4 வது மாநில மாநாடு – சமநீதி மாநாடு

இடம்:கோயம்புத்தூர்
தேதி:14, 15 ஏப்ரல் 2005

நான்காவது மாநில மாநாடு கோவையில் 2005 ஏப்ரல் 14, 15 ஆகிய தேதிகளில்” தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு கோரி”  சமூக நீதி- கோவை பிரகடனம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இந்தியாவின் முன்னாள் பிரதமர் திரு வி.பி.சிங் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

  • Scan 20230207 (2) Copy
  • Scan 20230207 (2)
  • Scan 20230207 (3) Copy
  • Scan 20230207 (3)
  • Scan 20230207 (4) Copy
  • Scan 20230207 (4)
  • Scan 20230207 (5) Copy
  • Scan 20230207 (5)
  • Scan 20230207 (6) Copy
  • Scan 20230207 (6)
  • Scan 20230207 (7) Copy
  • Scan 20230207 (7)
  • Scan 20230207 (8) Copy
  • Scan 20230207 (8)
  • Scan 20230207 (9) Copy
  • Scan 20230207 (9)
  • Scan 20230207 (10) Copy
  • Scan 20230207 (10)
  • Scan 20230207 (11) Copy
  • Scan 20230207 (11)
  • Scan 20230207 (12) Copy
  • Scan 20230207 (12)
  • Scan 20230207 (13) Copy
  • Scan 20230207 (14) Copy
  • Scan 20230207 (15) Copy
  • Scan 20230207 (16) Copy
  • Scan 20230207 (17) Copy
  • Scan 20230207 (18) Copy
  • Scan 20230207 (19) Copy
  • Scan 20230207 (20) Copy
  • Scan 20230207 (21) Copy
  • Scan 20230207 (22) Copy
  • Scan 20230207 (23) Copy
  • Scan 20230207
  • Scan 20230208
  • Scan 20230207 (2) Copy
  • Scan 20230207 (2)
  • Scan 20230207 (3) Copy
  • Scan 20230207 (3)
  • Scan 20230207 (4) Copy
  • Scan 20230207 (4)
  • Scan 20230207 (5) Copy
  • Scan 20230207 (5)
  • Scan 20230207 (6) Copy
  • Scan 20230207 (6)
  • Scan 20230207 (7) Copy
  • Scan 20230207 (7)
  • Scan 20230207 (8) Copy
  • Scan 20230207 (8)
  • Scan 20230207 (9) Copy
  • Scan 20230207 (9)
  • Scan 20230207 (10) Copy
  • Scan 20230207 (10)
  • Scan 20230207 (11) Copy
  • Scan 20230207 (11)
  • Scan 20230207 (12) Copy
  • Scan 20230207 (12)
  • Scan 20230207 (13) Copy
  • Scan 20230207 (14) Copy
  • Scan 20230207 (15) Copy
  • Scan 20230207 (16) Copy
  • Scan 20230207 (17) Copy
  • Scan 20230207 (18) Copy
  • Scan 20230207 (19) Copy
  • Scan 20230207 (20) Copy
  • Scan 20230207 (21) Copy
  • Scan 20230207 (22) Copy
  • Scan 20230207 (23) Copy
  • Scan 20230207
  • Scan 20230208

Loading

எளிய மக்களுக்கு வலுவூட்டும் சமநீதி மாநாடு
‘புதிய தமிழகம்’ மாநில மாநாடு
ஏப்ரல் 14ஆம் நாள், 2005, கோவை வ.உசி. பூங்கா
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட
“எளியமக்களின் கோவைப் பிரகடனம்”

Kovai Pirakadanam

இந்தியாவின் தொல்குடிகளும், மண்ணின் மக்களும் அறிவுச் சமயங்களான பௌத்தம், சமணம் ஆகிய நெறிகளை பின்பற்றி வாழ்ந்த அறவழியினரும், உழைப்பால் நாட்டை வாழ்விக்கும் எளிய மக்கள் (SC / ST) நெடுங்காலமாக சமுதாய பொருளியல் தளங்களில் ஒடுக்கப்பட்டும், அடக்கப்பட்டும் வாழ்வது இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே அவலம் சேர்க்கிறது. மண்ணுரிமையும், மனித உரிமையும், வாழ்வுரிமையும் மறுக்கப்பட்டு எளிய மக்கள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சமுதாய வாழ்வில் ஆற்றாது அழுத கண்ணீர் வடித்த இம்மக்கள் இசுலாமிய, கிருத்துவ அறச்சமயங்களை தழுவியவர்களில் பெரும்பான்மையினர்.

நவீன கால சமுதாயப் புரட்சியாளர்களான மகாத்மா ஜோதிபாபூலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் சமுதாயப் போராட்டங்களால் விழிப்பும் எழுச்சியும் பெற்றனர். ஆனால் அவர்கள் பெறவேண்டிய உரிமைகள் பொய்யாகிப் போய்விட்டன. இந்திய அரசியல் சட்டம் வழங்கிய உரிமைகளும் உதவிகளும் முழுமையாக இம்மக்களைச் சென்றடையவில்லை. இந்திய அரசியல் சட்டப்படி இவர்களுக்கு வழங்கிய சமுதாய நீதி ஏற்பாடான இடஒதுக்கீடு நெறியை முழுமையாகச் செயல்படுத்தப்படாமல் எதிர்ப் புரட்சியாளர்கள் செயல்படுமட்டத்தில் திட்டமிட்டு தோற்கடித்துவிட்டனர்.

அண்மைக்கால தனியார் மயம், உலக மயம் ஆகியன எளியமக்கள் இட ஒதுக்கீடு வழி பெற்ற வாய்ய்புகள் தொழில் துறையிலும், நிர்வாகத் துறையிலும் குறைத்துவிட்டன. வணிகம், சிறுதொழில் போன்ற துறைகளிலும் இம்மக்கள் பங்கு பெற முடியவில்லை. வேளாண்மையில் கூவித் தொழிலாளர்களாகவும், துரத்தப்படுகின்றனர். சுமையான தொழில் செய்வோராக மட்டுமே துரத்தப்படுகின்றனர். வாழ்வில் நீண்டகாலம் அவலங்களைச் சுமந்தவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். எளிய மக்களின் இளைய தலைமுறையினர் இருண்ட எதிர்காலத்தை எண்ணி மனம் நொந்து கொந்தளித்த வண்ணம் உள்ளனர். அரசியலில் மக்களாட்சி பெயரால் ஏமாற்றப்படுவதையும், சமுதாய தளத்தில் ஒதுக்குமுறைகளையும் சந்தித்து வருகின்றனர். வாழ்வில் இருள் சூழ்ந்த நிலையை மட்டும் கண்டுவரும் எளிய மக்களின் இளம் சந்ததியினர் ‘ஓட்டுமுறை’ யில் நம்பிக்கை இழந்து ‘வேட்டுமுறை’ க்கு திரும்பும் நிலை உருவாகி வருவது வருந்தத்தக்கது. எளிய மக்களின் உடன் பிறப்புகளான மலை மக்கள் பொதுவுடைமை பெயரில் ஆந்திர மாநிலத்தில் ஆயுதமேந்தி வருவது நாட்டின் நல்லவர்கள் சிந்திக்க வேண்டிய செய்தியாகும்.

இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே, தமிழகத்தின் எளிய மக்களான மள்ளர்களும் (தேவேந்திரகுல வேளாளர்கள்), ஆதி-திராவிடர்களும், அருந்ததிய மக்களும், சக ஒடுக்கப்பட்ட மக்களும், தங்களின் மீது சுமத்தப்பட்ட அனைத்து ஒடுக்கு முறைகளையும் முற்றுமாக தூக்கி எறிந்து, உயிரையும் கொடுத்து தங்களின்

• மண்ணுரிமை
• மனித உரிமை
• வாழ்வுரிமை
• மேன்மை / அடையாளங்கள்
• மக்களாட்சி உரிமை

ஆகியவற்றை மீட்டெடுக்க ‘புதிய தமிழகம்’ தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் தொண்டர்களாக அணி வகுக்கத் தயாராக உள்ளனர். இம்முயற்சியால் இந்திய தமிழக மக்கள் அனைவரின் கனிவையும் பரிவையும் நாடுகிறோம்.

2005 Samuka Neethi Confrence Covai Book Cover Page 0001

டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்களின் மாநாட்டுப் பேருரை

அனைவருக்கும் வணக்கம்.

மத்திய, மாநில அரசு மற்றும் பொது நிறுவனங்களில் கடந்த 57 ஆண்டு காலமாக வெறும் கொள்கை அளவில் மட்டுமே உள்ள தாழ்த்தப்பட்ட, மிகவும் பின்தங்கிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை எல்லாவிதமான பாதுகாப்புகளோடு சட்டமாக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியும், இந்திய அரசியல் சாசனத்தில் பட்டியல் இன, பழங்குடி மக்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு துறைகள் முறையே 22.5% மற்றும் 19% இட ஒதுக்கீட்டையும் முறையாக அமலாக்காததால் பின்தங்கியுள்ள பத்து லட்சத்திற்கு மேற்பட்ட பணியிடங்களை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிரப்பிட வலியுறுத்தியும், இந்த பத்து லட்சம் பின் தேங்கல் பணியிடங்களை நிரப்பிடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் தனி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க வலியுறுத்தியும், தனியார் மயம், உலகமயம், தாராளமயம் போன்ற கொள்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்ய, அனைத்து தனியார் துறைகளிலும் இடஒதுக்கீட்டை சட்டமாக்க வலியுறுத்தியும், நிலமற்ற ஏழை, எளிய மக்களுக்கு, குடியிருக்க 3 செண்ட் மனை பட்டாவும், விவசாயம் செய்ய குடும்பத்திற்கு 5 ஏக்கர் நஞ்சை நிலம் வழங்க வலியுறுத்தியும், வீட்டுக்கு ஒருவருக்காவது உத்தரவாதமான வேலை வழங்க வலியுறுத்தியும், நடைபெற்று கொண்டு இருக்கின்ற வரலாற்று சிறப்பு மிக்க சமநீதி மாநாட்டில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு இருக்கின்ற தேவேந்திர குல, ஆதிதிராவிட, அருந்ததிய இன சொந்தங்களே, இளைஞர் அணி, மாணவர் அணி நண்பர்களே, புதிய தமிழகம் கட்சியினுடைய அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை பொறுப்பாளர்களே, புதிய தமிழகம் கட்சியின் உயிர் மூச்சாக விளங்குகின்ற தொண்டர்களே, மத்திய, மாநில அரசுதுறை ஊழியர்களே, மாணவ சகோதரர்களே, உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கம்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இருக்கக் கூடிய இந்தியாவினுடைய உள்துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்ற வாய்ப்பை நடைமுறையில் காட்டிய, முன்னாள் உள்துறை அமைச்சர் திருமிகு யோகேந்திர மக்வனா அவர்களுக்கும், ஏறக்குறைய 25 ஆண்டு காலமாக தமிழகத்தில் தலித் பேந்தர் இயக்கத்தை நாங்கள் துவங்கிய காலத்திலிருந்து இன்று வரையிலும் உற்ற நண்பராக இருந்து வருகின்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. இராம்தாஸ் அத்வாலே அவர்களுக்கும், எனக்கு முன்பு உரையாற்றி அமர்ந்து இருக்கின்ற எனது ஆருயிர்த் தோழர் டி.எஸ்.எஸ். மணி, மீனவர் கூட்டமைப்பு அமைப்பாளர் தோழியர் திருமதி. பாத்திமா, புதிய தமிழகம் மகளிர் அணி அமைப்பாளர் திருமதி தீபா, சகோதரர்கள் வெற்றி, வின்னி மற்றும் அரசு ஊழியர்கள் மனோகரன், திரு. சின்னசாமி, திரு. ஜெகநாதன், திரு. தங்கசாமி, திரு. தங்கவேலு ஆகிய அனைவருக்கும் மாநாடு வரவேற்புரை நிகழ்த்திய மா. லட்சுமிநாராயணன் அவர்களுக்கும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாகவும், என் சார்பாகவும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு நடைபெற கூடிய இரண்டாவது மாநாடு. ஆனால், புதிய தமிழகம் கட்சிக்கு இது நான்காவது மாநாடு ஆகும். தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பாக இருந்த நாம் தலித் கூட்டமைப்பாக பரிணமித்து, 1997 ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 17ல் ‘புதிய தமிழகமாக இம்மண்ணில் உதயமானோம். புதிய தமிழகம் கட்சியின் கொள்கைகளை, கோட்பாடுகளை தொலைநோக்கு பார்வைகளை உலகிற்கு அறிவித்திட தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்த மண்ணாம், இராமநாதபுரத்தில் 1998ம் ஆண்டு செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம்.

