பரம்பிக்குளம் – ஆழியாறு உழவர்களுக்கான உரிமைப் போராட்டம்

![]()
செப்டம்பர் 1984, கோவையில் பாரதீய தலித் பேந்தர் இயக்கம் சார்பில் வ.உ.சி. திடலில் இரண்டாவது மாநில மாநாடு – தலித் வாய்ஸ் ஆசிரியர் வீ.டி.ராஜசேகர் பங்கேற்பு – பார்வையாளர்கள் பகுதியில் சாதி வெறியர்கள் காரை புகுத்தி வன்முறை – கூட்டத்தைக் கலைக்க முயற்சி – முறியடிப்பு.
– பாரதீய தலித் பேந்தர் இயக்கத்தின் சார்பில் மாநில அளவில் சூழ்நிலைகளுக்கேற்ப தேர்தலில் போட்டியிட முடிவு – முற்போக்கு இயக்கங்களின் ஆதரவுடன் போட்டியிடலாம் என அறிவிப்பு – சவீதா அம்பேத்கர் திருப்பதி தொகுதியில் போட்டி – இராம்தாஸ் அத்வாலே மகாராஷ்டிராவில் போட்டி – தலைவர் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட முடிவு.
– பொள்ளாச்சி (தனித்) தொகுதியில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி (1984).
– நவம்பர் 10, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சங்கீதா மருத்துவமனையைத் திறந்து வைத்தார் மு.கண்ணப்பன், சி.டி.தண்டபாணி, மு.இராமநாதன், பொங்கலூர் பழனிசாமி மற்றும் தி.மு.க. முன்னனி பிரமுகர்கள் பங்கேற்பு (1984).
– இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க போராட்டம் – போராட்டம் பங்கேற்பு – 15 நாட்கள் சிறை. (1985)
– பரம்பிக்குளம் – ஆழியாறு உழவர்களுக்கான உரிமைப் போராட்டம் (1988) (கோவை மாலைமுரசு இதழில் தொடர் கட்டுரைகள் வெளியீடு).
– செப்டம்பர் 11 புறம்போக்கு நில விவசாயிகளுக்கு தண்ட தீர்வை உயர்வை கைவிடுக – மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோவை டாக்டர் கிருஷ்ணசாமி மனு. (1998)
– போடி மாவட்டம் மீனாட்சிபுரம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
கணிசமான நிதி உதவி (1989).
– செப்டம்பர் 15 தீண்டாமை ஒழிப்புப்பணி – கோவை டாக்டர் கிருஷ்ணசாமிக்கு விருது! கலெக்டர் இராமன் வழங்கினார். (கோவை மாலைமுரசு)
– சாதி கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் – கோவை டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை. (கோவை மாலைமுரசு)
– விமான நிலையங்களில் குரூப் IVபணியிடங்களில் காண்ட்ராக்ட் முறையைப் புகுத்தி தொழிலாளர் வயிற்றில் அடிப்பதா – கோவை டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம். (கோவை மாலைமுரசு)
– இரண்டு தலைமுறைகளாக இரண்டு தாழ்த்தப்பட்ட கிராமங்கள் நடைபாதையின்றி தவிப்பு – 30 அடி அகல நடைபாதை வயல் ஆனது – ஆக்கிரமிப்பிலிருந்து 10 ஏக்கர் நிலம் மீட்பு – டாக்டர் கிருஷ்ணசாமி புகாரின் அடிப்படையில் அன்றைய கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் (ஆளுநர் ஆட்சிக் காலத்தில்) கலெக்டர் நடவடிக்கை. (கோவை மாலைமுரசு).

