்கா, தேக்க சமுதாய அமைப்பாக நிலை கொண்டு விட்ட இம்மண்ணில் 100 ஆண்டுகளுக்கு முன்னரே சமூக நீதிக்காக போராடியவர்களிடமே மீண்டும் ஒரு சமூக நீதி கேட்டு போராட வேண்டிய நிலை எளிய மக்களுக்கு உருவானது குறித்து இம்மாநாடு வேதனை கொள்கிறது! வெட்கப்படுகிறது| வெறுப்பு கொள்கிறது. ஏனெனில் முன்பு போராடியவர்கள் இப்பொழுது எதிர்ப்புரட்சியாளர்களாக மாறிவிட்டார்கள்.
2. உண்மை வரலாறுகள்
எளிய மக்களான தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிட, பறையர்கள். அருந்ததிய மக்கள் சமூக – அரசியல் – பொருளாதார அரங்கில் முன்னேறிச் செல்ல இயலாமல் தள்ளாட மிக முக்கிய காரணம் “இம்மக்களின் உண்மையான வரலாறுகள் மூடி மறைக்கப்பட்டதே” என இம்மாநாடு முற்றாக கருதுகிறது. இம்மண்ணின் பூர்வீக குடிமக்களான எளிய மக்களின் மெய்யான வரலாறுகளை மேலே நாட்டு அறிஞர் குழுக்கள்/பல்கலைக்கழகங்களைக் கொண்டு ஆய்வு செய்து வெளியிட வேண்டும். இம்மக்களை இழிவுபடுத்தும் அனைத்தையும் முற்றாக தடைசெய்ய வேண்டும்.
3. மெய்யான வெள்ளை அறிக்கை
ஏறத்தாழ 40 சதவீதத்திற்கு குறைவில்கவயல் தமிழ்கண்னில் வாழும் இம்மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. மத்திய/மாநில அரசுகள் இம்மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தப்படுவதை ஒரு பொருட்டாக கருதவில்லை. இம்மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கும், கிராமங்களுக்கும் பாதைகள் இல்லை. குடிநீர் வசதி இல்லை, சுடுகாட்டு வசதியில்லை, மின்விளக்குகள் இல்லை. பெரும்பாலும் ஓலைக் குடிசைகளும், மண் குடிசையுமே எங்கும் காட்சி தருகிறது. நகர்புறங்களில் ஓடைகள், சாக்கடை ஓரங்களிலே வாழும் இடங்கள் உழைப்பதற்கு தயாராக இருந்தாலும் உத்தரவாதமான தொழில் இல்லை. கால் வயிறு, அரை வயிறு கஞ்சி இதுவே இன்றைய நிலை. சுதந்திரம் பெற்று 56 ஆண்டுகள் கழித்த பின்னரும், கலிந்த வாழ்க்கை நிலையிருக்க காரணம் என்ன? எளிய மக்களின் கல்வி, சமூக, பொருளாதார வாழ்வு நிலைபற்றி மேலை நாடு, இந்தியா மற்றும் தமிழ்நாடு அளவில் மூன்று வெவ்வேறு அறிஞர்கள் மற்றும் பல்கழைக்கழகங்கள் மூலமாக ஆய்வு செய்து “மெய்யான வெள்ளை அறிக்கை” வெளியிட வேண்டும்.
4. தனியார் தொகுதியில் இடதுக்கீடு
தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொது நிறுவனங்களில் எளிய மக்களுக்கு (SC/ST) வேலை வாய்ப்பை மறுத்தது போலவே எளிய மக்களுக்கு எதிராக வழிபடும் தலங்கள், வியாபார நிறுனங்கள், சிறு மற்றும் பெரும் தனியார் துறைகள், அனைத்து வங்கிகள், பொது ஏரிகள், குளங்கள், பொது மேய்ச்சல் நிலங்கள் மற்றும் பொது சொத்துக்களை சுற்றி சுற்று சுவர் எழுப்பி கொண்டனர். எளிய மக்கள் எவரும் உள்ளே நுழைய முடியாதபடி அரண் எழுப்பி உள்ளனர். எனவே தான் பிற மாநிலங்களைக் காட்டிலும் எளிய மக்களின் வாழ்க்கை தரம் இங்கு மோசமாக உள்ளது.