மீண்டும் இரண்டே ஆண்டில் நமது இரண்டாவது மாநில மாநாட்டை 2000ம் ஆண்டு அக்டோபர் 1, 2 தேதிகளில் திருச்சியில் நடத்தி அரசியல் திருப்புமுனையை உருவாக்கிக் காட்டினோம். அம்மாநாட்டிற்கு பின்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் நமக்கு பத்தும், நம்மால் இன்னொருவருக்கு ஒன்பது தொகுதிகளும் போட்டியிட கிடைத்தன. 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். எனினும் துவண்டுவிட மாட்டோம் என்பதை நிரூபிக்கக் கூடிய வகையிலே நெல்லை மாநகரில் 2002ம் ஆண்டு செப்டம்பர், 6, 7, 8 ஆகிய தேதிகளில் வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டை நடத்திக் காட்டினோம். அம்மாநாட்டில் தான் முதன் முறையாக எளிய மக்களின் வாழ்வுரிமைக்கான முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

இப்பொழுது மூன்று ஆண்டு காலம் கழித்து கோவை மாநகரில் எளிய மக்களின் மனித உரிமை, வாழ்வுரிமை, மண்ணின் மைந்தர்களின் மண்ணுரிமைக்கான போர் பிரகடன மாநாட்டை அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாளில், ஏப்ரல் 14ம் தேதி கோவையில் இன்று மகத்தான சமநீதி மாநாட்டை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

தமிழகம் மட்டுமல்ல, இந்திய திருநாட்டின் வரலாற்றில் எளிய மக்களாம் பட்டியல், பழங்குடி இன மக்களாம் தேவேந்திரகுல, ஆதிதிராவிட, அருந்ததிய மக்களின் மண்ணுரிமையை மீட்டு எடுப்பதற்கான முதல் மாநில மாநாடு இது. புரட்சிகரமான பொதுவுடைமை இயக்கங்களின் தீர்மானங்களில் வேண்டுமானால் அடித்தள மக்களான தேவேந்திரகுல, ஆதிராவிட, அருந்ததிய மக்களின் மண்ணுரிமை பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கலாம். ஆனால், கடந்த 13 பொதுத் தேர்தல்களில் நம்மிடத்தில் ஓட்டு பொறுக்கி சென்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த எந்த கட்சியும் எளிய மக்களான நமது மக்களின் அடிப்படைத் தேவையை புரிந்து கொள்ளவும் இல்லை. புரிந்து கொண்டாலும் அதை வெளிப் படுத்தத் தயார் இலலை. எனவே, எந்த கட்சியும் நமது மண்ணுரிமையை பற்றி வாய் திறக்கவே இல்லை. சமுதாய அரங்கு ஆகட்டும், அரசியல் அரங்கு ஆகட்டும் மற்றவர்கள் தொட அஞ்சுவதை, தொட்டு வெற்றி காண்பதே புதிய தமிழகத்தின் வழக்கம். (கைதட்டல்கள்)

அந்த வரிசையில்தான் நமக்காக எவரும் பேச முன்வராத மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமையைப் பற்றி பேசுவதற்கு மட்டுமல்ல, அதனை செய்து முடிப்பதற்கும், இம்மாநாட்டை கூட்டி இருக்கிறோம். இந்த மாநாட்டில் வழக்கம் போல் அனைவருமே சொந்த செலவிலே கலந்து கொண்டு இருக்கிறீர்கள். இதுவே புதிய தமிழகத்தினை யாராலும் எப்பொழுதும் வீழ்த்த முடியாது என்பதற்கு அத்தாட்சி. (கைதட்டல்)

இந்த மாநாட்டிற்கு, சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஜனாதிபதி மேதகு கே.ஆர். நாராயணன் அவர்களும், முன்னாள் பிரதமர் மேதகு வி.பி.சிங் அவர்களும் அழைக்கப்பட்டு இருந்தார்கள். 10 கடந்த டிசம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தில்லியில் முன்னாள் பிரதமர் மேதகு வி.பி.சிங் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தனியார் துறையில் இடஒதுக்கீடு பற்றிய கருத்தரங்கை முடித்து விட்டு உங்களை எல்லாம் வழி அனுப்பி வைத்துவிட்டு, மறுதினம் முன்னாள் ஜனாதிபதி மேதகு கே.ஆர். நாராயணன் அவர்களை சந்தித்து அவர்களின் அனுமதியுடன் தான் இம்மாநாட்டை ஏப்ரல் 14ம் தேதி நடத்த முடிவு செய்தோம்.

வழக்கம் போல், தமிழக அரசியல் குறுக்கீடுகளும், கூட்டணி குறுக்கீடுகளும் அவர்கள் இருவரையும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் செய்துவிட்டது. எனினும், அவர்கள் நம்முடைய கொள்கைகளோடு, கோட்பாடுகளோடு செயல்பாடுகளோடு இரண்டற கலந்து இருக்கிறார்கள். விரைவில் நமது நிகழ்ச்சியில் அவர்கள் பங்கு ஏற்கக் கூடிய வாய்ப்பை உருவாக்கி தருவேன் என உங்களிடத்தில் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.’

தடைகளும், தடங்கல்களும், இடையூறுகளும், புதிய தமிழகத்திற்கு ஒன்றும் புதியது அல்ல. இத்தடைகள் எல்லாம் தாண்டி நடைபோடுவதுதான் புதிய தமிழகத்தின் சாதனை என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். நம்மைப் பொறுத்தமட்டிலும், நமது இலட்சியத்தில் தெளிவாக இருக்கின்றோம். கொள்கையில், கோட்பாடுகளில் உறுதியாக இருக்கின்றோம். இன்று மட்டும் அல்ல, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பாக துவங்கப்பட்ட காலத்திலிருந்து புதிய தமிழகமாக மலர்ந்து வீரநடைபோட்டு கொண்டு இருக்கக் கூடிய இன்றைய காலம் வரையிலும், சாதனைகளை நிகழ்த்திக் காட்டுவதில் தான் சாதனை படைத்து வருகிறோம் என்பதையெல்லாம் நீங்கள் அறிவீர்கள். சுதந்திரத்தை பற்றி, சமத்துவத்தைப் பற்றி, சகோதரத்துவத்தைப் பற்றி, சம உரிமையைப் பற்றி, சமநீதியைப் பற்றி பேசாதவர்கள் யார் இருக்கிறார்கள். ஆனால், உரிமையை நிலைநாட்ட, சமத்துவத்தை நிலைநாட்ட, நடைமுறைக்கு வாருங்கள் என்று சொன்னால் எல்லோரும் ஓடி போய் விடுகிறார்கள். நாம் இந்நாட்டினுடைய மூத்த குடிமக்கள், இம்மண்ணின் மைந்தர்கள், ஆனால், இன்றோ தாழ்த்தப்பட்ட மக்கள்! பொது தேநீர் கடைகளில் உள்ளே செல்ல முடியவில்லை.

ஒரே குவளையில் தேநீர் அருந்த முடியவில்லை. பொது கோயில்களில் வழிபாடு செய்ய முடியவில்லை. தேர்வடம் பிடிக்க முடியவில்லை. பொதுக் கிணறுகளில் குடிநீர் எடுக்க முடியவில்லை. பொது பேருந்துகளில் சமமாக உட்கார்ந்து செல்ல முடியவில்லை. பொது வீதிகளில் செருப்பு போட்டு நடக்க முடியவில்லை.

சாதி ஆதிக்கம் படைத்தோர் முன்பு மிதிவண்டியில் கூட ஏறி செல்ல முடியவில்லை. பொது மயானத்தில் பிணத்தை கூட புதைக்க முடியவில்லை. இதையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டிய காவல் துறையோ கைகட்டி பார்த்து கொண்டு இருக்கிறது. சட்ட உரிமையை நிலைநாட்ட, சமத்துவத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட வாருங்கள் என்று அழைத்தால், நமக்கு துணையாக அதிகார வர்க்கமும், ஆளும் கட்சியும் வருவதில்லை.

எனவே, இந்நாட்டினுடைய அடித்தள மக்களாம் தேவேந்திரகுல, ஆதிதிராவிட, அருந்ததிய மக்களின் சட்ட ரீதியான உரிமையை நிலைநாட்டும் பொறுப்பு புதிய தமிழகத்தின் தோள்களில் சுமத்தப்பட்டது.

அதன் காரணமாக 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறையால் சூறையாடப்பட்ட கொடியன்குளம் கிராம மக்களின் உரிமைகளை நாம் போராடி நிலைநாட்டினோம்.

