சாலை விபத்துக்கள் – உயிரிழப்புகளை தடுத்திட உரிய நடவடிக்கை எடுத்திடுக.!

செய்திகள்
s2 55 Views
2
Published: 15 Feb 2026

Loading

தூத்துக்குடி சாலை விபத்து: உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்.!
சாலை விபத்துக்கள் – உயிரிழப்புகளை தடுத்திட உரிய நடவடிக்கை எடுத்திடுக.!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பல்லாக்குளத்தைச் சேர்ந்த குருசாமி, அவரது சகோதரி முத்துலட்சுமி மற்றும் குழந்தைகள் முகிலரசன், சுமித்ரன், முருகம்மாள் உட்பட ஐந்து பேர் இன்று மாலை வைப்பார் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்மைக்காலமாக நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அடிக்கடி நிகழ்வதும், அதனால் உயிரிழப்புகள் அதிகரிப்பதும் கவலையளிக்கிறது. இதனைத் தடுக்கப் போக்குவரத்துத் துறை, காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணைந்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்குத் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
15.02.2026