புதிய தமிழகம்’ கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்
தேதி: 02 அக்டோபர் 2000
இடம்: திருச்சி
அக்டோபர் 1,2 ஆகிய நாட்களில் திருச்சிராப்பள்ளியில் ‘புதிய தமிழகம்’ கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு சமுதாய அரசியல் தளங்களில் புதிய திருப்புமுனை – இரண்டு இலட்சம் மக்கள் பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல் சிந்தாமணி அறிஞர் அண்ணா சிலையிலிருந்து துவங்கி, பேரணி – இரண்டு நாள் மாநாடு – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.
புதிய தமிழகம் தொண்டர் மீது உள்ள காவல் துறை வழக்குகள் நீக்க கோரிக்கை – தாயகம் திரும்பும் தமிழீழ ஏதிலிகள் மீது சிங்கள இராணுவம் நடத்தும் கொடுமைகளுக்கு எதிர்ப்பு – தமிழக மீனவர் உயிர் காப்பாற்றக் கோரிக்கை – கட்சியின் மாநில மாநாடு அக்டோபர் 1, 2 தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு.
அக்டோபர் 12, திருச்சி – தஞ்சை மண்டலத்தில் குறிப்பிடும்படியான தளம் இல்லாவிட்டாலும் இதே மாநகர்ல் மாநாட்டையும் பேரணியையும் நடத்தியதன் மூலம் தம்முடன் மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார் ‘‘கிருஷ்ணசாமி…. யாருக்கும் பாதிப்புமின்றி ஒழுங்கான மாநாட்டுப் பேரணியை நடத்த முடியும். எத்தனை தலைவர்கள் வந்தாலும் தன்பக்கமும் எளிய (தலித்) மக்கள் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறார் கிருஷ்ணசாமி’’ (தினமணி (மதுரை) 04-10-2000: பக்.9). இம்மாநாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் மனித உரிமைகள், சமுதாய அடையாளங்கள், சமுதாய நீதி, தொழிலாளர்கள் மற்றும் பொதுச் சிக்கல்கள் ஆகிய தலைப்புகளில் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