கொடியன்குளம் கிராமத்தில் ஏற்பட்ட பாதிப்பால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் பெருமைமிகு அடையாளங்களை எல்லாம் இழந்து மதம் மாற முடிவு போர்ப் பிரகடனம் 12 செய்தபொழுது, அவர்களின் பெருமைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, அவர்களின் மனங்களை மாற்றி ‘தேவேந்திரகுல வேளாளர்’ அடையாளங்களோடு வாழவும், தமிழகத்திற்கே வழிகாட்டும் மக்களாக மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறார்கள். ‘தோல்வி மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள். தாழ்வு மனப்பான்மையை தகர்த்து எறியுங்கள். உன்னையே நீ எண்ணிப் பார்’ என்று உணர்வு ஊட்டப்பட்ட காரணத்தால், சமூக ஒடுக்கு முறைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் எதிராக போர் பரணி பாடும் லட்சக்கணக்கான இளைஞர்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள். பள்ளு என்றும், பறை என்றும், சக்கிலி என்றும் அவமரியாதை செய்யப்பட்ட நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தேவேந்திரகுல வேளாளர்களாக, ஆதிதிராவிடர்களாக, அருந்ததியர்களாக என அடையாளங்களை மீட்டு எடுக்க முடிந்து இருக்கிறது என்று சொன்னால் அது புதிய தமிழகத்தால் நடந்த மாற்றமே.

சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் தேர்வடம் பிடித்து இழக்கும் உரிமை தேவேந்திரர்களுக்கு இல்லை என்று சொன்னார்களே நீதிமன்றம் வரை சென்று, நமது உரிமை நிலைநாட்டியது நமது புதிய தமிழகம்தானே! மாவீரர் சுந்தரலிங்கனார் பெயரில் போக்குவரத்துக் கழகம் தரப்பட்டது என்று சொன்னால் அது புதிய தமிழகத்தின் சாதனை தானே.

தமிழக அரசு துறைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான வேலை வாய்ப்பை பற்றிய கொள்கை அறிக்கையை பெற்றது. அதனால் எண்ணற்றோர் வேலை வாய்ப்பை பெற்றது புதிய தமிழகத்தினாலே! நெல்லை மாவட்டம் மாஞ்சோலை, கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, தேனி மாவட்டம் ஹைவேஸிஸ் போன்ற தேயிலைத் தோட்டங்களில் வாழும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொத்தடிமைத் தளத்திலிருந்து விடுவித்தும் ரூ.53.00 சம்பளத்தி லிருந்து ரூ.73.00 ஆக அவர்களுக்கு சம்பளம் உயர்வு பெற்று கொடுத்தது, புதிய தமிழகம் தானே!

அதேபோல் சமுதாய அரங்கில் மதுரை மாவட்டம் மேலவளவு கிராமத்தில் பறையர் சமுதாயத்தைச் சேர்ந்த 6 பேர் பட்டப் பகலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, தமிழகத்தினுடைய வரலாற்றில் எளிய மக்கள் (தலித் மக்கள்) ஒற்றுமையை நிலைநாட்டக் கூடிய வகையில் 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி அன்று தலித் பேரணியை நடத்திக் காட்டியது புதிய தமிழகம் மட்டும் அல்லவா?

கோவை மாவட்டத்தில் சோமனூர் பகுதிகளில் அருந்ததியர் களுக்கு எதிராக இழைக்கப்படும் தீண்டாமை கொடுமைகளை கண்டித்தும், இரட்டை குவளை உடைக்கும் போராட்டம் நடத்தியும், கோவை சோமனூர் வேலாயுதபாளையம் மலை கோவிலில் அருந்ததியர்கள் வழிபாடு செய்யும் உரிமையைப் பெற்று தந்தது புதிய தமிழகம் தானே!

அடுக்கு அடுக்காக நாம் தொடுத்த போராட்டங்களாலே பெரும்பாலான நமது சமுதாய மக்கள் சாதிய, கொடுமைகளிலிருந்து பெருமளவு விடுபட்டு இருக்கிறோம். ஆனால் முற்றாக இன்னும் விடுபடவில்லை.

சமுதாய தளத்தில் நம்முடைய ஒற்றுமையின் காரணமாகவும், நமது கட்டுப்பாட்டின் காரணமாகவும், நம்மை வஞ்சித்த எல்லா கட்சிகளின் கொடிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, சிவப்பு, பச்சை வர்ண கொடியின் கீழ் அணி திரண்டு இருக்கின்ற காரணத்தால், இப்பொழுது நாம் ஒரு பாதுகாப்பை பெற்று இருக்கிறோம். எனினும் பொருளாதார தளத்திலும், அரசியல் தளத்திலும் நம்முடைய உரிமைகளை, பங்குகளை நிலைநாட்ட முடியவில்லை.

சுதந்திரம் பெற்று 57 ஆண்டுகள் ஓடிவிட்டது. லட்சக்கணக்கான மக்களுக்கு இன்னும் குடியிருக்க 3 சென்ட் வீட்டுமனை கூட மத்திய, மாநில அரசுகளால் வழங்க முடியவில்லை. உழைக்கத் தயாராக இருக்கிறோம். விளை நிலங்கள் நம்மிடத்தில் இல்லை.

மண் குடிசைகளில், ஓலைக் குடிசைகளில் வாழும் அவல நிலைமை, ஆண்டுக்கு இரண்டு வேட்டி, சட்டை கூட எடுத்து கட்ட முடியாத  நிலைமை. இந்த அவலங்கள் எல்லாம் ஒரு பக்கம் இருப்பினும், நம்மிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்ட நிலங்கள் இந்த மண்ணிற்கு எந்தவிதமான சம்பந்தம் இல்லாதவர்கள் இடத்தில், கோவில் நிலங்களாகவும், மடங்கள் நிலங்களாகவும், ஆதீன நிலங்களாகவும், அறக்கட்டளை நிலங்களாகவும், மற்றும் ஜமீன்கள், முன்னாள் மன்னர்கள். இன்னால் நிலப்பிரபுக்கள், முதலாளிகள், அறக்கட்டளை, நிலங்களாகவும் குவிந்தும் பரந்தும் விரிந்தும் கிடக்கிறது. நிலமற்ற மக்களுக்கு நிலங்களைக் கொடுப்பதற்கு எத்தனையோ சட்டங்களை கொண்டு வந்தார்கள். அமலாக்கப்படவில்லை. நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நிலங்களும், பூமிதான இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட நிலங்களும், அவை வந்த இடத்திற்கே போய் சேர்ந்தனவே தவிர, ஆயிரத்தில் ஒருத்தருக்கு கூட நிலம் கிடைக்கவில்லை.

இந்திய நாட்டின் பிரதானமான உற்பத்தி சாதனம் நிலமே. உற்பத்தி சாதனம் மட்டுமல்ல, நிலம் ஒரு மனிதனுடைய கௌவரத்தை காப்பாற்றக் கூடியதாகவும், அதுவே அதிகமாக ஆகின்ற பொழுது எதுவும் அற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சாதனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கீழ்வெண்மணி முதல் கீரிப்பட்டி, பாப்பாபட்டி வரை நடக்கும் சாதிய கொடுமைகளுக்கு காரணம் நிலங்கள் இல்லாமையே ஆகும். எனவே, அந்த சமுதாய மாற்றம் இந்தியாவில் நடைபெறும் என்று சொன்னாலும் நிலங்கள் பகிர்ந்து அளிக்கப்படாமல் சமூக நீதியை நிலைநாட்ட முடியாது என்பதே இந்திய விதி ஆகும்.

எனவேதான், இனிமேலும் காலம் தாழ்த்தாமல் எளிய மக்களின் மண்ணுரிமையை மீட்டுதர, நிலங்களை எல்லாம் பகிர்ந்து அளியுங்கள் என்று கோவையில் போர் பிரகடனம் செய்ய கூடி இருக்கிறோம். இன்றைய நமது மாநாட்டின் தீர்மானங்களை, சம்பந்தப்பட்டவர்கள் நடைமுறைப்படுத்த தவறினால் இந்த மண்ணை நாமே கைப்பற்றி கொள்ளுவோம் என்று எச்சரிக்கை செய்து கொள்ளவே இந்த மாநாட்டை நடத்துகிறோம். எவ்வளவு காலத்திற்கு நாங்கள் பொறுமையாக இருப்போம். எவ்வளவு காலத்திற்கு நீங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொடுக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து போவோம்? இனிமேல் நாங்கள் பொறுப்பதாக இல்லை, எமது மக்கள் ரூ.50க்கும், ரூ.100க்கும், கள்ள சாராயத்திற்கும், உப்புமாவிற்கும், வடைக்கும் ஓட்டு போடும் காலம் மலையேறி விட்டது. (கைதட்டல்)

கொள்கைக்காக கொடி ஏந்தும் காலம் மட்டுமல்ல, எங்களின் கொடிக்காக உயிர் துறக்கும் காலமும் உருவாகி விட்டது. நாமெல்லாம் ஆழமாக சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 1947ம் ஆண்டு முன்பு ஆங்கிலேயர்களின் ஆட்சியை விரட்டி விட்டால் பள்ளுக்கும், பறைக்கும் சுதந்திரம் வரும் என்று சொன்னார்கள். சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் கழிந்து விட்டதே! சுதந்திரம் வந்ததா? சமத்துவம் வந்ததா? சகோதரத்துவம் நிலைநாட்டப்பட்டு விட்டதா?

இனிமேலும் பொறுத்து இருப்போம் என்று எதிர்பார்க்காதீர்கள். எந்த மண்ணுரிமையை வாழ்வுரிமையை மனித உரிமையை இந்த மண்ணில் எமது முன்னோர்கள் இழந்தார்களோ, அவற்றை எங்களுடைய காலத்திலேமீட்டு எடுக்க முடிவுசெய்து உள்ளோம். இனிமேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. மத்திய, மாநில அரசுகள் எங்களின் உரிமைகளை உண்மையாக நிலைநாட்ட வேண்டும். இல்லையெனில் நாங்கள் களம் காணுவதை தவிர வேறு வழி இல்லை. நாளுக்கு நாள் அடித்தள மக்களுடைய நிலைமை மோசமாகி கொண்டு வருகிறது. 25 வருடங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் கூட ஏதாவது அரசு வேலையில் நுழைய வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்றோ M.A., M.Phil., Ph.D. படித்தவருக்கு கூட வேலை வாய்ப்பு இல்லை. அரசியல் சாசனத்தில் சொன்ன இடஒதுக்கட்டை எந்த துறையிலும் முறையாக அமலாக்கவில்லை. தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய இரண்டு லட்சம் பணியிடங்கள் மத்திய அரசு துறையில் இந்தியா முழுமைக்கும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாதோர் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அல்லது நிரப்பப்படாமல் உள்ளன.

