புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடியன்குளத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
334 Views
![]()
தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கொடியன்குளத்தில் கடந்த 1995ம் ஆண்டு நிகழ்ந்த கலவர நிகழ்வு தொடர்பான நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் பெருமாள், மருதன்வாழ்வு ரவி, தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாநில துணை பொதுச்செயலாளர் கிருபைராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் மன்சூர்அலி, மாநில மகளிரணி செயலாளர் சரஸ்வதி, மாநில இளைஞர் அணி குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு கடந்த காலங்களில் நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் கடந்த 1995ம் ஆண்டு நடைபெற்ற விரும்பத்தகாத அந்நிகழ்வு குறித்தும் அதில் இருந்து மீண்டு வந்தது குறித்தும், அந்த நேரத்தில் மிகவும் உறுதுணையாக இருந்த நிறுவன தலைவர் அய்யா டாக்டர் அவர்களின் மக்கள் பணி குறித்தும், அவருக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.
இதில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர்கள் முருகன்(மேற்கு), மனோகரன்(கிழக்கு), இளைஞர் அணி மகாராஜன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் செய்திருந்தார்.







