புதிய தமிழகம் கட்சியின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

செய்திகள்
s2 57 Views
Dr Krishnasamy
Published: 14 Jan 2026

Loading

புதிய தமிழகம் கட்சியின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

தமிழ் மக்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளாம் உழவர் திருநாளில், உலகெங்கும் வாழுகின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“பொங்குதல்” என்றால் சமைத்தல், நிறைவு, மகிழ்ச்சி எனப் பல்வேறு அர்த்தங்கள் உண்டு. எனினும், இவை அனைத்துமே உழவையும் அதன் விளைச்சலையும், அதன் மேன்மையையும் உயர்த்திப் பிடிப்பதே தைத்திருநாளாம் பொங்கல் திருநாளின் உன்னத நோக்கமாகும்.

“உழவின்றி உணவில்லை; உணவின்றி உயிரில்லை” – இது மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்கும் பொருந்தும் இயற்கையின் நியதியாகும். உழவுத் தொழில் செய்து உலகிற்கு உணவளிக்கும் உழவர்களையும், உழவின் மேன்மையையும் போற்றும் இந்நாளில், தமிழ் மக்கள் அனைவரும் மகிழ்வுற்று இருக்கவும், இம்மண்ணில் ஒருவர் கூட உணவின்றி அல்லல்படும் நிலை அறவே ஒழியவும் நாம் உறுதி கொள்வோம்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் கொள்கையற்று செயல்பட்ட கும்பலை வீழ்த்தி, தமிழ் மக்களுக்கான விடிவுகாலத்தை உருவாக்கவும்; ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்களிக்கும் “அனைத்து மக்களுக்குமான கூட்டணி ஆட்சி” அமையவும் அனைத்து தமிழ் மக்களும் உறுதியேற்க விளைகிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
14.01.2026