போதாக்குறைக்கு புதிய பொருளாதார கொள்கையின் காரணமாக வேலை வாய்ப்பு கிடங்கிகளாக செயல்பட ஆயுள் காப்பீட்டுக் கழகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொலைபேசி மற்றும் பொதுக்காப்பீட்டு கழகம், இந்திய விமான சேவை கழகம் போன்ற பொது நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயம் ஆக்கப்படுவதால், இதுவரை கிடைத்து வந்த அற்ப சொற்ப வேலை வாய்ப்புகளும் மெல்ல மெல்ல பறிபோகும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில் இடஒதுக்கீடு பற்றி நாம் கொண்டு இருந்த நமது பார்வையை நாம் மாற்றி அமைக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக ஆகிவிடும். முதலில் கடந்த 57 ஆண்டு காலமாக நமக்குக் கொடுக்கப்படாமல் வைத்து இருக்கக் கூடிய பத்து லட்சம் பணியிடங்களை நிரப்பிடுவதற்கு மத்திய மாநில அரசுகள் பூர்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து அரசு துறைகளிலும் இடஒதுக்கீட்டை அமலாக்க சட்டம் கொண்டு வரப்படவேண்டும். அது மட்டும் போதாது. இடஒதுக்கீட்டை தனியார் துறைக்கும் விரிவுபடுத்த வேண்டும். அன்னிய நாட்டு மூலதனத்தால், இந்திய மண்ணில் துவங்கப்படும் எந்த நிறுவனங்கள் ஆனாலும் இனிமேல் வேலை வாய்ப்பில் மட்டும் அல்ல கொள்முதல் மற்றும் விற்பனையிலும் பங்கு அளிக்கும் ‘பன்முக பங்கீட்டை’ (Diversity) வலியுறுத்தும் நிலைக்கு நாம் மாற வேண்டும். இன்னும் கூட நான் ஒரு படி மேலே சென்று ஒரு கருத்தை இந்த மாநாட்டின் வாயிலாக பிரகடனம் செய்ய விரும்புகிறேன். காலகாலத்திற்கு வேலைக்காரர்களாக வைத்திருக்கும் உற்பத்தி பிரிவிலான (in production) இடஒதுக்கீட்டை வேண்டுமென்றால் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மாற்றாக. இனிமேல் உற்பத்திக்கான கொள்முதல் மற்றும் விற்பனையில் (purchase & sales) எங்களுக்கு உரிய பங்கை அளியுங்கள். இந்த விற்பனை மற்றும் வாங்குவதில் பங்கு கேட்பதை மிக பரந்த மனப்பான்மையுடன் நான் அணுக விரும்புகிறேன். இதில் தேவேந்திரகுல, ஆதி திராவிட  அருந்ததிய மக்களுக்காக மட்டுமல்ல, இம்மண்ணில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சம பங்கு அளியுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம்.

உதாரணத்திற்கு – ரிலையன்ஸ் நிறுவனம் தனது சொந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வாயிலாக ஆயிரக்கணக்கான சில்லரை விற்பனை நிலையங்கள் இந்தியா முழுமைக்கும் திறந்து இருக்கிறதே, அந்த பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 20%, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு 10%, மிகவும் மிக மிக பின்தங்கிய வகுப்பினரான சலவைத் தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள், நெசவுத் தொழிலாளர்கள் மற்றும் பிற்பட்ட வகுப்பினரான கொங்கு வேளாளர்கள், நாடார், ரெட்டியார், கள்ளர்கள், நாயக்கர்கள் என அனைத்து சமுதாயத்தினர்களுக்கும் பிரித்துக் கொடுப்பதின் மூலமாக அனைத்து தரப்பினரும் பலனை அனுபவிக்கும் ஒரு நிறுவனமாக செயல்படும் வாய்ப்பும், அதே போல் இந்தியாவின் சிறிய, பெரிய நிறுவனங்கள் அனைத்துமே இதே பாணியில் தங்களின் பொருட்களை விற்பனை செய்வதிலும், தங்களின் நிறுவனங்களுக்கு வாங்குவதிலும் இந்த பன்முக தன்மையை கடைபிடித்தால்நாம் எல்லாம் நீண்ட நெடு நாட்களாக கனவு கண்டு கொண்டு இருக்கும் நவீன இந்தியாவை எளிதாக உருவாக்கிவிட முடியும் அல்லவா?

எனவே, இனிமேல் இடஒதுக்கீடு என்று சொன்னாலே, அன்புள்ளம் கொண்ட சகோதரர்களே, உங்களை எல்லாம் ஒரு பியூன் ஆக்குவதற்காகவோ, அட்டெண்டர் ஆக்குவதற்காகவோ, கிளார்க் ஆக்குவதற்காகவோ அல்ல. நான்கு பேருக்கோ, நாற்பது பேருக்கோ, நானூறு பேருக்கோ வேலை கொடுக்கும் ‘குட்டி முதலாளி’களாக உருவாக்கும் பங்கு கேட்பது என்பதை நீங்கள் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற பங்கீடுகள் அளிப்பதில், அவர்களுக்கு பெரும் சங்கடம் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏன் எனில் எல்லா சாதிக்காரர்களும், மதக்காரர்களும், அந்த தனியார் விற்பனை நிலையங்களில் அனைத்து தரப்பு மக்களும் காசு கொடுத்து பொருள்களை வாங்குகின்ற பொழுது அதன் விற்பனை செய்யும் பணியில் பங்கு கேட்பதில் எந்த விதத்திலும் தவறில்லை அல்லவா?

ஒரு நகரத்தில் அல்லது மாநிலத்தில் பல கிளைகளைக் கொண்டு இயங்கும் ஒரு உணவு விடுதியை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அந்த உணவு விடுதிக்கு செல்லக் கூடியவர்கள் பலதரப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்களா இல்லையா? சுவையாக, தரமாக இருக்கும் பட்சத்தில் அனைத்து தரப்பினரும் அந்த விடுதியில் காசு கொடுத்து உணவு அருந்த செல்கிறார்கள் இல்லையா? எனவே, அப்படிப்பட்ட உணவு விடுதிக்கு அன்றாட தேவையான பொருட்களை வாங்குகின்ற பொழுது, காய்கறிகள் ஒரு சமுதாய வியாபாரியிடமிருந்தோ, முட்டை ஒரு சமுதாய வியாபாரியிடமிருந்தோ, அரிசி, பருப்பு ஒரு சமுதாய வியாபாரியிடமிருந்தோ என ஒவ்வொரு பொருட்களும் ஒரு சமுதாயத்தினரிடமிருந்து வாங்குவதன் மூலம் ஒரு ‘பன்முக தன்மை’ உருவாகிறது அல்லவா? ஒரு உணவு விடுதியில் பல சமுதாயத்தினர் பாகுபாடின்றி உணவு அருந்தி, அந்த உணவு விடுதிக்கு லாபத்தை கொடுக்கின்ற பொழுது, அந்த உணவு அருந்த வரக்கூடியவர்களின் மனப்பான்மை போல் அந்த முதலாளியும் நடந்து விடுதிக்கு தான் வாங்கக் கூடிய பொருள்களும் பல சமுதாயத்தினர்களிடமிருந்து இருக்கட்டும் என்ற பரந்த மனப்பான்மை கடைபிடிப்பவர்களானால் அதில் 20% பேர் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பார்கள் என்றால் இந்த சமுதாயத்திற்கு எவ்வளவு பெருமை வரும், உயர்வும் வரும்.

இதுபோன்ற பங்கீடுகள் இந்தியாவில் வேண்டுமென்றால் புதிதாகத் தோன்றலாம். ஆனால், பொருளாதாரத்திலும், விஞ்ஞானத்திலும் விண்ணை முட்டும் வளர்ச்சியை அமெரிக்க, ஐக்கிய நாட்டிலே ‘பன்முக பங்கீடு’ (Diversity) அனைத்து தரப்பினருக்கும் அளிக்கப்படுகிறது. கொள்முதலிலும், விற்பனை யிலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அங்குள்ள சட்டப்படி பங்கீடு வழங்காத நிறுவனங்களின் அனுமதிகள் இரத்து செய்யப்படு கின்றன. அது மட்டுமல்ல, நிறுவனங்களின் பொருட்களை விற்கவும் முடியாது, உற்பத்தி பொருட்களை வெளியிடங் களிலிருந்து வாங்கவும் முடியாது.

உலகத்தின் கணினி கம்பெனியான மைக்ரோசாப்ட் கம்பெனியில் அமெரிக்காவில் இனவெறிக்கு ஆளான கறுப்பின மக்களுக்கு 27% சதவீதமும், லத்தீன் அமெரிக்கர்கள், ஆரியர்கள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் குறிப்பிட்ட சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இதுபோன்ற பன்னாட்டு மூலதன நிறுவனங்களில் அமெரிக்கா வில் வெள்ளையர்கள் அல்லாத அனைத்து சிறுபான்மை மக்களுக்கு (கறுப்பின, லத்தீன் அமெரிக்கர்கள், ஆரியர்கள்) முறையான பங்கீடு கிடைக்கின்ற காரணத்தால் அமெரிக்காவின் பணக்காரர்களில் ஏழு பேரில் ஒருவர் இந்தியராக இருக்க முடிகிறது. எனவே, வளர்ந்த அமெரிக்காவிலே சாதி, இன, நிற வெறிக்கு ஆளான மக்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு சட்ட ரீதியான பங்குகள் அளிக்கப்படுகின்ற பொழுது, இன்னும் சாதி சகதியில் சிக்கி உழலும் இந்திய நாட்டில் ‘பன்முகப் பங்கீட்டை. அமலாக்கினால் ஒழிய, இந்தியாவின் அடித்தள மக்களுக்கு (SC/ST) விடிவு இல்லை.

தனியார் மட்டுமல்ல, மத்திய, மாநில அரசுகளுக்கு உட்பட்ட எவ்வளவு நிறுவனங்களில் ஆண்டு ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களுக்கு ஒப்பந்தப் பணிகள் நடைபெறுகிறது அல்லவா? கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள், அணைக்கட்டுகள், இரயில்வே கட்டுமானங்கள் போன்ற ஒப்பந்த பணிகளிலும், மருந்து உற்பத்திகள், உள்நாட்டு வெளிநாடு வர்த்தகங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 20% பங்கு அளிக்கப்படுமாயின் அவர்களின் வாழ்வில் மிகப் பெரிய பொருளாதார மாற்றம் நிகழும் அல்லவா? அவர்களும் முதலாளி நிலைக்கு மாறும் வாய்ப்பு உண்டு அல்லவா?

உங்கள் மத்தியில் ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு மேலாக நான் உரையாற்றி விட்டேன். மண்ணுரிமை, மனித உரிமை. வாழ்வுரிமை பற்றி விரிவாக பேசி உள்ளேன். நீங்கள் எல்லாம் நேற்று நள்ளிரவு நேரத்தில் புறப்பட்டு வந்து இருப்பீர்கள். இன்று நள்ளிரவில் நீங்கள் உங்கள் கிராமங்களுக்குத் திரும்பச் செல்ல வேண்டும். எனவே உரையை இத்தோடு நிறைவுக்கு கொண்டு வர உள்ளேன்.

