முதல் மாநில மாநாடு – கச்சத்தீவை மீட்க வேண்டும்
தேதி: 12 செப்டம்பர் 1998
இடம்: இராமநாதபுரம்
ராமநாதபுரம் செப் 11 கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மாநில மாநாடு புதிய தமிழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு ராமநாதபுரத்தில் நடைபெற்றது மாநாட்டின் 2 நாள் நிகழ்ச்சிக்கு அந்த கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார் மாநாட்டு அமைப்பாளர் கீழக்கரை எம்.எம்.கே.முகமதுஇபுராகிம் முன்னிலை வகித்தார் வக்கில் பிவி பக்தவச்சலம் அஜிதா கவிஞரின் குலாப் பேராசிரியர் சரஸ்வதி . பாலபிரஜாபதி அடிகள் விடுதலை ராஜேந்திரன் , டி.எஸ் .மணி மாவட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் கதிரேசன் மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் , அம்பேத்கார் மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவர் சென்னை செல்வம் உள்பட ஏராளமானோ பேசினார்கள் இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் வந்த பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் தீர்மானங்கள் இந்த மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நெல்லை மாஞ்சோலை தொழிலாளர் பிரச்சனையில் தவறாக நடந்து கொண்ட அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வேலை நீக்கம் செய்ய வேண்டும் இதன் தொடர்பாக நெல்லையில் அவரின் கொடும் பாவி எரிக்கப்படும் அங்கு நடந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் இந்தக் கோரிக்கை வலியுறுத்தி இந்த மாதம் 27ஆம் தேதி மதுரையிலிருந்து நெல்லை வரை நடைப்பயணம் போராட்டம் நடத்தப்படும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் கடந்த 5 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் தொடரப்பட்ட வழக்குகளைஅரசு வாபஸ் பெற வேண்டும் கண்டதேவி மேலவளவு கோவில்பட்டி உட்பட எல்லா ஊர்களிலும் ஆலயங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் கொடியங்குளம் சிபிஐ விசாரணை அறிக்கை வெளியிட வேண்டும் துப்புரவு பணிக்கு தாழ்த்தப்பட்டவர்கள் மலை ஜாதியினரை நியமிக்க வேண்டும் ஓய்வூதியம் தீண்டாமை எதிர்த்து போராடிய சமூக நீதி காவலர் இமானுவேல் சேகரன் உள்பட 7 அங்கீகரித்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்துப்பாக்கி 1989 வருட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மலை ஜாதியின் அவர்களுக்கும் அவர்களின் பாதுகாப்பு கருதி துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் அரசு வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் தியாகி இமானுவேல் சேகரனுக்கு சென்னையில் சிலை அமைத்து அவர் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் கச்சத்தீவை மீட்க பிடிக்கப்பட்ட பாபர் மசூதியே மீண்டும் கட்ட வேண்டும் கச்சத்தீவை மீட்க வேண்டும் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் கோவை குண்டுவெடிப்பு காரணம்காட்டி முஸ்லிம்களை கொடுமைப்படுத்த கூடாது தஞ்சை திருவாரூர் நாகை உள்ள மாவட்டங்களுக்கு சொந்தமான சொத்துக்களை அரசு கையாளப்படுத்தி தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் தேவஸ்தான சிவகங்கை ராமநாதபுரம் சமஸ்தானத்திற்குட்பட்ட தேவஸ்தானங்களை இந்து அறநிலைத்துறையோடு சேர்க்க வேண்டும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் ராமேஸ்வரம் திருச்சி இடையே அகால ரயில் பாதை போட வேண்டும் ஒவ்வொரு ஊர்களிலும் பாதுகாப்பு படை அமைக்க வேண்டும் மேற்கண்ட தீர்மானங்க ள் உட்பட மொத்தம் 60 தீர்மானங்கள் நிறைவேற்றின இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட தலைவர் கதிரேசன் அமைப்பாளர் சுரேஷ் கீழக்கரை எம் எம் கே.இபுராகீம் கீழக்கரை நசீராபர் வின் உள்பட பலர் செய்திருந்தார் சிறுவன் சாவு ராமநாதபுரத்தில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள சிலர் ராஜபாளையத்தில் இருந்து வேனில் வந்தார்கள் இவர்கள் ராமேஸ்வரத்தை சுற்றிப் பார்க்க ராமநாதபுரத்தில் இருந்து சென்றார்கள் மண்டபம் அருகே உள்ள வேதாளம் கிராமத்தைச் சேர்ந்த நாயின முகமது என்பவரின் மகன் சிறுவன் மலிக் மீது அந்தவன் மோதியது சிறுவன் அந்த இடத்தில் துடித்து துடித்து செத்துப் போனான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வேன் டிரைவர் சுரேஷ் கைது செய்தனர்
