“டிசம்பர் 15, திங்கட்கிழமை, புதிய தமிழகம் கட்சியின் 28-ஆம் ஆண்டு விழாவை எளிய முறையில் சிறப்பாகக் கொண்டாடுவோம்!”
49 Views

![]()
“டிசம்பர் 15, திங்கட்கிழமை,
புதிய தமிழகம் கட்சியின் 28-ஆம் ஆண்டு விழாவை எளிய முறையில் சிறப்பாகக் கொண்டாடுவோம்!”
புதிய தமிழகம் கட்சி தொடங்கப்பட்டு 27 ஆண்டுகள் நிறைவடைந்து, டிசம்பர் 15-ஆம் தேதி அன்று 28-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு, 2026 ஜனவரி 7-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் ஏழாவது மாநில மாநாடு மதுரையில் சிறப்பாக நடத்தப்பட உள்ளது. அதன் பொருட்டு, அனைத்து நிர்வாகிகளும் தேனீக்களைப் போல கிராமம் தோறும் சென்று கிளை நிர்வாகிகளைச் சந்தித்து, வாகனங்கள் அமர்த்தும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறீர்கள்.!
எனவே, டிசம்பர் 15-ஆம் தேதி அன்று மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் குறைந்தது 4 அல்லது 5 கிளைகளில் புதிய தமிழகம் கட்சி கொடியை ஏற்றி, கிராம மக்களுக்கு இனிப்புகளை வழங்கி, மக்களோடு மக்களாக நின்று, எளிய முறையில், அதே சமயம் எழுச்சிகரமாக சிறப்புடன் கொண்டாடிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
13.12.2025