மத்தியில், மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். இம்மண்ணை ஆண்ட மற்றும் ஆளுகின்ற கட்சிகளின் வெற்று கோஷங்களை நம்பி பல காலம் ஏமாந்து போனோம். இனிமேலும் எங்களை ஏமாற்ற இயலாது.

காஷ்மீர் வாசிகள் தனிநாடு கேட்டு போராடுகின்ற காரணத்தால், அவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்க ரூ.2,000/- கோடிகளுடன் நிதி உதவி அளிக்க பிரதமர் ஓடோடி செல்கிறார். எமது மக்களோ மூன்று சென்ட் நிலத்திற்கு இங்கு குட்டிக்கரணம் அடிக்க வேண்டியிருக்கிறது. ஒருவேளை காஷ்மீர் மொழியில் பேசினால்தான் இந்திய ஆட்சியாளர்களுக்குப் புரியும் என்றால் எமது எதிர்காலச் சந்ததியினர் அந்நிலைக்குச் செல்லவும் அஞ்சமாட்டார்கள்.

தமிழ்நாடு எங்கும் பரவி கிடக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அந்த கிராமத்தில், ஒன்றியத்தில், மாவட்டத்தில் எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை எல்லாம் திருப்பி அளிக்க சிரமம் இருக்குமாயினும், இனிமேலும், இந்த நாட்டில் பஞ்சைகளாக, பரட்டைகளாக குடியுரிமை அற்ற குடிமைகளாக வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்தியா குடியரசு ஆகி 55 ஆண்டுகள் கழிந்த பிறகும் இதுதான் எமது மக்களின் நிலை என்றால், இனிமேல் ஒரு கணமும் காத்திருக்க இயலாது. வீடு, நிலம், வேலை கேட்டு கோவையில் எமது போர் பிரகடனம் அறிவிக்கப்பட்டு விட்டது. நிலம் கொடுங்கள்! தாழ்த்தப் பட்டவர்களுக்கான தனிமாநில கோரிக்கை அதாவது யூனியன் பிரதேசம் போன்ற கோரிக்கை வலுப்பெற வாய்ப்பாகி விடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இதுபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பேசுவேன்.

கொடுங்கள் அல்லது எடுப்போம்!!
நன்றி! வணக்கம்!!

1. மண்ணுரிமை வரலாறும் தீர்வும்:
(1) இந்தியாவிலும், தமிழகத்திலும் நிலம் அரசின் உடைமையாக இருந்தது. நிலத்தில் உழைத்த மக்கள் விளைப்பில் ஒரு பகுதியை அரசுக்கு செலுத்திவந்தனர். இந்நிலங்களை எவரும் வாங்கவோ, விற்கவோ இயலாது. தமிழக அளவில் ஓர் உழைக்காத பிரிவினருக்கு இறையிலி நிலங்களாக, நிலக் கொடையாக அளிக்கப்பட்டன. இந்த வரலாற்று உண்மைகளை மொழி ஞாயிறு தேவநேயப்பாவணர் ‘அகரமேற்றல்’ என சுட்டிக்காட்டினார். ஜப்பானிய தமிழ் அறிஞர், நொபுரு கராஷிமா அவர்களும் பிற்கால சோழர் காலத்தில் நிலம் உழைக்காத மக்களுக்கு அளிக்கப்பட்டறை ஆராய்ச்சி வழி கட்டுகிறார், பிற்கால பாண்டியர் காலத்திலும் சரித்திர வழி வாழாத அந்நாள் பௌத்த, சமண, இந்நாள் எளிய மக்கள் நிலங்கள் பறிக்கப்பட்டதையும் அறிய முடிகிறது. இடைக்கால படையெடுப்பும் தமிழர் மண்ணுரிமை பறிப்பைக் காட்டுகின்றன. இராமநாதபுரத்தில் ஆதி-திராவிடர்களும், தேவேந்திரகுல வேளாளர்களும் நிலங்களை சொந்தமாகப் பெறக் கூடாது என்று குற்றப்பரம்பரையினர் சாதிய ஒடுக்குமுறையை செயல்படுத்தினார்கள். இதனை எதிர்த்துப் போராடிய பெருமைக்குரியவர் மள்ளர்குல மாமணி தேனி, தேக்கம்பட்டி திரு பாலசுந்தர ராசு. அந்தந்த பகுதியின் ஆதிக்க சாதிகள் எளிய மக்கள் உழைப்பைச் சுரண்டி அவர்கள் உழைப்பால் உருவாகிய நிலங்களை சொந்தமாக்கிக் கொண்டனர், அதே சமயம் எளிய மக்கள் தங்கள் உழைப்பால் நிலங்களை தங்கள் உடைமையாக்கிக் கொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்டது. பழங்குடி மக்களின் நிலங்களும் தோசைக்கும் இட்டிலிக்கும் வாங்கப்பட்டன.

இந்தியாவில் நிலங்கள் உற்பத்தி மூலமாக இல்லாமல் சமுதாய ஆதிக்கத்தின் அடையாளமாகிவிட்டது. தமிழகத்தில் நதி நீர்பாயும் வடி நிலங்கள் மள்ளர் மக்கள் உழைத்து திருத்தி, விளைப்பு செய்த அரசு நிலங்களே. நன்செய், குளத்துப் பாசன, இறைவை, வானவாரி, மற்றும் மலைத் தோட்ட நிலங்களையும் அரசுடமையாக ஆக்குவதே சரியான தீர்வு, நியூசிலாந்து நாட்டில் மௌரி பழங்குடி மக்களின் நிலங்கள் வெள்ளையர்களால் அபகரிக்கப்பட்டது. இங்கிலாந்தின் எலிசபெத் அரசியார், மௌரி மக்களின் நிலங்களை அண்மையில் திருப்பி அளித்தார். இந்தியாவிலும், தமிழகத்திலும் இன்னும் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கும், சமுதாய அவலங்களுக்கும் உயர்சாதி நில உடைமையே (Caste feudalism) முதன்மையான காரணமாக விளங்குகிறது. எனவே, இந்திய அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்ட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய விழுமங்கள் உண்மையாக மலர வேண்டுமானால் எளிய மக்களுக்கு (SC / ST) உழைப்பை ஊக்குவிக்க நிலங்களை உடனடியாக பகிர்ந்தளிக்க வேண்டும்.

நிலங்கள் நாட்டுடமையாக்கம், ஒரு தொலை நோக்குத் திட்டமாக உள்ள நிலையில் அரசுக்கும், மடங்களுக்கும், கோவில்களுக்கும் மற்றும் பெரு நிலச்சுவான்தார்களுக்குச் சொந்தமான 50 சதவிகித நன்செய் நிலங்களையும் எடுத்து / அல்லது விலைக்கு வாங்கி குடும்பத்திற்கு 5 ஏக்கர் வீதம் நிலமற்ற எளிய (SC / ST) மக்களுக்கு 33 ஆண்டு குத்தகைக்கு அளிக்கவேண்டும். எஞ்சிய நிலங்களை அடுத்து மிகப் பிற்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, முற்பட்ட மக்களுக்கு அளிக்கலாம். இவற்றை விற்கும், வாங்கும் உரிமை இருக்கக் கூடாது.

(2) குளத்துப் பாசன, இறவை பாசன நிலங்கள்: குளத்துப் பாசன நிலங்களும், இறவை நிலங்களும் விற்கும், வாங்கும் உரிமைகள் தடுக்கப்பட வேண்டும். உழைத்து உற்பத்தி செய்யும் உரிமை மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

(3) தரிசு நிலங்கள் பயன்பாடு: தமிழகத்தின் தரிசு நிலங்களை தனியார்க்கு தாரை வார்க்கும் முயற்சியில் இப்போதைய அரசு ஈடுபட்டது. இது தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். தரிசு நிலங்களை அப்பகுதி மக்களுக்கு 15 ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்க வேண்டும். நிலம் 33 ஆண்டு குத்தகைக்கே விட வேண்டும்.

(4) மலைப் பகுதி தோட்டங்கள் : மலைப் பகுதிகளில் உள்ள தேயிலை, காபி தோட்டங்கள் பெரு வணிகக் குழுமங்கள் கையில் உள்ளன. வெள்ளையர் காலத்தில் கட்டாயப் படுத்திக் கொண்டுவரப்பட்ட எளிய மக்கள் (SC) பிரிவினரின் உழைப்பால் உருவானவையே இத்தோட்டங்கள். மலை தோட்டங்களில் தொழிலாளர்கள் வாழ்க்கை வசதிகளின்றி குறைந்த கூலியில் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். ‘புதிய தமிழகம்’ தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும், தாமிரபரணியில் 17 பேர் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டும் கூலி உயர்த்தப்பட்டது. இயற்கைக்கு எதிராக, உயர்த்தப்பட்ட கூலி மீண்டும் ஐந்து ரூபாய் குறைக்கப்பட்டது கொடுமையாகும். தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் தோட்ட தொழிலாளர் சட்டங்களில் ஏற்ற மாற்றங்களை செய்து தினக் கூலியை ரூ.150/-க்கு உயர்த்த வேண்டும். குடியிருப்பு, மருத்துவ வசதிகளை உருவாக்க வேண்டும். தொழில் சூழல் சுமையாக்கப்பட்டுள்ளது; சுமையின்றி தொழில் செய்ய வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும். தனியார் வணிக குழுமங்கள், மற்றும் பெரு முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட 99 ஆண்டு குத்தகை முடிந்தவுடன், அதனை நீட்டிக்காமல், தோட்ட நிலங்களை 10 ஏக்கர் வீதம் அத்தோட்டங்களில் உழைக்கும் தொழிலாளர்களுக்கே அளித்து சிறு தோட்ட உரிமையாளர்களை உருவாக்க வேண்டும். இத்தகு தோட்ட நிலங்கள் 33 ஆண்டு குத்தகையாக அமைய வேண்டும். நிலத்தில் உழைத்து வாழ விரும்பும் மக்களுக்கு அவர்களின் பறிக்கப்பட்ட மண்ணுரிமையை வழங்க வேண்டும். மலைத் தோட்டங்களில் தொழிலாளர்களை பங்குதாரர்களாக்கி அரசு தொழில் நிறுவனமாக மாற்றுவதும் சிந்திக்க வேண்டிய மாற்று திட்டமாகும்.

அரசு நிலங்களை 99 ஆண்டுகால குத்தகைக்கு எடுத்த தனியார் குழுமங்கள் வீட்டுமனை பட்டா போட்டு விற்சும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது. இம்முயற்சிகளை தமிழ்நாடு அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். மண்ணுரிமை மீண்டும் தரப்படாவிட்டால் எளிய மக்கள் அரசு, கோயில், மடங்கள், பெரும் நிலக்கிழார்களின் நிலங்களை கைப்பற்றிக் கொள்வோம். இதற்கான கால அவகாசம் ஒராண்டு மட்டுமே.

