புதிய தமிழகம் கனவான்களே! இன்று மார்ச் 6 – மாலை 6 நினைவில் கொள்ளுங்கள் ! இல்லந்தோறும் புதிய தமிழகம் பூஞ்செடியைப் பதியமிட புறப்படுங்கள்!

அறிக்கைகள்
s2 470 Views
  • 1995 மார்ச் 6 - தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மதுரை தெப்பக்குளம் மாநாடு
  • 1995 மார்ச் 6 - தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மதுரை தெப்பக்குளம் மாநாடு
Published: 06 Mar 2022

Loading

புதிய தமிழகம் கனவான்களே!

இன்று மார்ச் 6 – மாலை 6 நினைவில் கொள்ளுங்கள் !

இல்லந்தோறும் புதிய தமிழகம் பூஞ்செடியைப் பதியமிட புறப்படுங்கள்!

அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், அளவு கடந்த சாதிய ஒடுக்கு முறைகள், மிதமிஞ்சிய அரசியல் ஆதிக்கங்கள் என அனைத்திற்கும் ஆட்பட்டுக் கிடந்த ஒரு சமூகம் ஒன்றுபட்டு ஒற்றை தலைமையின் கீழ் ஒருமித்த குரலாக எழுந்து முதன்முதலாக முரசு கொட்டிய பொன்னாள்நன்னாள் தான், ’1995 மார்ச் 6 – தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மதுரை தெப்பக்குளம் மாநாடு’.

தமிழகத்தில் கடந்த 500 வருடங்களுக்கு மேலாக கோலோச்சிய அனைத்து வித சமூக கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திடவும், ’திராவிடம்ஒரு மாயை, சமூகநீதிஒரு போலிஎன்பதை அம்பலப்படுத்தி வலுவான ஒரு மாற்று அரசியல் சித்தாந்தத்துடன்புதிய தமிழகம் கட்சியை வடிவமைப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் முன்னோடியாக விளங்கியது அம்மாநாடு தான். அதில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம் தான் 1996-ல் ஒட்டப்பிடாரம் தொகுதியில் நாம் தனித்து நின்று வெற்றி வாகை சூடுவதற்கும், இந்திய மண்ணில் மிகப்பெரிய உழவர் சமுதாயம் அரசியலில் அடிகோலுவதற்கும், தேவேந்திரகுல வேளாளராக அடையாளப்படுத்துவதற்கும், அதை மீட்டெடுப்பதற்கும் அடிப்படையாக அமைந்தது.

புதிய தமிழகம் கட்சி அதிகாரப்பூர்வமாக 1997 டிசம்பர் 15-ல் தொடங்கப்பட்டாலும், அதன் உண்மையான தோற்றுவாய்  1995 மார்ச் 6 தான். 27 வருடங்கள் நிறைவுற்று 28 வருடத்தில் பயணிக்கிறோம். பல காட்டாறுகளையும், கடும் குளிர் மலைச்சிகரங்களையும், சதுப்புநில காடுகளையும் கடந்து வந்ததைப்போல எவ்வளவோ இன்னல்களையும் தொல்லைகளையும் துன்பங்களையும் தாங்கி இன்றும் இமயமாக நிமிர்ந்து நிற்கிறோம்; புத்தம்புது மலராக மலர்ந்து நிற்கிறோம்.

தமிழகம் எனும் பரந்துபட்ட தோட்டத்தில் பல்வகை  பூஞ்செடிகளை பதியமிட்டு, ’புதிய தமிழகம்எனும் பூந்தோட்டத்தை விரிவுபடுத்த நாம் வீறுகொண்டு எழுவோம். திராவிட மாயையும்வாடையும் மறைந்து புதிய தமிழகத்தின் நிதர்சனமும், நறுமணமும் தமிழ் மண்ணையும் தாண்டிபாரத தேசம்எங்கும் பரவிடட்டும்!

நேற்று (05.03.2022) கோவையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுவில் அறிவுறுத்தியதன் படி, இன்று மார்ச் 6 – மாலை 6 மணி முதல் புதிய தமிழகம் எனும் பூந்தோட்டத்தில் ஒவ்வொரு பாத்தியிலும்ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு இல்லத்திலும் புதியபுதிய பூச்செடிகளை பதியமிடச் செல்லுங்கள்!

 

தமிழகமே புதிய தமிழகமாய் பூத்துக்குலுங்கட்டும்!

புதிய தமிழகத்தின் நறுமணம் நாடெங்கும் பரவட்டும்.!

கடமை ஆற்றுங்கள்..!

கட்டளையை நிறைவேற்றுங்கள்.!

நன்றி வணக்கம்..!!

 

டாக்டர்..கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,

நிறுவனர்தலைவர்,

புதிய தமிழகம் கட்சி.

06.03.2022.