அதனால் தொழிலாளர் நலச் சட்டம் அமலாகும். இருபது பேருக்கு மேல் வேலை செய்யும் தொழில் நிறுவனம் முதல் பெரிய ஆலைகள் வரை அனைத்து தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பை அளிக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே அரசியல் சட்ட உரிமைகளில் அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டு விகிதாச்சார அடிப்படையில் எளிய மக்களுக்கும் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் இடஒதுக்கீடு செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும். இது 9-வது அட்டவணையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
5. இலவச கல்வி அடிப்படை உரிமை
கல்வித்துறை முழுக்க முழுக்க தனியார்மய வியாபாரமாக்கப்பட்டு வருகிறது. இதுவரை எளிய மக்களுக்கு கிடைத்து வந்த குறைந்தபட்ச கல்வியும் அதனால் மறுக்கப்படும் பேரபாயம் உள்ளது. அதனால் எளிய மக்கள் (SC/ST) இலவசமாக கல்வி பெறும் உரிமையை அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உரிமைகளில் ஒன்றாகக் சேர்க்கப்பட வேண்டும்.
6. ஆறு மாதங்களில் இடஒதுக்கீடு நிறைவு செய்யப்பட வேண்டும்
இந்திய குடியரசு உருவாக்கப்பட்ட காலம் முதல் பட்டியல் சாதி எளிய மக்கள் பெற வேண்டிய 19 சதலித இடஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் காலம் முதல் திராவிட ஆட்சிகள் வரை பல அரசாணைகள் நிறைவேற்றியும் செயல்படும் மட்டத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளன. பின்னடைவு பணியிடங்களையும் (Back-log vacancies) விடுபட்ட பணியிடங்களையும் (Short falls) அரசாணை நிலை எண். 91 (28.11.2001) படி உடனே நிறைவு செய்ய வேண்டும். சமூக நீதி தொடர்பாக மற்றொரு மாநாடு நடத்த போவதில்லை. அடுத்த 6 மாதங்களில் அனைத்து பின்னடைவு, விடுபட்ட பணியிடங்களை நிரப்பாவிட்டால் போராட்டத்தில் குதித்து ஒரு லட்சம் பேர்கள் சிறைபுகுவார்கள்.
7. உழைக்கும் மக்களுக்கே குத்தகையாக நிலம்
அரசுக்கு சொந்தமான கோயில் நிலங்கள் உழைக்காத உள் குத்தகையாளர்கள் வசம் உள்ளன. இதனை ரத்து செய்து விட்டு அரசு ஊழியம் அல்லது வேறு வருவாய் இல்லாத நிலத்தை மட்டும் நம்பியுள்ள எளிய பட்டியல் சாதி மக்களுக்கு குடும்பத்திற்கு 2 1/2 ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்க வேண்டும். தமிழகத்தின் மலையகத்து தேயிலை, காப்பி தோட்டங்கள் தனியர் குடும்பங்களுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டு இம்மலைவளங்களை தனியார் குழுமங்கள் சூறையாடி வருகின்றன. இவர்கள் தொழிலாளர்களை சுரண்டி, மனித உரிமைகளை மறுத்து வருகின்றனர். இத்தனியார் குழுமங்களின் 99 ஆண்டு குத்தகை முடிவடையும் நிலையில் அதனை ரத்து செய்து விட்டு அத்தோட்டங்களில் பாடுபட்டு கொண்டிருக்கும் தொழிலாளர் குடும்பத்திற்கு 5 ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்க வேண்டும். இதனால் பல சிறு தோட்ட உரிமையாளர்கள் உருவாகி உற்பத்தியை பெருக்க முடியும்.
8. தரிசு நிலங்கள் தனியார் குழுமங்களுக்கு இல்லை
தமிழகத்திலுள்ள தரிசு நிலங்களைத் தனியார் குழுமங்களுக்கு குத்தகைக்கு விடுவதை இம்மாநாடு கண்டிக்கிறது. தரிசு நில மேம்பாடு பெரிதும் அரசால் மட்டுமே செய்ய முடியும். தரிசு நிலங்களை பிற வருமானற்ற எளிய மக்களுக்கு, குடும்பத்திற்கு 5 ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்க வேண்டும்.
பொதுவாக பகிர்ந்தளிக்கப்படும் நிலங்கள் 49 ஆண்டுகள் குத்தகையாக அமை வேண்டும். நிலங்களை விற்கவோ, வாங்கவோ முடியாமல் சட்டல் செய்ப்பட வேண்டும். நிலங்களை
எளிய மக்கள் (SC/ST)
மிக பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
முற்படுத்தப்பட்டோர் என முன்னுரிமை அடிப்படையில்
நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
9. பஞ்சமி நிலங்கள் மீட்டெடுப்பு
வெள்ளையர் காலத்தில் ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்திற்கு வழங்கப்பட்ட நிலங்கள் சட்டத்திற்கு எதிராக தன்வசம் கைமாறி உள்ளன. இந்நிலங்களை மீட்டெடுத்து உரியவர்களிடம் கையளிக்க வேண்டும்.