(5) பஞ்சமி நிலங்கள் ஆதி-திராவிடருக்கே: வெள்ளையர் காலத்தில் ஆதி-திராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை அரசு ஒரு குழுவை அமைத்து மீட்டுத் தர வேண்டும். தவறினால் நில மீட்புப் போராட்டம் இதிலும் தொடரும். இதிலும் 33 ஆண்டு குத்தகைமுறை செயல்படுத்தப்பட வேண்டும்

(6) பழங்குடி மக்களின் நிலஉடைமை : பழங்குடி மக்களின் நில உரிமை ஆதிக்க சாதியினராலும், கருப்புப் பணக்காரர்களாலும் பறிக்கப்பட்டன. பழங்குடி மக்களின் மண்ணுரிமையும் மீட்டுத் தரப்பட வேண்டும். இங்கும் நில மீட்புப் போராட்டம் நடத்தப்படும். மலைப் பகுதிகளில் பழங்குடி மக்கள் காடுகளில் விளைந்த பொருட்களை அனுபவித்து வந்த நிலைகளை வனத்துறை தடுத்து வருகின்றனர். பழங்குடி மக்களின் பாரம்பரிய உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். பழங்குடி மக்களுக்கு அரிசி, எண்ணெய், பருப்பு ஆகியன அடக்க (பாதி) விலையில் வழங்கப்பட வேண்டும். கல்வி வாய்ப்புப் பெற பழங்குடி மக்களின் ஆசிரியர்கள் இடம் பெறும் கல்விக் கூடங்களை உருவாக்க வேண்டும்.

II. மனித உரிமை
(7) புதிய தீண்டாமை தடுக்கப்பட வேண்டும்: சாதி – தீண்டாமை கொடுமைகளின் புதிய ஒடுக்குமுறை வடிவங்களான இரு குவளை முறை, செருப்பணிய உரிமை மறுப்பு, கோயில் நுழைவு – பங்கு பெறும் உரிமை மறுப்பு ஆகியன அவசர சட்ட மூலம் தடுக்கப்பட வேண்டும். கோவில்களில் தேரோட்டங்கள், மண்டகப்படிகள் போன்ற நிகழ்ச்சிகளில் இன்னும் பின்பற்றப்படும் தீண்டாமைகள் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(8) ‘புதிய தமிழகம்’ தொண்டர்கள் மீதான வழக்குகள் வாபஸ் : ‘புதிய தமிழகம்’ தொண்டர்கள் மீது பல மாவட்டங்களில் நூற்றுக் கணக்கான வழக்குகள் போடப்பட்டன. இவ்வழக்குகளை தமிழ்நாடு அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

(9) துப்புரவு தொழிலாளர்கள் இடஒதுக்கீடு கணக்கு : மத்திய அரசு துப்புரவுத் தொழிலாளர்களை இட ஒதுக்கீடு கணக்கிற்கு எளிய மக்கள் (SC/ ST) பிரிவில் இருந்தாலும் தனியாகக் காட்டி வருவது பாராட்டிற்குரியது. இதனால் எளிய மக்கள் பிரிவினர் இடஒதுக்கீடு குழப்பமடைவதைத் தடுக்க தமிழ்நாடு அரசும் துப்புரவுத் தொழிலாளர்களை (Scavengers and Sweepers) எளிய மக்கள் தொகுப்பில் (SC / ST) உள்ளடக்காமல் தனியாகக் காட்ட வேண்டும்.

(10) துப்புரவு தொழில் செய்வோர் நலன்கள் : வறுமைப் பிடியிலிருந்து மீள உடனே பதிலி தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டுமெனவும் கூடுதல் தொழிலாளர்களை நியமிக்க வேண்டுமெனவும், துப்புரவு பணியாளர் குடும்பம் வேலை வாய்ப்பு பெற கழிப்பிட ஒப்பங்களை துப்புரவு பணியாளர் குடும்பத்திற்கே வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசையும், தமிழக மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

(11) மீனவ மக்கள் மேம்பாடு : மீனவ மக்கள் வரலாற்றுக்கால முதல் அவலமாகவே தொடர்கிறது. அண்மையில் எழுந்த ஆழிப்பேரலை (சுனாமி) அவர்களின் அவலங்களை மேலும் பெருக்கிவிட்டது. மீனவ மக்களை மிகப் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் விலக்கி ‘நெய்தலர் மேம்பாட்டுத் துறை’ (Sea Farers Welfare Dept) உருவாக்கப்பட்டு அவர்தம் மேம்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மீனவ மக்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் வீடமைத்து, மீன்பிடித் தொழிலை பாதுகாப்பாக மேற்கொள்ள அனைத்து 8 உதவிகளையும் வழங்க வேண்டும். மீனவர்களை கடல்சார் பழங்குடியினராக (Sea tribes) இணைத்துக் கொள்ள வேண்டும்.

III. வாழ்வுரிமை (சமுதாய நீதி)
(12) தனியார் துறையில் இட ஒதுக்கீடு : இந்தியாவில் தொழிற்சாலைகள் தனியார் மயமாகி வருகின்றன, இந்தியாவின் உலக மயமாகி வருகின்றன, அரசு துறைகள் சுருங்கி வருகின்றன, செல்வாதாரங்கள் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு உருவனவை. எளிய மக்களின் கடுமையான உழைப்பே வரலாற்று கால முதல் இந்தியாவில் உருவாக்கப்பட்ட மூலதனமாகும். விடுதலைபெற்ற இந்தியாவில் அரசியல் சட்டத்தில் சமுதாய நீதி ஏற்பாடுகள் செய்யப்பட்டும் ஆதிக்க ‘சாதிய – நிலவுடமை’ சக்திகள் உரிய நீதியை வழங்கவில்லை. சமுதாய நீதி பேசி கட்சி வளர்த்து, ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளும் சமுதாய நீதியை ‘சாதி மனப்பான்மை’ க்கும், மூர்க்கச் சாதி மிரட்டலுக்கும் பலிகொடுத்து விட்டார்கள்.

தனியார் துறைகள் வளர்ச்சிக்கு எளிய மக்களின் உழைப்பால் உருவான மூலதனமும், அரசு நிதியும் பயன்பட்டு வரும் நிலையில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு ஒரு வரலாற்றுக் கட்டாயம். இது தொடர்பாக முற்போக்குக் கூட்டணி (UPA) கட்சிகள் உருவாக்கிய குறைந்த பட்ச செயல் திட்டமும் ‘தனியார்துறை இட ஒதுக்கீட்டை’ உறுதி செய்ய முனைவது பாராட்டுதலுக்குரியது. இம்முயற்சியில் இப்போது பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலை வருந்தத் தக்கது. தனியார் துறைகளும், வெளிநாட்டுத் தொழிற்சாலைகளும் பெருமளவில் வளர்ந்துவரும் நிலையில் தனியார் துறைகளுக்கு அரசு அனுமதி வழங்கும் நிலையிலும், வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களோடு ஒப்பந்தம் (Memorandum of understanding) கையெழுத்திடும் நிலையிலும் எளிய மக்களுக்கும் (Dalits), பிற தொகுப்பினருக்கும் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும். இந்திய 9 சமுதாய சிக்கல்களைத் தீர்க்க மத்தியில் ஆட்சியில் உள்ள முற்போக்கு கூட்டணி அரசு முயலும் என ‘புதிய தமிழகம்’ உறுதியாக நம்புகிறது. இத்திட்டத்தை ஆதரித்து ‘புதிய தமிழகம்’ நாடெங்கும் பிரச்சாரம் நடத்தும். ‘புதிய தமிழகம்’ தொழில்க்ள தனியார் மயமாவதைக் கொள்கை அளவில் எதிர்க்கிறது.

(13) மத்திய அரசில் பின்னடைவு பணியிடங்கள் நிரப்புதல் : மத்திய அரசின் அனைத்துத் துறையின் பின்னடைவுப் பணியிடங்கள் ஒட்டுமொத்தம் 10 லட்சம் பணியிடங்கள் மூன்றாண்டுக்குள் நிரப்பப்பட வேண்டும். மத்திய அரசின் பின்னடைவுப் பணிகளை நிரப்ப அரசு நிதி ஒதுக்கவேண்டும். இட ஒதுக்கீட்டையும், பின்னடைவுப் பணி இடங்களையும் நிரப்பாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.

(14) முடிவெடுக்கும், சட்டங்களைச் செயல்படுத்த உயர் பதவிகள் : மத்திய அரசின் தொழில் நிறுவனங்களின் உறுப்பினர்கள், இயக்குனர்கள், தொலைபேசி போன்ற சேவை நிறுவனங்களின் உயர்பதவிகள், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் போன்ற வணிக நிறுவனங்களின் உயர் பதவிகள் மற்றும் கொள்கை முடிவெடுக்கும் பதவிகள் ஆகியவை எளிய மக்களுக்கு 22.5% அளவில் வழங்கப்பட வேண்டும். மாநில ஆளுநர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் பொறுப்பிலும் அரசியல் அறிவும், உயர் கல்வியும் பெற்றவர்கள் நியமிக்கப்பட வேண்டும். நீதித் துறையில் அரசு வழக்கறிஞர்கள், நீதிபதிகள், உயர்நீதி மன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகிய பொறுப்புகள் விகிதாச்சாரப்படி எளிய மக்களுக்கு (SC / ST) வழங்கப்பட வேண்டும்.

(15) மாநில அரசு அமைப்புகளுக்கு நியமனம்; மாநில அளவிலும் துணைவேந்தர் பொறுப்பிலும், நியமனப் பதவிகளிலும் விகிதாச்சார அளவில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். துணைவேந்தர் தேடு குழுவிலும் எளிய மக்களுக்கு விகிதாசார வாய்ப்பளிக்க வேண்டும். 10 தமிழ்நாட்டில் 16 பல்கலைக் கழகங்கள் உள்ள நிலையில் மூன்று துணைவேந்தர் பதவிகள் எளிய மக்களின் அறிவாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இது தொடர்பான சட்டத்தினை ஆளுநரும், அரசும் உருவாக்க வேண்டும். பல்கலைக் கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் ஆட்சிக் குழுவிலும், பேரவையிலும் ஏற்ற அளவு பிரதிநிதித்துவம் வழங்க அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

(16) எளிய மக்கள் பிரிவின் மாணவர் நலன்கள் : எளிய மக்கள் பிரிவுக்கு அரசு கல்லூரிகளில் இருப்பதுபோல தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், தனியார் சுயநிதி மருத்துவம், பொறியியல், மேலாண்மை, கலை, அறிவியல் கல்விப் பாடங்களிலும் 19 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தனியார் சுயநிதிக்கல்லூரிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வசூலிக்கப்படும் உயர்ந்த அளவு ‘கல்விக் கட்டணம்’ நிறுத்தப்பட வேண்டும். இந்திய நாடாளுமன்றம் இடஒதுக்கீடு, கல்விக் கட்டண சீரமைப்பு ஆகியவற்றை ஒழுங்குபடுத்திட வேண்டும். தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களிலும், தனியார் கல்லூரிகளிலும் ஏற்ற கட்டுப்பாடுகளை விதிக்கவும், நீதிமன்றங்கள் வரம்புக்கு அப்பாற்பட்டு செயல்படுத்தவும் சட்ட திருத்தங்களை செய்ய வேண்டும்.

