![]()
1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புக்கு பிறகு, சிறுபான்மை சமூகமான இஸ்லாமிய மக்கள் பெரும்பாலானோர் தமிழக காவல்துறையால் தாக்குதலுக்கும், கடும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். கோவையில் இஸ்லாமிய மக்கள் மஞ்சள் பை கொண்டு கடைக்குச் சென்று காய்கறிகள் கூட வாங்க முடியாத அளவிற்கு ’தீவிரவாதிகள்’ என முத்திரை குத்தி ஆயிரக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் மீது பொய் வழக்கு புனைந்து சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள். யாரும் கேட்பாரற்று கிடந்த சூழ்நிலையில் எங்களின் தொப்புள் கொடி உறவான இஸ்லாமியச் சமூகத்தினர்களுக்கு பாதிப்பு என்று சொன்னால் ஒவ்வொரு இஸ்லாமியர் வீட்டிலும் பாதுகாப்பிற்காக புதிய தமிழகத்தினர் ஆயுதங்களுடன் இருப்பார்கள் என்று டாக்டர் அய்யா அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.
சிறுபான்மையினத்தவர்களின் பாதுகாவலனாக தங்களைக் கூறிக்கொண்ட கருணாநிதியால் அன்று இஸ்லாமியர்களை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்டது தான் பொடாச் சட்டம். இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் பலருக்கு அந்த சட்டத்தையும், அதனால் அவர்கள் பெற்றோர்கள் அடைந்த துன்பங்களும், துயரங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த சட்ட விரோத பொடாச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டமன்றத்தில் கடுமையாகக் குரல் கொடுத்துப் போராடி, எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்திற்குள்ளேயே தர்ணா செய்ததால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டார்கள்; சில இஸ்லாமிய இயக்கங்களை இணைத்து மக்கள் மன்றத்திலும் பல கட்ட போராட்டங்களை புதிய தமிழகம் கட்சி முன்னெடுத்தது.
அதன் தொடர்ச்சியாக ”100 கண்டன பொதுக்கூட்டங்கள் முடிவதற்குள் பொடா சட்டத்தை ரத்து செய்யவேண்டும்; இல்லையேல் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என வலியுறுத்தி பொடா சட்டத்தை திரும்பப் பெற ’100 கண்டன விளக்கப் பொதுக்கூட்டங்கள்’ புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு எச்சரிக்கப்பட்டது.
முதல் கண்டன பொதுக் கூட்டமானது மதுரையில் தொடங்கி நெல்லை –கடையத்தில் நடைபெற்ற 56 வது பொதுக்கூட்டம் நிறைவடைவதற்குள் டாக்டர் அய்யா அவர்களின் போராட்டத்திற்கு பணிந்து தமிழக அரசு பொடா சட்டத்தை திரும்பப்பெற்றது. 1998-99 காலகட்டங்களில் திமுக ஆட்சியின் கீழ் ’முஸ்லிம்கள்’ என்றாலே ’தீவிரவாதிகள்’ என முத்திரை குத்தி இஸ்லாமியர்கள் ஒடுக்கப்பட்ட போது புதிய தமிழகம் கட்சியின் அரவணைப்பால் மட்டும் தான் அவர்களால் பாதுகாப்புடன் நிம்மதியாக இருக்க முடிந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
அதுமட்டுமின்றி, 2006 ஜனவரி 27 ஆம் தேதி இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தனி இட ஒதுக்கீடு வழங்க புதிய தமிழகம் கட்சி கோரிக்கை வைத்த து குறிப்பிடத்தக்கது.
