புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மே ஒன்று அன்று வாழ்நாள் பிறவி போராளி மாண்புமிகு டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க மாபெரும்8 மணி வேலை உரிமை மீட்பு பேரணி திருச்சி மாவட்டத்தின் சார்பாக நம்பர்1 டோல்கேட்டில் நடைபெற்றது. இப்பேரணிக்கு மாநில துணைக் கொள்கை பரப்பு செயலாளர் வாலையூர் குணா அவர்கள் வழிகாட்டுதலுடன் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் மா.தினகரன் தலைமை தாங்கினார் . திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பிச்சமுத்து, திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் சின்னையன் ,மாநகர் மாவட்ட செயலாளர் கோ சண்முகம், தெற்கு மாவட்ட இணைச்செயலாளர் அந்தநல்லூர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி குழு உறுப்பினர் விஜய பிரபு நன்றி உரையாற்றினார். இப்பேரணிக்கு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் சார்பாக பல்வேறு அணிகளின் செயலர்கள் இணை துணைச் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் பேரூர் செயலாளர்கள் கிளைச் செயலாளர் உட்பட பிறந்தநாள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
8 மணி நேர உரிமை மீட்பு பேரணி – திருச்சியில் நடைபெற்றது
இடம்:திருச்சி
தேதி:1 மே 2023
முந்தையது
தொழிலாளர் உரிமை மீட்பு பேரணி – கடையநல்லூர் காவல்துறை திட்டமிட்டு அனுமதி மறுப்பு – தடையை மீறி பேரணி
தேதி: 1 மே 2023
இடம்: திருச்சி
அடுத்தது
விஷ சாராய மரணம் – விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு
தேதி: 1 மே 2023
இடம்: திருச்சி