எளிய மக்கள் பிரிவு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையும், கல்விக் கடன் வசதியின் அளவும் உயர்த்தப்பட வேண்டும். எளிய மக்கள் பிரிவு மாணவர்களுக்கான விடுதிகளில் அடிப்படை வசதிகளும், உணவுக்கான தொகைகளும் உயர்த்தப்பட வேண்டும். உரிய காலத்தில் உதவித் தொகைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(17) மத்திய, மாநில அரசு ஒப்பந்தப் பணிகளில் பங்கு : மத்திய, மாநில அரசுகள் கட்டிடங்கள் கட்டுவது சாலை அமைப்பது போன்ற அனைத்துத் துறைகளின் ஒப்பந்தப் பணிகள் ஆளுங்கட்சியினருக்கே ஒதுக்கப்படுகிறது. எளிய மக்கள் இப்பணிகளில் பங்குபெற விகிதாசார சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

(18) சமுதாய நீதியில் திராவிடக் கட்சிகளின் தோல்வி : தமிழ்நாடு அரசு, திராவிடக் கட்சிகளின் ஆட்சி காலம் முதல் (1967) எளிய மக்களின் இட ஒதுக்கீட்டை புறக்கணித்து வருகிறது. வெள்ளையறிக்கை கேட்டபோது திரு.மு.கருணாநிதி வெள்ளையடித்த அறிக்கை வெளியிட்டார். அதனை செயல்படுத்துவதாக உறுதிமொழி வழங்கினார். அடுத்து வந்த இப்போதைய முதல்வர் அம்மையார் அழகிய அரசாணை (G.O.Ms.91, dated 28.11.2001) வெளியிட்டார். இந்த அரசாணையை முறியடிக்க அவரே செய்த தந்திரம் ‘பதவிகளை நிரப்ப முழுதடை’ விதித்தார். இத்தடையை நீக்கி தமிழ்நாடு அரசு சட்டப்படி எளிய மக்களுக்குரிய பின்னடைவு / குறைவிட (shortfall vacancy) பணியிடங்களை செப்டம்பர் 15க்குள் நிரப்ப வேண்டுமென இம்மாநாடு வேண்டுகிறது. பின்னடைவு / குறைவிடப் பணி இடங்களை நிரப்ப நிதிநிலை அறிக்கையில் தனியாக நிதி ஒதுக்கவேண்டும்.

(19) மத்தியிலும் மிக பிற்படுத்தப்படடோர் தொகுப்பு: இந்தியாவெங்கும் சமுதாய அளவில் உடைமைகளின்றி சேவைத்தொழில் செய்யும் பொன்வினைஞர், கொல்லர், தச்சர், நாவிதர், வண்ணார், மண்பாண்டம் செய்வோர், போயர், மேளக்காரர்கள் போன்ற பல சிறிய சாதியினர் அதிகாரத்தில் பங்கு பெற முடியாமல் அல்லல்படுகின்றனர். இவர்களுக்கு அனைத்திந்திய அளவில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பை உருவாக்கி இடஒதுக்கீடு வழங்குவது மூலம் சமுதாய நீதியை செழுமைப்படுத்தி சமுதாய சமநிலை உருவாக்கலாம். மத்திய அரசு மிக பிற்படுத்தோர் பட்டியலை உருவாக்கிட இம்மாநாடு வேண்டுகிறது.

IV. மேன்மை (Dignity) – அடையாளங்கள்:
(20) பொது ஊடகங்களின் எளிய மக்கள் நிலை : எளிய மக்களின் விழுமிய சமுதாய,
சமய, ஆட்சி மரபுகளை பண்பாட்டு, நாட்டுப்புறவியல் அறிஞர்கள் மீட்டெடுத்து மீட்டுருவாக்கம் செய்துள்ள நிலை பாராட்டுக்குரியது

பள்ளர் – வேந்தன் மரபினர் (நன்செய் நில மன்னர் மரபினர்) வேந்தர் குல வேளாளர், தேவேதந்திரகுல வேளாளர், மள்ளர், அருந்திறல் வீரர், பெருந்திறல் உழவர் சேற்றுக்கால் செல்வர்கள், செந்நெல் முதுகுடியினர், முன்னாள் பௌத்தர்கள்.

பறையர் – ஆதி – திராவிடர், திருக்குலத்தார், மறையோர், முன்னாள் பௌத்தர்கள்.

சக்கிலியர் – செம்மான், அருந்ததியர், முன்னாள் பௌத்தர்கள்.

கோலியர் – கடல் மள்ளர், புத்தரின் தாய் பிறந்த கோலியர் குலத்தைச் சுட்டுவது.

பழங்குடிகள் – இந்தியாவில் வெள்ளையர்களை முதலில் எதிர்த்து கலகம் செய்தவர்கள்
இதுபோன்ற 77 சாதிகளுக்கும் சிறப்பான அடையாளங்கள் உள்ளன. எளிய மக்களின் மேன்மை குறித்து பொது ஊடகங்களிலும், செய்தி ஏடுகளிலும் செய்திகள் முறையாக வெளியிடப்பட வேண்டும். எளிய மக்களின் அறிவாளர்கள் இது தொடர்பான ஆக்கப் பணியாற்ற வேண்டும்.

(21) எளிய மக்களின் பெயர்களில் இழிவு நீக்கம்: அரசின் ஆவணங்களில் எளிய மக்களின் சாதிப் பெயர்கள் ‘அன்’ விகுதியில் முடிவடைவதாக அமைந்துள்ளன. இது தொடர்பாக ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தொடர்ந்து பேசி வந்தார். இது தொடர்பாக உறுதி மொழிகள் வழங்கப்பட்டும் இழிவு படுத்தும் ‘அனி’ விகுதிகள் தொடர்கின்றன (பள்ளன் / பறையன் / சக்கிலியன்) தமிழ்நாடு அரசு உடனடியாக அவசர சட்டம் வழி பெயர்களை ‘அர்’ விகுதிக்கு மாற்ற வேண்டும்.

(22) எளிய மக்கள் மேம்பாட்டுத் துறையின் பெயர் மாற்றம் : தமிழ்நாட்டில் SC / ST துறையின் பெயர் குழப்பம் மிகுந்ததாக ‘ஆதி – திராவிடர்’ மற்றும் பழங்குடியினர் துறை என பெயரிடப்பட்டுள்ளது குறித்து பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. மொத்தம் உள்ள 77 சாதிகளில் ‘ஆதி திராவிடர்’ என்பது ஒரு சாதிப் பிரிவாக இருப்பதால் இப்பெயர் மாற்றப்பட வேண்டும் என இம்மாநாடு மீண்டும் கேட்டுக் கொள்கிறது. ‘ஆதி – திராவிடர்’ என ஒரு சாதியினர்போல் 77 துணைச் சாதிகளைக் காட்டுவதால் ‘அமைச்சர்’ பதவி, ‘துணைவேந்தர்’ பதவி போன்ற நியமனங்களில் ஒவ்வொருவர் மட்டுமே வாய்ப்பு பெறமுடிகிறது. உரிய பிரதிநிதித்துவம் பெற ‘ஆதி திராவிடர்’ நலத்துறை என்பதற்கு மாற்றாக ‘பட்டியல் சாதிகள் வேண்டும். பழங்குடியினர் துறை’ என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

(23) மாணவர்களுக்கான பாட நூல்கள் உண்மைகளைச் சொல்ல வேண்டும் : பள்ளி, கல்லூரி பாடநூல்களில், மண்ணின் மைந்தர்களான எளிய மக்களின் வரலாறு தொடர்பாக இழிவுபடுத்துவதோடு அம்மக்களின் தியாக வரலாறுகளை மறைத்து வருகின்றனர். சாதி வெறியாட்டம் ஆடியவர்கள் தியாகிகளாகக் காட்டப்படுகிறார்கள்.
உலகின் முதல் உயிர்த் தியாகி தளபதி சுந்தரலிங்கம், மாமன்னர் ஒண்டிப்பகடை, பௌத்த தமிழ் அறிஞர் அயோத்தி தாசப் பண்டிதர், தியாக தீபங்கள் பரமக்குடி இமானுவேல், மேலூர் மேளவளவு முருகேசன், கோவை செகுடந்தாளி முருகேசன் போன்ற எண்ணற்ற தியாகிகள் மற்றும் சாதனையாளர்களைப் பற்றி தகவல்கள் பாடநூல்களில் இடம் பெற வேண்டும். வெள்ளையர்களை முதலில் எதிர்த்து போராடியவர்கள் சாந்தல் மற்றும் பீல் போன்ற பழங்குடிகள் என்ற வரலாற்று உண்மைகளைப் பாடநூல்களில் குறிப்பிடுவது அவசியமாகும். மத்திய, மாநில கல்வித் துறைக்ள இது தொடர்பான சரியான தகவல்களை பாடநூல்களில் புகுத்திட வேண்டும்.

V. மக்களாட்சி மாண்பு – தேர்தல் மாற்றங்கள்
(24) விகிதாசார பிரதிநிதித்துவம் :
இந்தியாவின் தேர்தல் முறை பணபலம், அடியாஸ்பலம், ஊழல் போன்ற தீமைகளால் முடிவு செய்யப்படுகிறது. அண்மைகால கூட்டணி தேர்தல் ஏற்பாடு மேலும் அவாம் சேர்க்கிறது. இதற்குத் தீர்வாக விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை இந்தியாவில் செயல்படுத்தப்பட வேண்டும். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஏற்ற திருகிருஷ்ணமூர்த்தியும் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சீர்திருத்தங்களை இந்திய நாடாளுமன்றம் செயல்படுத்த திட்டமிட வேண்டும்.

