

![]()
மூர்க்கப் போக்கிரித்தனமான வன்முறைக்கு இலக்கான தென்தமிழகத் அடித்தன தமிழ் மக்கள் திராவிட இயக்கங்கள், பொதுவுடமை இயக்கங்கள் இன்னபிற அரசியல் அமைப்புக்களின் அரவணைப்புக்கு ஏங்கினர். வாக்குவங்கி அரசியலை மையமாகக் கொண்டு செயல்படும் தலைவர்கள் காயம்பட்ட மக்களுக்கு காகிதங்களில் கண்ணீர் அறிக்கை தந்தனர்; கையறுநிலை பாடல்கள் எழுதினர். வேறுவழியில்லாத அடித்தன தமிழ் மக்கள் 1982 ஆம் ஆண்டு மீனாட்சிபுரத்தில் மதம் மாறினர். தொடர்ச்சியாக இராமநாதபுரம், போடி, புளியம்பட்டி என வன்கொடுமைக்காக நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மதம் மாறத் தலைப்பட்டனர். மதமாற்றம் என்பது விரும்பி நிகழ வேண்டியது. அது போராடத் துணிவற்றவர்களின் பாதுகாப்பிடமாக இருக்கக்கூடாது. சாதிய வன்முறைகளுக்கு சரியான பதிலடி எதிரியின் போர் உத்திகளையே நாமும் கையாள வேண்டும் என்ற தலைவரின் வழிகாட்டுதலால் தென் தமிழகத்தில் ‘தாக்கினால் திருப்பித் தாக்குவோம்’ புதிய உத்தி பின்பற்றப்பட்டது. மதமாற்ற முழக்கங்கள் மறைந்து போயின.

