செப்டம்பர் மாதம் பாரதீய தலித் பேந்தர் இயக்கம் சார்பில் கோவை வ.உ.சி. திடலில் இரண்டாவது மாநில மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் தலித் வாய்ஸ் ஆசிரியர் வீ.டி.ராஜசேகர் உள்ளிட்ட அன்றைய தலித் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
பாரதீய தலித் பேந்தர் இயக்கத்தின் சார்பில் மாநில அளவில் சூழ்நிலைகளுக்கேற்ப தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டு, முற்போக்கு இயக்கங்களின் ஆதரவுடன் போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டது.
நவம்பர் 10, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட கோவை குனியமுத்தூர் சங்கீதா மருத்துவமனையைத் திறந்து வைத்தார். அந்நிகழ்வில் திரு மு.கண்ணப்பன், திரு சி.டி.தண்டபாணி, திரு மு.ராமநாதன், திரு பொங்கலூர் பழனிசாமி மற்றும் தி.மு.க. முன்னணி பிரமுகர்கள் பங்கேற்றார்கள்.
டிசம்பர் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திருமதி. சவீதா அம்பேத்கர் திருப்பதி தொகுதியிலும், திரு. ராம்தாஸ் அத்வாலே மகாராஷ்டிராவிலும் போட்டியிட்டனர், தலைவர் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் ஆதரவுடன் பொள்ளாச்சி தொகுதியிலும் போட்டியிட்டு நூலிழையில் வெற்றி வெற்றி வாய்ப்பை இழந்தார்கள்.