(25) இரட்டை வாக்குரிமை :
எளிய மக்களுக்குரிய (SC / ST) தனித் தொகுதி முறை தோல்வியைத் தழுவியுள்ளது. இத்தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளின் பிரதிநிதிகளாகவே உள்ளனர். எளிய மக்கள் பிரச்சனைகளையும், துயரங்களையும் கண்டு கொள்வதில்லை. தனி வாக்களிப்பு முறையால் (Separate Electorate) எளிய மக்களே தங்களின் பிரதிநிதிகளைத் தன்னம்பிக்கையுடன் தாங்களே தேர்ந்தெடுக்க முடியும். ஆகவே எளிய மக்கள் மட்டுமே தங்களின் வாக்குரிமை மூலம், தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை வேண்டும் அல்லது விகிதாசார பிரதிநிதி முறை செயல்படுத்தப்பட வேண்டும். எஸ்.சி / எஸ்டி எளிய மக்கள் மட்டுமே வாக்களிப்பதால் சரியான தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியும்.

(26) தொகுதி மறு சீரமைப்பு :
தமிழ்நாட்டில் தொகுதி மறு சீரமைப்பு என்னும் போர்வையில் எளிய மக்களின் வாக்குகளைச் சிதறடித்து மூர்க்க சாதிகளின் வாக்குபலத்தை பெருக்க கள்ளத்தனங்களில் தமிழக அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. தென் தமிழகத்தில் எளிய மக்கள் எண்ணிக்கை குறைவதாகச் சொல்லி ஒரு தொகுதியை கலைக்கத் திட்டமிடுகிறது. மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு இது தண்டனையாகக் கூடாது. தமிழகத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்தியதற்கு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளை இழந்த வரலாற்றை தமிழக ஆளுங்கட்சியும், எதிர்கட்சிகளும் உணர வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு, சீரமைப்பாக மட்டும் அமைய வேண்டும்; சீரழிப்பதாக அமையக்கூடாது.

(27) தேர்தல் தில்லுமுல்லுகள் தடுக்கப்பட வேண்டும்:
தென் தமிழகத்தில் எளிய மக்கள் வாக்களிப்பது தடுக்கப்படுகிறது. வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்படுகின்றன. வாக்குச் 15 சாலஷ் அதிகாரிகளை அரசியல் அடாவடிக் கும்பல் மிரட்டுவதற்கு மின்னணு வாக்குப் பெட்டி எளிய சாதனமாகிவிட்டது; தேர்தல்போது தென் தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளாக இசுலாமியர், கிருத்துவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்; இராணுவம் அழைக்கப்பட்டு தேர்தல்கால பாதுகாப்புகள் செய்யப்பட வேண்டும்.

VI. இந்தியர், தமிழர் பொது நலன்கள்:
(28) மொழிப் பிரச்சனை அரசியலாகிறது :
தமிழ் நாட்டில் மொழிச் சிக்கலைப் பயன்படுத்தி எளிய மக்களின் சிக்கல்களைப் பின் தள்ளவும். தமிழகத்தில் சாதிக் கொடுமைகளை மறைக்க உதவும் பதுங்கு குழிகளாகவும் பயன்படுத்த சாதி வெறி கும்பல் திரை மறைவு செயல்களை செய்து வருகிறது. எளிய மக்களை மீண்டும் ஏமாற்ற ‘புதிய தலைவர்கள்” உருவாகியுள்ளனர். கல்லூரிகள், பள்ளிகள், தொழிற்சாலைகள், திரைப்படங்கள் மற்றும் பல நிறுவனங்கள் சாதிப் பெயர்களைத் தாங்கி இழிந்த வெளிப்பாடுகளைக் காட்டுவது சட்டப்படி நீக்கப்பட வேண்டும். தமிழுக்கெதிரான சாதிய அடையாளத்தை புதிய தமிழகமும், எளிய மக்களும் எதிர்க்கும்; தமிழைச் சாதி, சமய, அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்துவதையும் எதிர்க்கும்

“தமிழ் வளர்ப்பது ஒன்று
சாதி ஒழிப்பு மற்றொன்று”

என்ற பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை மக்கள் மறக்கக் கூடாது. சாதி என்பதே தமிழுக்கு அன்னிய சொல். தமிழை சாதி மற்றும் சமயமாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். தமிழின் பெயரால் இதுவரை நடந்த முயற்சிகள் எளிய மக்களைப் புறந்தள்ளவும், முற்போக்கு இயக்கங்களில் சாதி வெறியர்கள் ஊடுருவல் செய்வதில் முடிந்துள்ளன. எளிய மக்களுக்கு இடஒதுக்கீடு கூடாது எனவும், ‘சோறு’ என்னும் சொல்லையே ‘பள்ளு, பறைமொழி’ எனவும், எளிய மக்கள் சமத்துவத்திற்கு அவசரப்படக் கூடாது எனவும் தமிழறிஞர்கள் பேசி சாதி வெறியைக் காட்டுவது தமிழுக்கும், தமிழர்களுக்கும் தீமை செய்வதாகும். தமிழ் புகழ்பாடும் ஒரு மடாதிபதி ஒரு குறிப்பிட்ட சாதி மட்டுமே தமிழகத்தை ஆள வேண்டுமென பேசினார்.

இதைத் தமிழ் அறிஞர்கள் கண்டு கொள்ளவில்லை. தமிழ் அறிஞர்கள் நேரிய வழியில் பொதுவான நிலைபாடு மேற்கொண்டு, அனைத்து மக்களையும் திரட்டி ‘தமிழ்ப் பெயர்’, ‘தனித் தமிழ்’, ‘அறிவியல் தமிழ்’, ‘தமிழில் வழிபாடு’ ஆகிய முயற்சிகளில் ஈடுபட ‘புதிய தமிழகம்’ வேண்டுகிறது. சாதி ஒழிப்பு உணர்வை ஊட்டி தமிழ், தமிழர் உயர்வுக்கு ‘புதிய தமிழகம்’ என்றும் உதவும் என இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

(29) தென் மொழிகளுக்குப் புது வரி வடிவம் :
தென் மாநில மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள். இம்மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. தொழில் காரணமாக இம்மாநிலங்களிடையே இடம் பெயரும் நிலை உருவாகியுள்ளது. இம்மொழி மக்களிடையே பண்பாட்டு, மொழி ஒற்றுமை இருந்தபோதிலும் மொழிகளின் வரி வடிவம் பெருந்தடையாக விளங்குகிறது… வரி வடிவங்கள் தோன்றுமுன்னரே, மொழி பேச்சு வழக்கில் இருந்ததை மொழி இயலார் சுட்டுகின்றனர். தென்னிந்தியாவின் நான்கு தென் மொழிகளுக்கும் பொதுவான ஒரு வரிவடிவத்தை உருவாக்குவது ஒரு வரலாற்று தேவை என இம்மாநாடு கருதுகிறது. ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்குரிய ரோமன வரிவடிவத்தில் ஏற்ற சில மாற்றங்களைச் செய்து புதிய வரிவடிவத்தை உருவாக்க தென்மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ
a aa e ee u uu a aa I o oo

(30) கர்நாடக சிறையில் விசாரணையின்றி தமிழர்கள்:
கர்நாடக அரசு தமிழ் அறிஞர்கள் பேராசிரியர் நெடுஞ்செழியன், அறிஞர் குணா மற்றும் 300க்கும் மேற்பட்ட தமிழர்களை விசாரணையின்றி சிறையில் அடைத்து வைத்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. கன்னட வெறியர்களை நிறைவு செய்ய கர்நாடக அரசு நடத்தும் இத்துன்ப நாடகம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். மத்திய அரசு கர்நாடக அரசின் ‘அரசு பயங்கர வாதத்தை’ தடுத்து நிறுத்த வேண்டுமென இம்மாநாடு இந்தியப் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறது.

(31) விவசாயம் நசுக்கப்படுகிறது / காப்புரிமைச் சட்டம்:
உழவுத் தொழிலை மேம்படுத்திவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, ‘உலகமயமாக்கல்’, பெரும் பேரிடியாக வந்துள்ளது. ‘உலக வர்த்தக அமைப்பில்’ விவசாயத்தை இணைத்து, கையகப்படுத்த சதி நடந்து வருகிறது. அமெரிக்காவின் விவசாயிக்கும், ஐரோப்பாவின் விவசாயிக்கும் 60 சதவிகித மானியம் அளிப்பதும், இந்திய விவசாயிக்கு மானியத்தை வெட்டுவதும் இந்த சதியின் திட்டங்கள். இதன் மூலம் இந்திய சந்தையில் ‘அந்நிய விவசாய உற்பத்திகள்’ மட்டுமே நிற்க முடியும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காப்புரிமைச் சட்டத்தின் மூலம் நமது நாட்டு வேம்பு, நெல், மஞ்சள், கருவேப்பிலை, கத்தரிக்காய் ஆகியவை அந்நியப் பொருட்கள் என அறிவிக்கப்படும். ‘உயிர்காக்கும் மருந்துகள்’ வானுயர நிலையில் விலைகளை உயர்த்தும். இதுபோன்ற நியாயமற்ற சர்வ தேச வர்த்தக ஒப்பந்தங்களை, மாநாடு கண்டிப்பதுடன், எதிர்த்துப்போராட மக்களை அழைக்கிறது.

(32) சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு:
சமூக, பொருளாதார, கல்வி ஆகியவற்றில் பின்தங்கிய நிலையில் உள்ள மதச்சிறுபான்மையினரான முஸ்லீம் மற்றும் கிருத்துவ மக்கள், தங்களது ‘இட ஒதுக்கீட்டிற்காக’ போராடி வருகிறார்கள். அதை முழுமையாக மாநாடு ஏற்று, உடன்போராட உறுதி மேற்கொள்கிறது.

(33) தொடர் போராட்டங்கள்:
எளிய மக்களின் மண்ணுரிமை மீட்பு மத்திய, மாநில அரசு மூன்றாண்டுகளுக்குள் நிரப்புதல் பின்னடைவு பணியிடங்களை தனியார் துறையில் / தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு விகிதாசார இடஒதுக்கீடு அனைத்து மத்திய, மாநில துறைகளிலும் பொறுப்புள்ள பதவிகளில் எளிய மக்கள் அறிஞர்களுக்கு இடமளிப்பது புதிய தீண்டாமை கொடுமைகளை முற்றாக ஒழிப்பது எளிய மக்களின் மேன்மை / அடையாளங்களை இழிவுபடுத்தும் நிலையை ஒழிப்பது எளிய பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசின் உதவித் தொகைகளை உயர்த்துவது தமிழை வளர்க்க சாதி ஒழிப்பு உயர்வை செழுமைப்படுத்தி தமிழ் – தமிழர் நலன் காக்க இழிந்த சாதிய வெளிப்பாடுகளைத் தடுப்பது, சாதி, சமயம் சாரா நிலைக்கு (Secularism) தமிழைக் கொண்டு செல்லவும் ஏற்ற வலுவான போராட்டங்களை வகுத்து, அறிவித்திட ‘புதிய தமிழகம்’ தலைவர் அவர்களுக்கு இம்மாநாடு உரிமை வழங்குகிறது.

கோவை
14.04.2005 (க.கிருஷ்ணசாமி)