அரசியல் லாபத்திற்காக காவிரியை தாரை வார்க்கும் திமுக அரசை கண்டித்து பெரம்பலூரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD EX-MLA அவர்களின் ஆணைக்கிணங்க பெரம்பலூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பாக இன்று (16-10-23) திங்கட்கிழமை சரியாக காலை 11 மணியிலிருந்து 12 மணி வரை அரசியல் லாபத்திற்காக தமிழகத்தின் காவேரி நதிநீர் உரிமையை தாரை வார்க்கும் திமுக அரசை கண்டித்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அம்மா உணவகம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் த.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில்
காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும்
அரசியல் லாபத்திற்காக காவிரி நதி நீர் விவகாரத்தில் மௌனம் காக்கும் திமுக அரசை கண்டித்தும்
உச்சநீதிமன்ற ஆணையின்படி தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் பங்கை உடனடியாக வழங்கிட வேண்டியும்
கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் குணா, மதியழகன், கபிலன், மணிகண்டன், பிரகாஷ், விமல் மற்றும் பெண்கள் பெருந்திரளாக பங்கேற்றார்கள்.
